Apr 30, 2011



கம்ப்யூட்டர் கேள்வி-பதில்

E_1297049942.jpeg



கேள்வி: டேப்ளட் பிசி குறித்து அதிகம் எழுதப்படுகிறது; நாங்களும் கேள்விப்படுகிறோம். சுருக்கமாக, இன்றைய கம்ப்யூட்டர்கள் தராத, டேப்ளட் பிசிக்களில் கிடைக்கும் வசதிகள் என்ன என்று சொல்ல முடியுமா?
-ஆர். சந்திரப் பிரகாஷ், சோழபுரம்
பதில்: இந்த வசதிகள் குறித்து, தாங்கள் கூறுவது போல, கம்ப்யூட்டர் மலரில் பல கட்டுரைகள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து எழுதிக் கொண்டிருக் கிறோம். வரும் காலத்தில் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பெரிய மாற்றத்தை டேப்ளட் பிசிக்கள் கொண்டுவர இருக்கின்றன. அவற்றின் பயன்கள் பலவாகும். நீங்கள் கேட்பது போல சுருக்கமாகச் சொல்வதென்றால், எங்கும் எளிதாக எடுத்துச் செல்லும் தன்மை, மொபைல் போனாகவும் (3ஜி மற்றும் 4ஜி வசதியுடன்) பயன்படுத்தும் வசதி, வை-பி இணைப்பு, இ-புக் ரீடராகச் செயலாற்றும் திறன், கேம்ஸ் விளையாட உதவிடும் சாதனம், ஆன்லைனில் செய்தி, பாடல், படம் பார்க்கும் வசதி, சமுதாய தளங்களை அணுகும் வசதி எனப் பல அம்சங்களை அடுக்கலாம். நீங்கள் இதற்கெல்லாம் தயாராகிக் கொள்ளுங்கள். அல்லது இப்போதே இங்கு கிடைக்கும் டேப்ளட் பிசிக்களை வாங்கிப் பயன்படுத்துங்கள்.


F  -  வரிசை
தமிழ்  English பொருள்
ஃபாதிய்  FAADI மற்றவர்களுக்காக தம் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் 
ஃபாளில்  FAADIL பிரபலமான - பிரசித்தி பெற்ற 
ஃபாஇஜ்  FAAI Z வெற்றியாளார் 
ஃபாயித்  FAAID நன்மை - இலாபம் 
ஃபாஇக்  FAAIQ தலைசிறந்தவர் - உயர்ந்தவர் 
ஃபாலிஹ்  FAALIH செழுமையானவர் 
ஃபாரிஸ்  FAARIS குதிரை வீரன் - குதிரை யோட்டி 
ஃபாருக்  FAAROOQ தீமையில்லிருந்து நன்மையை வேறுபடுத்தி காட்டுபவர். இரண்டாவது கலிபா உமர் (ரலி) அவர்களின் பட்டப்பெயர் 
ஃபாதிஹ்  FAATIH வெற்றியாளர் 
ஃபாதின்  FAATIN வசீகரமான 
ஃபஹ்த்  FAHD சிறுத்தை 
ஃபஹீம்  FAHEEM விவேகமுள்ள 
ஃபஹ்மிய்  FAHMI அறிந்தவன் 
ஃபைஸல்  FAISAL மத்தியஸ்தர் - நீதீயாளர் 
ஃபரஜ்  FARAJ மகிழ்ச்சி - ஆறுதல் 
ஃபரஜல்லாஹ்  FARAJALLAH அல்லஹ்வினால் அருளப்படும் மகத்தான உதவி 
ஃபரீத்  FAREED தனித்த - ஒற்றுமை - விந்தையான 
ஃபர்ஹான்  FARHAAN சந்தோஷமான - உற்சாகமான 
ஃபதீன்  FATEEN தெளிவான - ஆர்வமுள்ள - மதி நுட்பமுள்ள 
ஃபத்ஹிய்  FAT'HI வெற்றியாளர் 
ஃபவ்வாஜ்  FAWWAAZ வெற்றியாளர் 
ஃபவ்ஜ்  FAWZ வெற்றி 
ஃபவ்ஜிய்  FAWZI வெற்றியாளர் 
ஃபய்யாள்  FAYYAAD தாராள மனமுடையவன் 
ஃபிக்ரிய்  FIKRI தியானிப்பவர் - சிந்தனை செய்பவர் 
ஃபுஆத்  FUAAD ஆன்மா 
ஃபுர்கான்  FURQAAN சாட்சியம் - நிருபணம

தொலைபேசியும் இஸ்லாமிய பெண்களும்



முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளயும், நம் சகோதரிகளை

நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை

முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே

செய்ய வேண்டும்



சமீபத்தில் என்னைக் கலங்க வைத்த ஒரு செய்தி, எனக்கு படித்துத் தந்த ஒரு

பிரபல்யமான ஆசிரியர் ஒருவரின் மகள் ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஒரு பையனுடன் ஓடி

விட்டதுதான். அந்த இரவு முழுவதும் என்னால் நித்திரை கொள்ள முடியாமல்

போய்விட்டது.

எம‌து ஊரில் இப்ப‌டி எல்லாம் ந‌ட‌க்குது என்று என் உற‌வின‌ர் ஒருவ‌ருட‌ன்

மிக‌வும் க‌வ‌லைப்ப‌ட்டு பேசிய‌ போது அவ‌ர் சொன்ன‌ விட‌ய‌ங்க‌ளைக்

கேட்டால்...இலங்கை முழுவதும் என்றுமில்லாத வகையில் தற்சமயம் அதிக அளவில்

முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும்

நிகழ்ந்து வருகின்றது.



இத‌ற்கான‌ முழுப்பொறுப்பையும் பெற்றோர் ஏற்க‌ வேண்டி இருக்கிற‌து.



*இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்:*



1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவணிக்க தவறுவது.

2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற
சாதனங்களை வாங்கி கொடுப்பது.

3. மொபைல் ஃபோனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன
எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவணிக்காமல் இருப்பது.

4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க
அல்லது கண்டிக்க தவறுவது.

5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி.
வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழிதவற வைப்பது.

6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது. (உதாரனம். வீட்டில் தனி அறை,
தனி படுக்கை என என்ன செய்தாலும் தெறியாதவாரு நாமே அவர்களுக்கு வசி செய்து
கொடுப்பது)

7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம் வைப்பது
அல்லது அவர்கள் இஸ்ட்டப்படி உரிய கண்கானிப்பின்றி வாழ அனுமதிப்பது
8. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது. பெண்களை தனியாக
ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள்
இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது.

Apr 17, 2011





வைரங்கள் அதிக பளபளப்பு கொண்டவை; அதேபோன்று விலையும் அதிகம். பட்டை தீட்டப்படாத வைரம் மிகவும் கடினமானது. இயற்கையான வைரம் உருவாவதற்கு அதிக வெப்பமும், அழுத்தமும் தேவைப்படுகிறது. பூமியில் மிகச்சில வைரச்சுரங்கங்களே உள்ளன. உலகில் உள்ள வைரங்களில் 90 சதவீதம் தென் ஆப்பிரிக்காவில் இருந்து கிடைக்கிறது.
மற்ற எல்லா ரத்தினங்களை விடவும் வைரத்தின் படிகக் கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. கார்பன் அணுக்களின் கட்டமைப்பே அதனை மிகக் கடினமாக மாற்றியுள்ளது. இது எண்முக வடிவம் அல்லது ஆறு சதுர பக்கங்களைக் கொண்டிருக்கும். திரவத்தில் கரையாது, கொழுப்பில் ஒட்டும், வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்தாது போன்ற பண்புகள் வைரத்துக்கு உண்டு.

மிதக்கும் பனி மலை


பலரும் டைட்டானிக் என்னும் ஆங்கிலப் படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பார்கள். டைட்டானிக் என்பது ஒரு கப்பலின் பெயர். சுமார் 2000 பேரை ஏற்றிக் கொண்டு இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்குச் சென்று கொண்டிருந்த அக்கப்பல் மீது மிதக்கும் பனி மலை மோதியதால் அக்கப்பல் மூழ்கி விட்டது. 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இரவு அக்கப்பலுக்கு இக்கதி ஏற்பட்டது. இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது அந்த சினிமாப் படம்.
அக்கால கட்டத்தில் டைட்டானிக் மிகப் பெரிய சொகுசுக் கப்பலாகக் கருதப்பட்டது. அது மூழ்கவே மூழ்காத கப்பல் என அப்போது பெருமையாகப் பேசப்பட்டது. ஆகவே ஆபத்து ஏற்பட்டால் தப்புவதற்கான உயிர் காக்கும் படகுகள் அவ்வளவாகத் தேவையில்லை என்று கருதி 20 படகுகளே அக்கப்பலில் எடுத்துச் செல்லப்பட்டன.
போதுமான எண்ணிக்கையில் உயிர் காப்புப் படகுகள் எடுத்துச் செல்லப்பட்டிருந்தால் உயிர் சேதம் அதிகமாக இருந்திராது. அக்கப்பல் மூழ்கியதில் 1523 பேர் உயிரிழந்தனர். 705 பேர் உயிர் தப்பினர்.
மிதக்கும் பனி மலை (ஒஸ்ரீங் க்ஷங்ழ்ஞ்) என்பது மிதக்கும் பனிக்கட்டியாகும். பொதுவில் அவை பல கிலோ மீட்டர் நீள அகலம் கொண்டவை. மிதக்கும் பனி மலைகள் வடிவில் பிரம்மாண்டமானவை. எனினும் கடலில் மிதக்கும் ஒரு பனிமலையின் உண்மை வடிவம் கண்ணில் தென்படாது.

Apr 16, 2011

 

அல்குர்ஆன் கூறும் சூராவளிக் காற்று பற்றிய எச்சரிக்கை

 

 












உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? - அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான் (அல்குர்ஆன் 2:266)

இங்கு நாம் சிந்திக்க கூடிய அறிவியல் உண்மை என்ன? என்பதையும் சூராவளிகளின் வகைகளையும் அவற்றின் வேகத்தையும் பற்றி ஆராய்ந்து பார்ப்போம் வாருங்கள்!

சூராவளி என்பது என்ன?

சூராவளி என்பது ஒருவகை சுழலும் காற்றாகும். இந்த காற்றின் கட்டுக்கடங்காத வேகத்தில் சுழன்றபடியே மேகங்களை தொட்டுக் கொண்டு நிலப்பரப்பை சூரையாடி பயிர்களையும், வீடுகளையும் நாசம் செய்துவிடும் ஆற்றல் கொண்டவைகளாகும். சூராவளி என்பது ஒரு புனல் (Funnel) வடிவத்தில் காணப்படும் பயங்கரமான சூராவளியின் மேற்பகுதி மேகத்தை தொட்டு கிணறு போன்ற அகன்று காணப்படும் மேலும் இதன் வால் பகுதி கூர்மையான வாள் போன்று வலைந்து காணப்படும். இவற்றிற்கு ஆங்கில்தில் டொர்னடோ (Tornado) என்று பெயர்.

சூராவளியின் வேகம்
பல்வேறு சூராவளிகள் குறைந்த பட்ச வேகமாக மணிக்கு 40 மைல்கள் என்ற வேகத்தில் சுழன்றடிக்கும் (அதாவது 64 கி.மீ வேகம்) மற்றும் அதிக பட்சமாக மணிக்கு 110 மைல்கள் என்ற வேகத்தில் சூழன்றடிக்கும் (அதாவது மணிக்கு 177 கி.மீ வேகம்) இந்த வேகம் சுமார் 250 அடி (75 மீட்டர்) நிலப்பரப்பை ஒரு வினாடியில் தாக்கும் வல்லமை படைத்தது.
சூராவளிகள் சுழல ஆரம்பிக்கும் போது எதிர்பாராத விதமாக காற்றின் வேகம் 300 மைல்களாக இருந்தால் இந்த சூராவளிகள் குறைந்தபட்சடம் 1 மைல் (அதாவது 1.6 கி.மீ) பரப்பளவு கொண்ட நிலப்பரப்பை ஒரு வினாடியில் துவம்சம் செய்து அப்படியே மெல்ல நகர்ந்து பல மைல்கள் நகர ஆரம்பிக்கும். இவைகள்தான் சூராவளிகள் அதாவது வானத்தின் சுனாமி என்று கூட கூறலாம்.

சூராவளி – டொர்னடோ எவ்வாறு உருவாகிறது



ஒரு குறிப்பிடட திசையிலிருந்து வீசக்கூடிய குளிர்ந்த காற்று மற்றும் வரண்ட காற்றும் அதன் எதிர்திசையிலிருந்து வீசக்கூடிய சூடான காற்று மற்றும் ஈரப்பதமான காற்றுடன் மோதுகிறது. இப்படிப்பட்ட பல்வேறு வகையான காற்றுகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது அதிலிருந்து ஒரு வெளிப்படும் விசையே சூராவளி எனப்படுகிறது. இந்த மோதல்கள் அதிகமான அளவு நடைபெறும் போது அந்த சூராவளிக்கு பலம் கூடுகிறது. இதற்கு பெயர்தான் டொர்னடோ எனப்படுகிறது.





உறவினரது இல்லம்.., உறவினரோடு அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள சாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது. அப்பொழுது தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்..,

ஹேய்.. அதைத் தொடாதே..! என்று கூறி விட்டு தந்தை உறவினரோடு பேசிக் கொண்டிருப்பதில் மும்முரமாகி விடுகின்றார்.

பின்னர் சற்று நேரம் கழித்துப் பார்க்கின்றார்.., குழந்தை மீண்டும் அந்த தட்டுகளை கையில் எடுத்துக் கொள்கின்றது.., மறுபடியும்.., ஹேய் அதைத் தொடாதே.., எடுக்காதேன்னு சொல்றேன்ல..,

மீண்டும் தந்தை உறவினரோடு பேச்சைத் தொடர்கின்றார்.., சற்று நேரம் கழித்து திரும்பிப் பார்க்கின்றார்.., மீண்டும் அந்தக் குழந்தை அதையே தான் செய்து கொண்டிருக்கின்றது.

தந்தை அதனைப் பார்த்து எதுவுமே சொல்லாமல் மீண்டும் பேச்சில் மும்முரமாகி விடுகின்றார்.

இதுவே பல சந்தர்ப்பங்களில் நடைபெறக் கூடிய நிகழ்வுகள்..! குழந்தைகளுக்கு உத்தரவிட முடியும், அவர்கள் அதனைக் கேட்காத பொழுது, மீண்டும் அதே உத்தரவை இட்டுக் கொண்டே இராமல், குழந்தையைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும்.

இது மாதிரியான சூழ்நிலைகள் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

சிலர் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிலர் அடிக்க வேண்டும், சிலர் அது குழந்தை தானே என்று விட்டு விட வேண்டும், குழந்தையிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றும் கூறுவார்கள்.

உண்மையில் நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும், இதுவே சமூகத்;தின் எதிர்பார்ப்புமாகும்.

பெற்றோர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும், குணாதிசயங்கள் இருக்கும். இருப்பினும், குழந்தைகளை இப்படித் தான் நடத்த வேண்டும் என்ற பொதுவானதொரு வழிமுறை இருக்கின்றது. அதனைப் பின்பற்றினால் ஒழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்க முடியும். நாம் நினைத்தமாதியெல்லாம் குழந்தைகளை வளர்த்து விட முடியாது. திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை வழிநடத்தும் பொழுது, நல்லபல விளைவுகள் ஏற்படும்.



1. எதையும் செய்யத் துவங்கும் பொது நீ என்ன கூறுவாய்?

எதையும் செய்யத்துவங்கும்போது நான் பிஸ்மில்லாஹ் அல்லாஹ்வின் திருநாமத்தால் என்று கூறி ஆரம்பிப்பேன்.

2. எதையேனும் செய்ய நாடினால் நீ என்ன கூறுவாய்?

நான் இன்ஷா அல்லாஹ்- அல்லாஹ் நாடினால் என்று கூறுவேன்.

3. எதையும் பாராட்டும் போது?

மாஷா அல்லாஹ்- எல்லாம் அல்லாஹ்வின் நாட்டமே என்று புகழுவேன்.

4. பிறர் எதையும் புகழும் போது நீ என்ன கூறுவாய்?

சுப்ஹானல்லாஹ் -அல்லாஹ் மிகத் தூய் மையானவன்என்று கூறுவேன்.

5. இன்பத்திலும் துன்பத்திலும் நீ யாரை அழைப்பாய் ?

நான் யாஅல்லாஹ் -அல்லாஹ்வே என்று இறைவனைமட்டும் அழைப்பேன்.

6. பிறருக்கு நீ எவ்வாறு நன்றி கூறுவாய்?

ஜஸாகல்லாஹ் -அல்லாஹ் நற்கூலி கொடுப்பானாக என்று கூறுவேன்.

7. தும்மினால் நீ என்ன கூறுவாய் ?

தும்மினால் நான் அல்ஹம்துலில்லாஹ்- எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுவேன்.

8. பிறர் தும்மி அவர் அல்லாஹ்வைப் புகழுந்தால் நீ என்ன கூறுவாய் ?

யர்ஹமுகல்லாஹ் -அல்லாஹ் அருள் பாவிப்பானாக என்று அவருக்காக பிராத்திப்பேன்.

9. நாம் தும்மி நமக்காக பிறர் துஆச் செய்தால் நீ என்ன கூறுவாய் ?

யஹ்தீகு முல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலகும்.அல்லாஹ் உம்மை நேர்வழிப் படுத்தி உமது எல்லா செயல்களையும் சீர்படுத்துவானாக என்று கூறுவேன்.

10. நீ செய்த தவறை நினைத்து வருந்தும் போது என்ன கூறுவாய் ?

அஸ்தஃபிருல்லாஹ் -அல்லாஹ் பிழை பொறுப்பானாக என்று கூறுவேன்.

11. நாம் சத்தியம் செய்தால் எவ்வாறு கூறவேண்டும் ?

வல்லாஹி பில்லாஹ் -அல்லாஹ்வின் மீது ஆணையாக என்று கூறவேண்டும்.

12. யார் மீதும் அன்பு பாராட்டும் போது நீ எவ்வாறு கூறுவாய் ?

லிஹூப்பில்லாஹ் -அல்லாஹ்வின் அன்பிற்காக என்று கூறுவேன்.

13. பிறரிடமிருந்து விடை பெறும் போது எவ்வாறு நாம் கூறவேண்டும் ?

ஃபீஅமானில்லாஹ்- அல்லாஹ்வின் அடைக்கலத்தில் என்று கூறி விடைபெறுவேன்.

14. நமக்கு ஏதும் பிரட்சினைகள் ஏற்பட்டால் நாம் என்ன கூறவேண்டும் ?

தவக்கல்த்து அலல்லாஹ் -அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தேன்.

15. நாம் விரும்பியது நடந்தால் என்ன கூறவேண்டும் ?

ஃபதபாரகல்லாஹ் -அல்லாஹ் உயர்வானவன் என்று கூறவேண்டும்.

Apr 15, 2011

மைக்ரோசாப்ட் வழங்கும் Microsoft Mathematics 4.0

நீங்கள் கல்லூரியில் படிப்பவரா? கணிதத்தின் மேல் உங்களுக்கு விருப்பம் அதிகமா? இல்லை கணிதத்தை வெறுக்கும் ஆளா நீங்கள்?

கணிதம், இயற்பியல் சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு லினக்ஸ் இயங்குதளத்திற்கான ஏராளமான இலவச மென்பொருட்கள் உள்ளன. அந்த வரிசையில் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது Mathematics 4.0 என்னும் மென்பொருளை இலவசமாக வழங்குகிறது.

2D, 3D, கணித சமன்பாடுகள், இயற்பியல் சமன்பாடுகளை மிக எளியமுறையில் தீர்ப்பதற்கு இதைப் பயன்படுத்தலாம்.

மைக்ரோசாப்ட் வழங்கும் இலவச மென்பொருள் : Microsoft Mathematics 4.0

கல்லூரி மாணவர்கள் தங்கள் வீட்டுப் பாடத்தை மைக்ரோசாப்ட் மேதமடிக்ஸ் மூலம் உடனே செய்து முடிக்கலாம்.

புதியவர்கள் தங்கள் கணித, இயற்பியல் அறிவை விருத்தி செய்வதற்கும் இதைப் பயன்படுத்தலாம்.

அல்ஜிப்ரா முதல் முக்கோணவியல் வரை ஏராளமான அம்சங்கள் இதில் உள்ளன.

DOWNLOAD LINK

மைக்ரோசாப்ட் வேர்ட் மற்றும் ஒன்நோட் இவற்றுக்கான நீட்சியாகவும் இந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம். Source
Download As PDF

Apr 7, 2011





1. வீரம் உள்ள செயல் எது என்று கூறலாம் ?

பிறர் செய்யும் தீங்கை மன்னித்தல் வீர செயல் ஆகும்.

(காண்க அல்குர்ஆன் 31:17ஃ 42:43)

சிறந்த வீரம்-கோபத்தை அடக்கிக் கொள்ளுதல்.(நபிமொழி)

2. மறுமையில் இறைவனை சந்திக்க நாம் என்ன செய்யவேண்டும் ?

நற்செயல்களை செய்தலும், தன் இறைவனுக்கு இணைவைக்காமல் இருப்பதும். (காண்க அல்குர்ஆன்18:110ஃ29:4

3. இறைவனின் திருப்தி பெற்றோரின் திருப்தியில் உள்ளதா ?

தந்தையின் திருப்தி :

இறைவனின் திருப்தி தந்தையின் திருப்தியில் உள்ளது இறைவனின் கோபம் தந்தையின் கோபத்தில் உள்ளது.

(அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு அம்ர்) தப்ரானி.

தாய்க்கு நன்மை செய்வது :

இறைதூதர் அவர்களே நல்லது செய்யப்படத்தகுதியுடையவர் யார்? எனக் கேட்டேன். உனது தாய் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்யப்படத் தகுதியுடையவர் யார்? என்று கேட்டேன் உனது தாய் என்று கூறினார்கள்.(மீண்டும்) நல்லது செய்யப்பட தகுதியுடையவர் யார்? எனக்கேட்டேன். உன் தாய் தான் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்ய தகுதியானவர் யார்? எனக் கேட்டேன் உனதுதந்தை அடுத்து (உன்) நெருங்கிய உறவினர்கள், அதற்கும் அடுத்து உறவினர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள் என தன் பாட்டனார் மூலம் தந்தை வழியாக பஹ்ஷ் இப்னுஹகிம் அவர்கள் அறிவிக்கிறார்கள் (ஆதாரம்) திர்மிதி, அபு தாவூத்,

மேலும் காண்க அல்குர்ஆன் 17:24ஃ 31:15)

Apr 6, 2011






1 . ஹிஜ்ரத் என்றால் என்ன?

வாழும் நாட்டில் கொடுமை பொறுக்க முடியாமல் இறைவனுக்காக நாடு துறந்து அன்னிய நாட்டில் தஞ்சம் புகுவது.

2 . இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் ஸஹாபாக்கள் எந்தநாட்டில் தஞ்சம் புகுந்தார்கள்? 

ஹபஸா (அபிசீனியா)

3 . ஹிஜ்ரா காலண்டர் எப்படி தொடங்கியது?

முஹம்மத்நபி(ஸல்)அவர்கள் மக்கா நகர் துறந்து, மதீனா நகர் நோக்கி ஹிஜ்ரத் சென்ற நிகழ்விலிருந்து.

4 . ஹிஜிரி (அரபி) மாதங்கள் பெயர் என்ன?

1. முதல் மாதம் முஹர்ரம்,

2. இரண்டாம் மாதம் ஸபர்,

3. முன்றாம் மாதம் ரபிவுல் அவ்வல்,

4, நான்காம் மாதம் ரபிவுல் ஆகிர்,

5, ஐந்தாம் மாதம் ஜமாஅத்துல் அவ்வல்,

6. ஆறாம் மாதம் ஜமாஅத்துல் ஆகிர்,

7. ஏழாம் மாதம் ரஜப்,

8. எட்டாம் மாதம் ஷாஃபான்,

9. ஒன்பதாம் மாதம் ரமழான்,

10. பத்தாம் மாதம் ஷவ்வால்,

11. பதினோன்றாம் மாதம் துல் கஅதா,

12. பனிரெண்டாம் மாதம் துல் ஹஜ்.

Blog Archive

Translate