Dec 23, 2016

மரணம் பற்றி அல்குர்ஆன்




இறைவனை நோக்கிய உள்ளங்களே! இறைவனுடைய ரூஹினை பெற்று கொண்ட மனித வர்க்கமாகிய நாங்கள் ,ஏனைய உயிர்களை போன்றே நிச்சயம் ஒருநாள் மரணித்துதானே ஆக வேண்டும். 

சரி நாம் ஒருக்காலும் ஏனைய உயிரினங்களுடன் எம்மை ஒப்பிட்டு பேசுவதை ஏற்று கொள்ள மாட்டோம்."சுய சிந்தனை அற்ற மானிதா"  என்று எம்மை அழைக்காமல் எம்மை காப்பது ,நாம் சுய சிந்தனையுடன் செயற்படும் செயலை வைத்துதானே.


அப்படியானால் மரணம் என்ற ஒன்று எதற்கு என்று நீ சிந்திக்க வேண்டாமா?? 



மரணத்தில் இருந்து நீ மட்டும் விதிவிலக்கா என்ன?

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது.
 (அல்-குர்ஆன் 21:35) 

எத்தனையோ விடயங்களில் சாத்தித்து காட்டிய இன்றைய அறிவியல் மரணத்துக்கு மற்றும் விடைகண்டபாடில்லை இனியும் காணப்போவதும் இல்லை.அப்படிஎன்றால் இந்த உலக்கு மரணம் ஏதோவொன்றை சொல்ல நினைக்கிறது அது என்ன?

சரி,எதற்காக மரணம் என்ற ஒன்றை இறைவன் படைத்தான்? என்றும்  கேட்கலாம். 

பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள்(மரணம் மூலம்) மீட்கப்படுவீர்கள். 
(அல்-குர்ஆன் 21:35) 

 மனிதனுக்கு ஏற்படும் நல்லது கேட்டதற்கும் மரணத்திற்கும் எவ்வளவு பெரிய நெருக்கம் இருக்கின்றது என்பதற்கான விடையை அல்குர்ஆன் எவ்வளவு அழகாக எடுத்துரைக்கின்றது என்பதை மேல் உள்ள வசனம் தெளிவு படுத்துகிறது. எமது வாழ்க்கை ஒரு சோதனைக்களம் அந்த சோதனைகள் எமக்கு ஏற்படும் நன்மை மூலகமாகவும் தீங்குகள் மூலமாகவும் ஏற்படும்.எனவே அவற்றை இறைவன் கூறியபடி வெற்றி கொள்ள வேண்டியது எமது கடமை.

இந்த சோதனை இந்த வாழ்க்கையை எப்போது மரணம் தொடுகிறதோ அப்போது அவற்றின் அவகாசம் முடிந்துவிடுகிறது.அந்த மரணம்  
  
‘நீங்கள் எங்கிருந்த போதும் உங்களை மரணம் அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே!
(அல்குர்ஆன் 4: 78)


இந்த மரணத்தினை தீர்மானிக்கும் உரிமை எமக்கு இல்லை.அதற்கான நேரத்தினை தீர்மானிக்கும் பொறுப்பை நாம் கையில் எடுத்தாலோ அல்லது எனக்கு இந்த வேலைதான் மரணம் வரும் என்று உறுதியாக ஒருவன் நம்பிநாளோ அல்லது வாயார சொன்னாலோ நிச்சயமாக அவன் இறைவனுடைய அதிகாரத்தில் கை வைத்துவிட்டான்.

அல்லாஹ்வின் விருப்பமின்றி எவரும் மரணிக்க முடியாது. இது நேரம் குறிக்கப்பட்ட விதி  
(அல் குர்ஆன் : 3:145)   
எனவே எந்நேரமும் எங்களை மரணம் தொடும் அதற்கு நாம் ஒவொரு நிமிடமும் அல்ல ஒவ்வொரு வினாடியும் தயாராக இருக்க வேண்டும்.

நல்லோராக இருக்கும் நிலையில் அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றி, ‘உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! நீங்கள் செய்தவற்றின் காரணமாக சொர்க்கத்தில் நுழையுங்கள்! என்று கூறுவார்கள்    
(அல்குர்ஆன்: 16:32)




Blog Archive

Translate