Dec 21, 2016

மதங்களுக்கிடையில் ஒற்றுமை சாத்தியமா?


உலகில் மதங்களை பின்பற்றும் மதவாதிகள் அதாவது ஆத்திக வாதிகள் தங்களுடைய மதங்களை பின்பற்றியும் அதேவேளை ஒற்றுமையாகவும் வாழ்வது சாத்தியமா என்றால் நான் இஸ்லாமியன் என்ற முறையில் சாத்தியம் என்றுதான் கூறுவேன்.

சாத்தியம் என்று கூறியவுடன் இன்னோர் மதத்தை ஒருவேருக்கொருவர் பின்பற்றி வாழ சொல்கிறானோ என்று நீங்கள் புருவங்களை உயர்த்தலாம். அதிர்ச்சி வேண்டாம் அதை நான் முன்வைக்க போவதில்லை ...

உங்களுடைய மதங்களை நீங்கள் சரியாக பின்பற்றினாலே போதும் என்பதுதான் இதன் சுருக்கம் ..அதாவது எல்லா மதங்களிலும் கூறப்பட்ட மத சகிப்பு தன்மை அந்த மதத்தை சார்ந்தவனுக்கே சரியாக ஊட்டப்படுமேயானால் போதுமானது.


சரி வாருங்கள் இஸ்லாமியர்களுக்கு இஸ்லாத்தில் மத சகிப்பு தன்மை உள்ளதா என்றும் இஸ்லாமியர்கள அல்லாதவர்களுக்கு முதலில் இஸ்லாத்தின் கொள்கைகள் சிலவற்றையும்  கூறுகிறேன் ... பின்பு சாத்தியமா எனவும் கூறுகிறேன் .முதலில் அனைத்து மதத்தவரும் பொதுவான ஒரு உடன்பாட்டின் கீழ் வருவோம் .அது என்ன ?..இஸ்லாத்தை பொறுத்தவரை ..

1   ➤   ஒருவனே இறைவன் அவன் அன்றி வேறு இறைவன் இல்லை.

#சாத்தியம்   =  உலகில் உள்ள அனைத்து பிரதான மதங்களும் ஒருவனே                                             இறைவன் என்று கூறுகிறது.

#பிரச்சினை  =  ஆனால் அந்த இறைவன் யார் என்பதில்தான் பிரட்சினை 

#தீர்வு        =  அந்த ஒரு இறைவன் யார் என்று ஆராய்வதும் மற்றைய மதங்கள் சொல்லக்கூடிய இறைவனை நீங்கள் வெறுத்தாலும் அவர்கள் உரிமை என்று நீங்கள் விட்டு கொடுப்பதும்.


2    அவ்வாறு வேறு இறைவனை வணங்குவானாக இருந்தால் அவன் இஸ்லாமியன் இல்லை ..

#சாத்தியம்   =  இது அனைத்து மதங்களும் கூறுவதுதான் ஒவ்வொருவரும் தங்களுக்கான கடவுளை வணங்குகிறார்கள் .அந்த கடவுளை வணங்காதவர் அந்த மதத்தை சார்ந்தவர்கள் அல்லர்.

#பிரச்சினை  = என்னுடைய கடவுளே உண்மையானவர் என்று கூறுவது.

#தீர்வு              = நான் எப்படி என்னுடைய இறைவன்தான் உண்மையானவன் என்று ஏற்று இருக்கிறேனோ அதே போன்றுதான் அவனும் அவனுடைய கடவுளை நம்புகிறான் என்று அவர்களுடைய தெரிவு சுதந்திரத்துக்கு மரியாதை கொடுப்பது.   

  ⃟ யாருடைய மனதையாவது இந்த படம் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் இது முகநூளில் இருந்து பெறப்பட்டது                           

 3      உலகுக்கு அனுப்பப்பட்ட இறுதி தூதர் முஹம்மத் (அவருக்கு இறைவன் சாந்தி அளிப்பான) 

#சாத்தியம்   =  உலகில் எல்லா மதங்களும் இறைவன் புறத்தில் இருந்து  அவனுடைய மார்க்கத்தை தெளிவு படுத்த தூதர்களை கடவுள்                                   ஆப்பியுள்ளார்  என்று சொல்கிறது.அதில் இறுதியாகவும் ஒரு                                     தூதர் வருவார் என்று கூறியுள்ளது .

#பிரச்சினை = அந்த இறுதி தூதர் யார் என்பதே பிரச்சினை 

#தீர்வு             = அந்த தூதர் யார் என்று ஒவ்வொரு மதத்தவரும் ஆராய்வது அவர்களது தலையாய பொறுப்பாகும்.ஏனன்றால் இறைகோட்பாட்டில் அனைத்து மதங்களும் ஒன்றாக இருக்கிறபோது தூதர்களின் மார்க்கம் வேறாக இருக்க சாத்தியமா என்ன?                                   

4       அவர் இறைவன் புறத்தில் இருந்து கூறியவை மட்டுமே இஸ்லாமாகும் அது தவிர்ந்து ஏனையவை இஸ்லாம் அல்லாத  ஒன்றாகும்.

#சாத்தியம் =    இறுதி தூதர்கள் எதை தனது கொள்கையாக சொன்னார்களோ அதை பின்பற்றி நடப்பதுதான் அந்த மதத்தை பின்பற்றுவோருக்கான கடமையாகிறது.எனவே இறை கோட்பாடு ஒன்றாக இருக்கிற போது மார்க்கம் வேறாக இருக்காது என்று நம்புவது சிறந்தது.

#பிரட்சினை = ஒருவேளை ஒவ்வொரு மதம் சொல்லும் இறுதி தூதர்களும்  வேறுபட்டால் ???

#தீர்வு          = அவ்வாறு இறுதி தூதர்கள் வேறுபடுவதாக இருந்தால்ஒவ்வொரு மதத்திலும் கூறப்பட்ட இறுதி தூதர்களுக்கான அடையாளங்கள் வேறு பட்டு இருக்க வேண்டும். ஏனன்றால்அனைத்து விதத்திலும் பொருந்த கூடிய தூதர்கள் பலர் உலகில் இருக்கவே முடியாது..ஆனால் நான் அறிந்த வகையில்அனைத்து மதங்களும் கூறிய இறுதி தூதருக்கான அடையாளங்களை இறைதூதரான முஹம்மத் (அவருக்கு  இறைவன் சாந்தி அளிப்பான) அவர்களையே நான் காண்கிறேன் .நீங்கள் இல்லை வேறு ஒருவர் இருக்கிறார் என்றால் அவரை தாராளமாக முன்வைக்கலாம் .. ஆதாரங்களுடன் அதை பிறர் ஏற்று கொள்ளாவிட்டாலும் அதற்கான காரங்களை கேட்டு அவருக்கு நீங்கள் அழகிய முறையில் தெளிவு படுத்த  முனையலாம் ...ஏட்காவிட்ட்டால் அவருடன் அனுசரித்து  செல்வது சிறந்தது 

  இஸ்லாத்தை யார் சரியாக பின்பற்றுகிறாரோ அவர் மாத்திரமே சுவர்க்கம் புக முடியும்..பாவம் செய்த முஸ்லிமாக இருந்தாலும் அவர் இறைவனால் நரகத்தில் தண்டிக்க படுவார்

#சாத்தியம் =   இஸ்லாத்தின் நிலைப்பாடு இது .இது குறித்து ஏனைய மதங்ககள்  என்ன சொல்கின்றன என்று நான் அறியவில்லை. இல்லை உங்கள் மதம் இப்படி ஒன்றை கூறவில்லை எந்த மதத்தை பின்பற்றினாலும் நல்லறங்கள் செய்தால் இறைவன்சுவர்க்கம் புக செய்வான் இல்லையென்றால் தண்டிப்பான் என்று நீங்கள் கூறுவீர்களேயானால் . அதுவும் வரவேற்க தக்கதுதான் ... ஆனால் இப்படி ஒன்று உங்கள் மதத்தில் இருந்தால் நீங்கள்  ஏனைய மதங்களை பார்த்தோ ஏனைய மதங்ககளின்               வளர்ச்சியை பார்த்தோ கோபபட வேண்டிய அவசியமே இருக்காது .உங்கள் மதம் தான் ஏனைய மதங்கள் குறித்தும் அதை பின்பற்றுபவர்கள் குறித்தும் அலட்டிக்காத போது அந்த மதத்தை பின்பற்றும் நீங்களும் அப்படித்தானே சகிப்பு   தன்மையுடன் இருப்பீர்கள் ..

இல்லை இல்லை எங்கள் மதமும் எங்கள் இறைவனை   பின்பற்றாதவர்களை தண்டிப்பதாக சொல்கிறது என்றால் இஸ்லாத்தின் கோட்பாடுகளோடு நீங்கள் முரண்பட வேண்டய அவசியமும் இல்லை ..

#பிச்சினை =     பல மதங்களும் இதே கோட்பாட்டை கூறுகின்ற போதுதான்          பிரட்சினை ஏற்படுகிறது ..என்னுடைய கொள்கையை பின்பற்று என்று அப்போதுதான் நரகத்தில் இருந்து பாதுகாப்பு பெற முடியும் என உங்கள் மதங்ககள் பால் ஏனையோரை அழைக்க   நேரிடுகிறது ..

#தீர்வு       =      தம்மதத்தின் கோட்பாடுகளை கோட்பாடுகளை ஆராய்ந்து அது       மனித சமூகத்தை ஒற்றுமை படுத்தி மனிதனை மனிதத்துடன் வாழ வைக்கிறதா என்று முதலில் பாருங்கள் ..அது போருந்தவில்லையா விட்டுவிடுங்கள் ... இல்லை இறைவன் கூறிய வழிகாட்டல் பிழையாகாது என்று நீங்கள் நம்புகிறீர்களா அப்படிஎன்றால் அது தொடர்பான சட்டங்கள் இறைவனிடம்இருந்து கிடைத்தது தானா இல்லை மனிதர்கள் பெரியோர்கள்   அறிஞ்சர்களின் கருத்துக்களும் கலந்துள்ளனவா என பாருங்கள் .    இறைவன் தராத ஏனைய மனித சட்டங்கள் உலகுக்கு பொருந்தாது உலகுக்கான சட்டத்தை இயற்ற இறைவனே  பொருத்தமானவன் என்று    அனைத்து மதத்தவர்களும் நம்புவதே  சார்பானதுதான் ..  

6     இஸ்லாம் இறைவனால் வழங்கப்பட்ட மார்க்கம் அதுவே இந்த உலகுக்கு பொருத்தமானது 

#சாத்தியம் =   எல்லா மதங்களும் தங்களுடைய மதத்தையும்  இந்த  கோட்பாடுகளையே  சொல்கின்றன என்பதை கானமுடிகிரது 

#பிரட்சினை = உலகுக்கு பொருத்தமான சிறந்த ஒன்றை காண்கின்ற போது  அதை ஏனையா மனித குலமும் ஏற்க வேண்டும் என்றே  அனைத்து மதவாதிகளினதும் ஆசையாக இருக்கிறது .. அதை ஏற்க செய்யவதில் எடுக்கும் முனைப்புத்தான் பிரட்சினை.

#தீர்வு       =     முதலில் தங்களது மதத்தை பின்பற்றுபவர்களுக்கு அந்த    மதத்தை முழுதாக கற்று கொடுத்து தெளிவு படுத்த வேண்டும்  .தங்களுடைய மதங்களில் ஒரு தெளிவு வந்ததன் பிற்பாடு   ஏனைய மதங்களை பற்றிய அறிவினை தங்களில் மதத்தினை பின்பற்றுவோருக்கு எத்தி வைக்க அந்தந்த மதம் சார்ந்த அறிந்ஜர்களை நியமித்து கற்று கொடுக்க செய்ய வேண்டும் ...          இந்த முடிவினை அனைவரும் தாரளாமாக ஏற்பீர்கள் ..ஏன்றால்   தங்களுடைய மார்க்கத்தை கற்பவன் நிச்சயம் அதன் பால்     ஈர்க்கப்பட்டு அதை பின்பற்றுவான் என்பதே அனைவரினதும்  அவாவாகும் ..எனவே அதன் பின் மதங்களை கற்பவர்கள் எந்த மதத்தை பின்பற்ற எண்ணுகிறார்களோ அதை பின்பற்ற தாராள அனுமதி வளங்கப்பட வேண்டும் ... 

குறிப்பு :           இங்கு குறிப்பிட்ட அனைத்துமே அனைத்து மதங்களுகுமே      பொருந்த கூடிய தீர்வுதான் .... எனவே அதை விடுத்து ஒரு மதத்தோடு ஏனைய மதம் ஒத்து போகாத சில கோட்பாடுகளும்  உள்ளன அதில் நுழைந்து தலையிடுவது கூடாது ஆபத்தும் கூட .. நான் சிலை வணங்க வில்லை எனவே நீ வாங்காதே என்று  கூறுவதோ அல்லது நான் அசைவமாக இருக்கிறேன் எனவே நீயும் சைவத்துக்கு மாறு என்றோ அவர்களின் மதத்துகேன்று இருக்கிற  விடயங்களில் தலயிட கூடாது அது அவர்களின் உரிமை ... 

இவற்றை எல்லாம் உண்மையில் இந்த மதவாதிகள் ஏட்பார்களாக இருந்தால் இந்த உலகத்தில் ஏது பிரட்சினை ... சுருக்கமாக சொல்லப்போனால் சகிப்புத்தன்மையுடன் மதத்தை அனுகுவானாக இருந்தால் ஏனைய மதத்தை ஏட்பானாக இருந்தால் உலகில் அமைதி நிலவாமல் இருக்குமா... இப்படிப்பட்ட மத சகிப்பு தன்மையினை எந்த மதம் கூறுகிறதோ அந்த மதத்தை பின்பற்றுபவர்கள் அதை தெளிவாக எடுத்துரைத்தால் அமைதியான வழியிலேயே வாழலாம் ... இஸ்லாம் இதையல்லாம் அங்கீகரிக்கிறதா ? அதாவது இஸ்லாத்தில் மத சகிப்பு தன்மை உள்ளதா ? அதற்கான பதில் இந்த  குர் ஆன் வசனக்களே போதுமானது ...

ஸூரத்துல் காஃபிரூன்(காஃபிர்கள்) 

மக்கீ, வசனங்கள்: 6

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
109:1    قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ
109:1(நபியே!) நீர் சொல்வீராக: அல்லாஹ்வை நிராகரிப்போரே !
109:2   لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ
109:2நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
109:3   وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
109:3இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
109:4   وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ
109:4அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
109:5   وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
109:5மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
109:6   لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ
109:6உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”


50:45   نَّحْنُ أَعْلَمُ بِمَا يَقُولُونَ  ۖ وَمَا أَنتَ عَلَيْهِم بِجَبَّارٍ  ۖ فَذَكِّرْ بِالْقُرْآنِ مَن يَخَافُ وَعِيدِ
50:45அவர்கள் கூறுவதை நாம் நன்கறிவோம் - நீர் அவர்கள் மீது நிர்ப்பந்தம் செய்பவரல்லர், ஆகவே (நம்) அச்சுறுத்தலை பயப்படுவோருக்கு, இந்த குர்ஆனை கொண்டு நல்லுபதேசம் செய்வீராக. 

10:104   قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِن كُنتُمْ فِي شَكٍّ مِّن دِينِي فَلَا أَعْبُدُ الَّذِينَ تَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ وَلَٰكِنْ أَعْبُدُ اللَّهَ الَّذِي يَتَوَفَّاكُمْ  ۖ وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ
10:104“மனிதர்களே! நீங்கள் என் மார்க்கத்தில் சந்தேகம் கொண்டிருந்தால், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவர்களை நான் வணங்கமாட்டேன்; ஆனால் உங்களை மரிக்கச் செய்யும் அல்லாஹ்வையே நான் வணங்குகிறேன், நான் முஃமின்களில் ஒருவனாக இருக்குமாறு ஏவப்பட்டுள்ளேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

31:15   وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا  ۖ وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا  ۖ وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ۚ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
31:15ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேண்டாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக - பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்.”

Blog Archive

Translate