Dec 15, 2016

பார்வையைப் பாதுகாப்போம்



கே.எம்அப்துந் நாஸிர்கடையநல்லூர்.

ண்மையானஇறைநம்பிக்கையாளர்களிடம் இருக்கவேண்டிய பல்வேறு பண்புகளை அல்லாஹ்திருமறைக் குர்ஆனில் விவரித்துள்ளான்.அவற்றில் மிக முக்கியமான ஒன்றுதான்நம்முடைய பார்வையைப் பாதுகாப்பதாகும்.இந்த மனித சமுதாயம் ஒழுக்கவீழ்ச்சியடைவதற்கு மிக முக்கியமான ஒரு காரணி பார்வையை தவறானமுறையில் பயன்படுத்துவதாகும்இதன் காரணமாகத்தான்இறைநம்பிக்கையாளர்களான ஆண்களும் பெண்களும்  தங்களின் பார்வையைத்தாழ்த்திக் கொள்ள வேண்டும் என இறைவன் தன் திருமறையில்கட்டளையிடுகின்றான்.


(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும்தமதுகற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக்கூறுவீராகஇது அவர்களுக்குப் பரிசுத்தமானதுஅவர்கள் செய்வதைஅல்லாஹ் நன்கறிந்தவன்.
      தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! (அல் குர்ஆன்24 : 3031)

தங்களின் பார்வையைப் பாதுகாத்துக் கொள்வதுதான்இறைநம்பிக்கையாளர்களுக்கு பரிசுத்தமானது என மேற்கண்ட வசனம்தெளிவுபடுத்துகிறதுஏனென்றால் இன்றைக்கு விபச்சாரம்கற்பழிப்பு போன்றபல்வேறு பெரும்பாவங்களுக்கு அடிப்படையாகத் திகழ்வது பார்வைதான்.
      இன்றைய உலகில் பத்ரிகைகள் வாயிலாகவும்ஆபாசப் புத்தகங்கள்வாயிலாகவும்தொலைக்காட்சிப் பெட்டிகளின் வாயிலாகவும்,இணையதளங்களின் மூலமாகவும் பல்வேறு விதமான ஆபாசக் காட்சிகள்வெளியிடப் படுகின்றனஅழகிய பெண்களின் அறைகுறை ஆடையுடன் கூடியகாட்சிகள் காட்டப்படுகின்றன.
சாதாரண செய்திப் பத்ரிகைகள் முதல் வார இதழ்மாத இதழ் போன்ற எந்த ஒருபத்ரிகையும் இதற்கு விதிவிலக்கல்லஅனைத்து இதழ்களிலும் இது போன்றஆபாசப் படங்கள் வெளியிடப்படுகின்றனஆபாசப் படங்களை வெளியிடாதபத்திரிகைகளின் விற்பனை கூட குறைந்து விடுவதால் விற்பனைக்காகவே இதுபோன்ற காட்சிகளை அதிகம் வெளியிடுகின்றனர்.
கிரிக்கெட் என்ற விளையாட்டை சாதரணமாகப் பார்ப்பதில் தவறில்லை என்றநமக்கு நாமே ஒரு காரணத்தைக் கூறிக் கொண்டு அதனை பார்த்து வருகின்றோம்.ஆனால் அந்த விளையாட்டின் மத்தியில் அரை குறை மங்கைகளை ஆடவிட்டுகாட்டுகின்ற காட்சிகளும் அதிகம் இடம்பெறுகின்றனஇடைஇடையே காட்டப்படும்விளம்பரங்களில் கூட ஏராளமான அரைகுறை காட்சிகள் காட்டப்படுகின்றன.இவற்றைப் பற்றி நாம் யாரும் சிந்திப்பதில்லை.
      இளைஞர்கள் பலர் இது போன்ற தவறான காட்சிகளின் காரணமாக தங்களுடையமனதை அலைபாய விடுகின்றனர்இதனால் அவர்களுடைய கல்வித் தரம்குறைகிறதுவாழ்க்கையில் எந்த ஒரு துறையிலும் ஈடுபாடில்லாமல் தவறானபாதையில் சென்று தங்களுடைய எதிர்கால வாழ்வையே சீரழித்து விடுகின்றனர்.இன்றைய உலகில் மிக வேகமாகப் பரவி வரும் எய்ட்ஸ் போன்ற கொடியநோய்களுக்கு அடிப்படைக் காரணம் தவறான உடலுறவுதான் என்றாலும்அத்தகைய தவறான உறவைத் தூண்டக்கூடிய மிக முக்கிய காரணி ஆபாசக்காட்சிகளைப் பார்ப்பதுதான்.
இதனால்தான் நம்முடைய இஸ்லாமிய மார்க்கம் தவறான காட்சிகளைபார்ப்பதைக் கூட விபச்சாரம் என்கிறது.

நபி (ஸல்அவர்கள் கூறினார்கள் விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கைஇறைவன் எழுதியுள்ளான்அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்மஉறுப்பின் விபச்சாரம் மட்டுமல்ல கண்ணும் நாவும் கூட விபச்சாரம்செய்கின்றன.) கண் செய்யும் விபச்சாரம் (தவறானபார்வையாகும்நாவுசெய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும் பேச்சாகும்). மனம் ஏங்குகிறதுஇச்சை கொள்கிறதுமர்ம உறுப்பு இவையனைத்தையும் உண்மையாக்குகிறதுஅல்லது பொய்யாக்குகிறது.
அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலிநூல் : புகாரி (6243)

மனதைக் கெடுக்கக்கூடியது தவறான பார்வைதான் என்பதை நபி (ஸல்அவர்கள்மேற்கண்ட ஹதீஸில் மிக அற்புதமாக விளக்கியுள்ளார்கள்தவறான பார்வைதான்அதிகமான பாவங்களுக்கு அடிப்படையாகத் திகழ்வதால் நபி (ஸல்அவர்கள்அதற்குரிய அனைத்து வாசல்களையும் அடைப்பதற்கு நமக்குவழிகாட்டியுள்ளார்கள்அவற்றில் சிலவற்றை நாம் காண்போம்.

உரிய வயதில் திருமணம் செய்தல்

ஆண்களோ பெண்களோ அவர்கள் பருவ வயதை அடைந்து பாலியல் ரீதியானநாட்டங்கள் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டால் அவர்களுக்கு திருமணம் செய்துவைப்பது பெற்றோர்கள் மீது கடமையாகும்இன்றைக்கு நம்முடைய சமுதாயத்தில்திருமணம் என்பது ஒரு பாரதூரமான காரியமாக ஆக்கப்பட்டுவிட்டதுவரதட்சணைபோன்ற கொடுமைகளின் காரணமாக பெண்களுக்குரிய திருமண காலம்தாமதமாகின்றதுஅது போன்று பல ஊர்களில் ஆண்களுக்கு வேண்டுமென்றேதிருமணகாலம் தாமதிக்கப்படுகிறதுஅண்ணன் திருமணத்தில்நாட்டமில்லாதவறாக இருந்தால் அவருக்கு திருமணமாகின்ற வரை அவருடன்பிறந்த சகோதரர்களுக்கும் திருமண காலங்கள் பிற்படுத்தப்படுகின்றனஇதனால்பலர் மன நோய்களுக்கு ஆளாகின்றனர்தவறான பல காரியங்களைச்செய்வதற்குத் துணிகின்றனர்.
இது போன்ற நிலை ஏற்பட்டு விடக்கூடக்கூடாது என்பதற்காகத்தான் நபி (ஸல்)அவர்கள் பின்வருமாறு கட்டளையிடுகின்றார்கள்.

நபி (ஸல்அவர்கள் கூறினார்கள் இளைஞர்களே உங்களில் யார்திருமணத்திற்கான செலவினங்களுக்கு சக்தி பெற்றிருக்கிறாரோ அவர்திருமணம் செய்யட்டும்ஏனெனில் திருமணம் (அந்நியப் பெண்களைப்பார்ப்பதை விட்டும்பார்வையைக் கட்டுப்படுத்தும்கற்பைக் காக்கும்யார்அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும்அது அவரதுஇச்சையைக் கட்டுப்படுத்தும்
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் (ரலிநூல் : புகாரி (1905)
மேற்கண்ட செய்தியில் உரிய வயதில் தகுதியுடையவர்கள் திருமணம் செய்வதும்,அதற்கு இயலவில்லையென்றால் இறையச்சத்தை வளர்க்கும் நோன்பைநோற்பதும் நம்முடைய தவறான பார்வைக்குத் திரையாக அமையும் என்பதை நாம்தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

வீதியில் செல்லும் போது பார்வையைத் தாழ்த்துதல்

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்ட வசனங்களில் இறைநம்பிக்கைகொண்ட ஆண்களும் பெண்களும் வீதிகளில் தங்களுடைய பார்வைகளைத்தாழ்த்தியவர்களாத்தான் செல்ல வேண்டும் என்ற இறைக்கட்டளையை நாம்பார்த்தோம்பார்வையைத் தாழ்த்தி வீதிகளில் நடந்து செல்வது வீதிக்கும் செய்யவேண்டிய கடமை என நபி (ஸல்அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.இன்றைய காலங்களில் நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்தபெண்களில் ஒரு பகுதியினரும் மிக அதிகமாக மாற்று சமுதாயப் பெண்களும்தங்களுடைய அலங்காரங்களையும்அங்கங்களையும் வெளிப்படுத்திக்கொண்டுதான் வீதியில் நடமாடுகின்றனர்பல இஸ்லாமிய நாடுகளிலும் இதுபோன்ற அவல நிலைதான் நீக்கமற நிறைந்து காணப்படுகிறதுஇந்நிலையில்உண்மையான முஃமின்கள் தங்களுடைய பார்வைகளைத் தாழ்த்திக் கொண்டால்தான் தங்கள் மனதை அசுத்தத்திலிருந்து பரிசுத்தப்படுத்த முடியும்தங்களுடையபார்வைகளை உலாவ விடுபவர்கள் நிச்சயம் பல விதமான மனோ இச்சைகளுக்குஅடிமையாவதிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது.பின்வரக்கூடிய நபி (ஸல்அவர்களின் உபதேசத்தை நாம் பின்பற்றி நடந்தால்நம்முடைய மனதை வழிகெடுவதிலிருந்து நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
''நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிருங்கள்'' என்று நபி (ஸல்அவர்கள்கூறினார்கள்'' மக்கள் ''எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிரவேறுவழியில்லைஅவைதாம் நாங்கள் பேசிக்கொள்கின்ற எங்கள் சபைகள்''என்று கூறினார்கள்நபி (ஸல்அவர்கள் '' அப்படியென்றால் நீங்கள் அந்தசபைகளுக்கு வந்துதான் ஆகவேண்டுமென்றால் பாதைக்கு அதன்உரிமையைக் கொடுத்து விடுங்கள்'' என்று கூறினார்கள்மக்கள் '' பாதையின்உரிமை என்ன?'' என்று கேட்டார்கள்நபி (ஸல்அவர்கள் '' பார்வையைத்தாழ்த்திக் கொள்வதும், (பாதையில் செல்வோருக்கு சொல்லாலோ,செயலாலோதுன்பம் தராமல் இருப்பதும்ஸலாமுக்கு பதிலுரைப்பதும்,நன்மை புரியும்படி கட்டளையிடுவதும் தீமையிலிருந்து தடுப்பதும் அதன்உரிமைகள் ஆகும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலிநூல் : புகாரி ( 2466)
      மற்றொரு அறிவிப்பில் '' அழகிய பேச்சைப் பேசுதலும்'' பாதைக்குச் செய்யவேண்டிய கடமையாகக் கூறப்பட்டுள்ளது.
அறிவிப்பவர் : அபூ தல்ஹா (ரலிநூல் முஸ்லிம் ( 4020 )

அந்நியப் பெண்களை விட்டும் பார்வையைத் திருப்புதல்


இஸ்லாமிய எந்த முறையில் எதற்காக அந்நியப் பெண்களை பார்ப்பதற்குஅனுமதியளிக்கிறதோ அதுவல்லாத முறைகளில் அந்நியப் பெண்களை நாம்பார்ப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்பெண்கள் யார் யார் முன்னிலையில்பர்தா அணியாமல் இருக்க இஸ்லாம் அனுமதிக்கிறதோ அவர்களைத் தவிர மற்றஅனைத்து ஆண்கள் முன்னிலையிலும் தங்களை மறைத்துதான் இருக்க வேண்டும்.
அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றைவெளிப்படுத்த வேண்டாம்தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக்கொள்ளட்டும்தமது கணவர்கள்தமது தந்தையர்தமது கணவர்களுடையதந்தையர்தமது புதல்வர்கள்தமது கணவர்களின் புதல்வர்கள்தமதுசகோதரர்கள்தமது சகோதரர்களின் புதல்வர்கள்தமது சகோதரிகளின்புதல்வர்கள்பெண்கள்தங்களுக்குச் சொந்தமான அடிமைகள்,107 ஆண்களில்(தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீதுநாட்டமில்லாத பணியாளர்கள்,பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிரமற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காகதமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம்நம்பிக்கை கொண்டோரே!அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்இதனால்வெற்றியடைவீர்கள். (அல் குர்ஆன் 24 : 3031)
பர்தாவைப் பேணாத பெண்கள் முன்னிலையில் நாம் பேசுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் அது போன்று தனிமையில் பேசுவதையும் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் நபி (ஸல்)அவர்களிடம்  (அன்னியப் பெண் மீதுதிடீரெனப் படும் பார்வையைப் பற்றிக்கேட்டேன்நான் என்னுடைய பார்வையைத் திருப்ப வேண்டும் என நபி (ஸல்)அவர்கள் கட்டளையிட்டார்கள்.     நூல் : திர்மிதி (2700)
 (இளைஞரானஃபழ்ல் (ரலிஅவர்கள் நபி (ஸல்அவர்களுக்குப் பின்(ஒட்டகத்தில்அமர்ந்து கொண்டிருந்த போது ''கஸ்அம்'' கோத்திரத்தைச்சார்ந்த ஒரு பெண் வந்தார்உடனே ஃபழ்ல் அப்பெண்ணைப் பார்க்கஅப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபி (ஸல்அவர்கள்)ஃபழ்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலிநூல் : புகாரி (1513)
(இதைக் கண்டஅப்பாஸ் (ரலிஅவர்கள் '' அல்லாஹ்வின் தூதரே எதற்காகநீங்கள் உங்களுடைய சிறிய தந்தையின் மகனின் கழுத்தை திருப்பினீர்கள்என்று கேட்டேன்அதற்கு நபியவர்கள் '' ஒரு இளைஞனையும்,இளம்பெண்ணையும் நான் பார்த்தேன்அவ்விருவருக்கு மத்தியில் ஷெய்தான்நுழைவதை நான் அஞ்சுகிறேன் என்று கூறினாரகள்.      நூல் : திர்மிதி

இறைவனை அஞ்சி வாழ்தல்

எல்லாவற்றுக்கும் மேலாக நாம் தனிமையில் இருக்கும் போதும் கூட்டாகஇருக்கும் போதும் இறைவனை அஞ்சிக் கொள்ள வேண்டும்தவறான பத்ரிகைகள்தொலைக்காட்சி காட்சிகள் இணையதளங்கள் போன்றவற்றை பார்ப்பதை விட்டும்நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்நம்முடைய பார்வைகளுக்காகவும் நாம்மறுமையில் விசாரிக்கப்படுவோம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.நம்முடைய பார்வைகளும் நமக்கெதிராக மறுமையில் சாட்சி சொல்லும் என்பதில்நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்இந்த பயம் இருந்தால்தான் நாம்நம்முடைய பார்வையைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்
உமக்கு அறிவு இல்லாததை நீ பின்பற்றாதேசெவிபார்வை மற்றும் உள்ளம்ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை.
(அல்குர்ஆன் 17 36)
அல்லாஹ்வின் பகைவர்கள் நரகை நோக்கித் திரட்டப்படும் நாளில் அவர்கள்வகைப்படுத்தப்படுவார்கள்முடிவில் அவர்கள் அங்கே வந்த தும் அவர்களுக்குஎதிராக அவர்களின் செவி யும்பார்வைகளும்தோல்களும் அவர்கள் செய்துகொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்''எங்களுக்கு எதிராக ஏன் சாட்சிகூறினீர்கள்?'' என்று அவர்கள் தமது தோல் களிடம் கேட்பார்கள்''ஒவ்வொருபொருளையும் பேசச் செய்த அல்லாஹ்வே எங்களையும் பேசச் செய்தான்.முதல் தடவை அவனே உங்களைப் படைத்தான்அவனிடமே திரும்பக்கொண்டு வரப்பட்டுள்ளீர்கள்!'' என்று அவை கூறும். (அல் குர்ஆன் 41 : 30)
கண்களின் (சாடைகள் மூலம் செய் யப்படும்துரோகத்தையும்உள்ளங்கள்மறைத்திருப்பதையும் அவன் அறிவான். (அல் குர்ஆன் 40 : 19)
அவனைக் கண்கள் பார்க்காதுஅவனோ கண்களைப் பார்க்கிறான்அவன்நுட்பமானவன்நன்கறிந்தவன் (அல் குர்ஆன் 6 : 103)
இறைவன் எந்நேரமும் நம்முடைய கண்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான்என்கின்ற இறையச்சம்தான் தவறான பார்வைகளை விட்டும் நம்மை பாதுகாக்கும்திரையாகும்

Blog Archive

Translate