Dec 29, 2016

ஜூம்ஆ பாங்கிற்கு பிறகு மாற்று மதத்தவரை வைத்து வியாபாரம் செய்யலாமா?



கேள்வி :     அல் குரான் (62:9)"நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காகஅழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்!நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது."
மேலே குறிபிட்டுள்ள வசனத்தில் இருந்து தெளிவாக தெரிகிறதுஜும்மா தொழுகைக்காக அழைக்கப்பட்டால் வியாபாரத்தை விட்டு செல்லுங்கள். அல்லாஹ் அந்த நேரத்தில் வியாபாரம் செய்வதைதடுத்துள்ளான்.
நான் வோயாபாரம் செய்கிறேன். வெள்ளிக் கிழமைகளில் சீக்கிரமே பள்ளிக்கு செல்பவன் நான். ஆனால்எனது கடையை அடைப்பது இல்லை. நான் வியாபாரத்தை விட்டு விட்டாலும் எனது மாற்று மததொழிலாளி(staff) கடையில் தான் இருப்பார். அப்போது வியாபாரமும் நடக்கும்(வியாபாரம் செய்வதுஎனது நிய்யத் இல்லை என்றாலும் கடை திறந்த இருப்பதால் வரும் வாடிக்கையாளர்களை விரட்டமுடியாது). அவர் தொலைவில் இருந்து வருவதால் வீட்டுக்கு போகாமல் கடையிலேயே தான் காலைமுதல் இரவு வரை இருப்பார்.
இந்த சூழ்நிலையில் நான் வியாபாரம் செய்யலாமாஎன்ன தான் அவர் மாற்று மதத்துகாரராகஇருந்தாலும் வியாபாரம் நடப்பது என்னுடையது. அதில் கிடைக்கும் லாபம் என்னை வந்து சேரும்.இப்படி நான் கடையை திறந்து வைத்திருப்பது கூடுமாகூடாது என்றால் கடையை அடைத்து விட்டுஅவரை வேறு இடத்தில அந்த ஒரு மணிநேரம் இருக்க ஏற்பாடு செய்யலாம்,இன்ஷா அல்லா.கண்டிப்பாக விளக்கம் தேவை

பதில் :
يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ [الجمعة/9]
நம்பிக்கை கொண்டோரே ! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. (அல்குர்ஆன் 62 : 9)
மேற்கண்ட இறைவசனத்தில் அல்லாஹ் இரண்டு கட்டளைகளைப் பிறப்பித்துள்ளான். வெள்ளிக் கிழமையில் ஜூம்ஆவிற்கு பாங்கு சொல்லப்படும் போது
1.         இறைவனை நினை கூர்வதற்கு விரைய வேண்டும்.
2.        . வியாபாரத்தை விட வேண்டும்.
ஒருவர் தன்னுடைய வியாபாரக் கடையில் மாற்று மதத்தவர்களையோ அல்லது ஜூம்ஆ கடமையாகதவர்களையோ நியமித்து விட்டு அவர் மட்டும் வியாபாரம் செய்யாமல் ஜூம்ஆவில் கலந்து கொள்வதால் அவர் வியாபாரத்தை தவிர்ந்தவராகக் கருதப்படமாட்டார். ஏனெனில்
வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்!
என்பதோடு அல்லாஹ் நிறுத்தியிருந்தாலும் மேற்கண்ட இறைக்கட்டளையை நிறைவேற்றுவதற்கு அவர் வியாபாரத்தை விட்டுத்தான் ஆக வேண்டும்.
ஜும்ஆ கடமையானவர் மட்டும்தான் ஜூம்ஆவிற்கு பாங்கு சொல்லப்பட்ட பிறகு வியாபாரத்தை விடவேண்டும் என்று சொன்னால் பாங்கு சொல்லப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்  என்ற கட்டளை மட்டுமே போதுமானதாகும்.
ஆனால் அல்லாஹ் வியாபாரத்தை விட்டுவிடுங்கள் என்று அதிகப்படியான கட்டளையைக் கூறுவதிலிருந்தே ஜூம்ஆவிற்கு பாங்கு சொல்லப்பட்டால் ஒருவர் தனக்கு சொந்தமான வியாபாரக் கடையை மூடிவிட வேண்டும். மாற்று மதத்தவர்களையோ அல்லது ஜூம்ஆ கடமையாகதவர்களையோ கொண்டு வியாபாரம் செய்வது ஹராம் என்பதையும் அதன் மூலம் வரும் வருவாயும் ஹராமாகும் என்பதையும் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
நிர்பந்தம் என்று வரும்போது மார்க்கத்தில் சில விதிவிலக்குகள் உள்ளன. அது போல் ஜூம்ஆவிற்கு பாங்கு சொல்லப்பட்ட பிறகு வியாபாரம் செய்வது ஹராமாகும் என்றாலும் சில சூழ்நிலைகளில் ஒருவன் நிர்பந்தத்திற்குள்ளானால் அது அல்லாஹ்விடம் பாவமாகக் கருதப்படாது.

கே.எம்அப்துந் நாஸிர் MISC கடையநல்லூர்.


Dec 28, 2016

சாலை விபத்துகள் காரணங்களும் இஸ்லாத்தின் தீர்வுகளும்





சாலை விபத்துகள் காரணங்களும் இஸ்லாத்தின் தீர்வுகளும்
[ இஸ்லாமிய இளைஞர்களைக் கவனத்தில் கொண்டு எழுதப்பட்ட ஆக்கம் ]
வெளியில் சென்றால் வீட்டிற்கு திரும்புவது நிச்சயமில்லாததாகி விட்டதுஎன்று சொல்லுமளவிற்கு இன்று சாலை விபத்துகள் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
நாளுக்கு நாள் வாகனங்களும் பெருகிக்கொண்டே செல்கின்றன. மக்களின் அன்றாடத் தேவைகளில் வாகனமும் ஒன்றாகிவிட்டது.
அரசும் அதிகாரிகளும் சாலை விபத்துகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டங்களை மேற்கொண்டாலும் அது சம்பந்தமான பிரசுரங்களை விநியோகித்தாலும் சாலை விபத்துகளை கட்டுப்படுத்த முடியவில்லை.
சாலை விபத்துக்களுக்கான காரணங்களை கண்டறிந்து அதற்கான இஸ்லாம் தரும் தீர்வுகளை நடைமுறைப்படுத்தாவிட்டால் எவ்வளவு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சாலை விபத்துகளை தடுக்கமுடியாது.
சாலை விபத்துகள் சம்பந்தமான ஓர் புள்ளி விபரம்:
நம் இந்தியத் திருநாட்டில் 2011ஆம் ஆண்டில் நடற்த சாலை விபத்துகளில் 1.36 இலட்சம் பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் மட்டும்15,422 இறந்துள்ளனர் என தேசிய போக்குவரத்து திட்டம் மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மக்களின் இறப்பிற்கு 4 ஆவது காரணியாகவும் சுகாதாரக் குறைவிற்கு 3ஆவது காரணியாகவும் சாலைவிபத்துக்களே அமையும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. பல்வேறு தொற்றுநோய் மற்றும் மற்ற நோய்ப்பாதிப்புகளில் இறப்பவர்களைவிட சாலைவிபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என எச்சரிக்கின்றது இன்னொரு அதிர்ச்சித்தகவல். இப்படி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
விபத்துகளுக்கான காரணங்கள்
1. தரமற்ற சாலைகள்:

குண்டும் குழியுமாக மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக வாகன ஓட்டிகளுக்கு மரணக்குழிகளாக காட்சியளிக்கின்றன. மக்களின் ஓட்டுக்களிலும் வரிப்பணங்களிலும் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களும் அமைச்சர்களும் அதிகாரிகளுமே இதற்கு முழு முதற்காரணங்களாகும். அரசாங்கம் சாலைகளுக்கென்று ஒதுக்குகின்ற அற்ப பணங்களை இடையில் இருக்கின்ற அதிகாரிகள் ஊழல் செய்து தரமற்ற சாலைகளை போட்டு குடிமக்களின் உயிர்களை பறித்து விடுகின்றனர். ஆட்சியாளர்களின் மெத்தெனப்போக்கும் பொடுபோக்குத்தனமும் குடிமக்களைக் குறித்து எந்தவிதமான கவலையும் கொள்ளாததுமே விபத்துகளுக்கு காரணமாக அமைந்துவிடுகின்றன.
மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை கூறும்போது 1.3 சதவீதம் மோசமான சாலைகளே விபத்துகளுக்கு காரணம் என்று கூறுகிறது.
இஸ்லாம் கூறுவது போல ஆட்சியாளர்கள் அமைந்தால் இதுபோன்ற சாலை விபத்துகளை குறைக்க முடியும். அதுபோன்ற ஆட்சியாளர்களை இஸ்லாம் உலகிற்கு வழங்கியிருக்கிறது. குடிமக்களின் பொறுப்புகளை உணர்ந்து ஆட்சியாளர்கள் செயல்பட்டிருக்கிறார்கள்.
''உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார்கள்'' என நபியவர்கள் கூறினார்கள் (நூல்: புகாரி 893)
குடிமக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஓர் அடியாருக்குக் கொடுக்க அவர் அந்த மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையில் இறந்துபோனால் அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தை தடை செய்யாமல் இருப்பதில்லை என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

Dec 27, 2016

செல்ஃபியும் சமூகமும்



சமீப காலங்களில், இணைய அத்துமீறல்கள் குறித்த செய்திகள் ஒரு தொடர் நிகழ்வாகி விட்டது. இது மிகவும் கவலைத்தரக்கூடிய ஒன்றுதான். 
தம்மைத் தாமே படம் அல்லது வீடியோ பிடித்து சமூக வலைதளங்களில் பகிரும் செல்ஃபி எனப்படும் ஒரு சுய-புகைப்படப் பரிமாற்றமானது தற்போது மிகவும் பெருகிவிட்டது. பதின்பருவ வயதினர் முதல் வயதில் முதியவர்கள் வரை கிட்டத்திட்ட இதற்கு அடிமைகளாகி வருகின்றனர் என்றால் அது மிகையாகிவிடாது.
அழகு பற்றிய பிரக்ஞையும், அடையாளச் சிக்கலும் ஒவ்வொருவருக்குள்ளும் ஆழ வேரூன்றி இருக்கிறது. ஒருவகையில் இந்த சமூக அமைப்பானது தகுதிபடைத்தவர்களுக்கே மரியாதை கொடுப்பது அதற்கு முக்கியக் காரணம். இந்த வேட்கையை வியாபார நிறுவனங்கள் பலவகைகளில் உக்குவிக்கின்றன.

புகைப்படங்களில் நாம் எவ்வாறு இருக்கிறோம் என்பதை உடனுக்குடன் பார்க்கும் வசதியை இந்த செல்ஃபிகள் வழங்குவதால், ஒவ்வொரு உடையிலும், அலங்காரத்திலும் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை பார்த்து ரசிப்பதோடு, அதை மற்றவர்களிடமும் பகிர்ந்து கருத்துப் (பாராட்டுகள்) பெறுவது கிட்டத்திட்ட ஒரு போதைப் பழக்கம் போல் ஆகிவிட்டது. (ஆக்கப்பட்டுவிட்டது என்பதே பொருத்தமாக இருக்கும்).
எந்த அளவுக்கு அடிமைத்தனம் கூடுகிறதோ அந்த அளவுக்கு அந்த தொழில் நுட்பக் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் வளர்ச்சி அடையும் என்பதே நுகர்வோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.

Dec 26, 2016

திருமணத்தில் மணப்பெண்ணிற்கு நகை போடுவது வரதட்சணையா?


திருமணத்தில் மணப்பெண்ணிற்கு நகை போடுவது வரதட்சணையா?


ஒருவன் நான் ஒரு பெண்ணை திருமணம் செய்யப் போகிறேன் என்பதை முன்வைத்து பெண்வீட்டாரிடமிருந்து தனக்காகப் பெறுகின்ற ஒவ்வொன்றும் வரதட்சணைதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இவ்வாறு பெறப்படுவது பணமாக இருந்தாலும், பொருளாக இருந்தாலும், விருந்தாக இருந்தாலும், நகையாக இருந்தாலும் அவை வரதட்சணைதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.


அதே நேரத்தில் ஒரு பெண்ணிற்கு திருமணத்தின் போது போடப்படுகின்ற நகை அனைத்தும் வரதட்சணையில் உள்ளடங்கிவிடும் என்று கருதமுடியாது.
பொதுவாக நகைகளால் தன்னை அலங்கரித்துக் கொள்வது பெண்களின் இயற்கைத் தன்மையாகும். அதிலும் குறிப்பாக திருமணத்தின் போது புதுமாப்பிள்ளையை கவரும் வண்ணம் தன்னை அலங்கரித்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும். ஒரு பெண்ணிற்கு இந்த நோக்கத்தில் அணிவிக்கப்படும் நகைகள் வரதட்சணையாக ஆகாது.தன்னுடைய மகளிற்கு ஒரு தகப்பன் திருமணத்தின் போது அணிவிக்கும் நகைகள் அவளுக்குரியதுதானே தவிர அவளுடைய கணவனுக்கு அதில் எந்த உரிமையும் கிடையாது.

Dec 24, 2016

கற்றாழை சோப் எப்படி செய்வது என தெரியுமா?



கற்றாழை பல்வேறு விதமான சருமப் பிரச்சனைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. உங்களுக்கு சருமப் பிரச்சனை இருந்தால் இந்த கற்றாழை ஜெல்லை முதலில் பயன்படுத்திப்பாருங்கள். அப்படி சரியாக வில்லையென்றால் நீங்கள் வேறு மாற்றுக்களைத் தேடலாம்.

இது சரும வியாதிகளையும் குணப்படுத்தும் என்பதால் இதனை சோப்பாக பயனபடுத்தினால் பல அருமையான பலன்களை உங்களுக்கு தரும்.

இந்த சோப் நல்ல ஈரப்பதத்தை தந்து வறண்டுபோகாமல் பாதுகாக்கும். இது மிகவும் மென்மையான ஒன்று என்பதால் சற்றே உணர்வு அதிகம் உள்ள மென்மையான சருமத்திற்கும் ஏற்ற ஒன்றாக இருக்கும்.

Dec 23, 2016

மரணம் பற்றி அல்குர்ஆன்




இறைவனை நோக்கிய உள்ளங்களே! இறைவனுடைய ரூஹினை பெற்று கொண்ட மனித வர்க்கமாகிய நாங்கள் ,ஏனைய உயிர்களை போன்றே நிச்சயம் ஒருநாள் மரணித்துதானே ஆக வேண்டும். 

சரி நாம் ஒருக்காலும் ஏனைய உயிரினங்களுடன் எம்மை ஒப்பிட்டு பேசுவதை ஏற்று கொள்ள மாட்டோம்."சுய சிந்தனை அற்ற மானிதா"  என்று எம்மை அழைக்காமல் எம்மை காப்பது ,நாம் சுய சிந்தனையுடன் செயற்படும் செயலை வைத்துதானே.

Dec 22, 2016

ஏடிஎம் இயந்திரங்கள் பற்றிய வரலாறு தெரியுமா உங்களுக்கு..!

புனித தலங்களாக மாறிய ஏ.டி.எம்
ஏ.டி.எம் என்ற வார்த்தையை இதுவரை யாராவது கேள்விப்படாமல் இருந்திருப்பார்களா? என்பது சந்தேகமே. அப்படியே கேள்விப்படாமல் இருந்திருந்தாலும் அவர்களும் கடந்த 40 தினங்களில் நிச்சயம் கேள்விப்பட்டிருப்பார்கள்.
இப்படிப்பட்ட ஏ.டி.எம் -இன் கதை என்னவென்று சற்று பின்னோக்கி பார்ப்போம்


இந்தியாவில் ஏ.டி.எம் தோன்றியது எப்போது?


இந்தியாவில் ஏ.டி.எம் தோன்றியது எப்போது?

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னால்தான் இந்தியாவில் ஏடிஎம் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. சிட்டி பேங்க் மற்றும் ஹாங்கான் அண்ட் பேங்கிங் கார்ப்பரேஷன் என்று கூறப்படும் HSBC வங்கிகள்தான் முதன்முதலில் கடந்த 1987ஆம் ஆண்டு மும்பையில் முதன்முதலாக ஏ.டி.எம் மையங்களைத் தொடங்கின.
ஆரம்பத்தில் இந்த ஏ.டி.எம் -இல் நாள் ஒன்றுக்கு ஒருவர் ரூ.3000 மட்டுமே எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அது ரூ.25000 முதல் வங்கிகளைப் பொறுத்து எடுத்துக் கொள்ளலாம்.

Dec 21, 2016

மதங்களுக்கிடையில் ஒற்றுமை சாத்தியமா?


உலகில் மதங்களை பின்பற்றும் மதவாதிகள் அதாவது ஆத்திக வாதிகள் தங்களுடைய மதங்களை பின்பற்றியும் அதேவேளை ஒற்றுமையாகவும் வாழ்வது சாத்தியமா என்றால் நான் இஸ்லாமியன் என்ற முறையில் சாத்தியம் என்றுதான் கூறுவேன்.

சாத்தியம் என்று கூறியவுடன் இன்னோர் மதத்தை ஒருவேருக்கொருவர் பின்பற்றி வாழ சொல்கிறானோ என்று நீங்கள் புருவங்களை உயர்த்தலாம். அதிர்ச்சி வேண்டாம் அதை நான் முன்வைக்க போவதில்லை ...

உங்களுடைய மதங்களை நீங்கள் சரியாக பின்பற்றினாலே போதும் என்பதுதான் இதன் சுருக்கம் ..அதாவது எல்லா மதங்களிலும் கூறப்பட்ட மத சகிப்பு தன்மை அந்த மதத்தை சார்ந்தவனுக்கே சரியாக ஊட்டப்படுமேயானால் போதுமானது.

Dec 19, 2016

உலகின் டாப் 5 பணமில்லா நாடுகள் எவை என்று தெரியுமா..?

Image result for cashless country

சமுகத்திற்கு பணம் என்ற கவலையே இல்லாமல் இருக்கலாம். எனவே நாம் இங்கு பணமில்லா நாடுகளாக மாறி வரும் 5 நாடுகளைப் பற்றி பார்ப்போம்.


இந்தியாவில் இப்போது பெரிதும் பேசப்பட்டு வரும் வார்த்தை என்றால் அது பணமில்லா பொருளாதாரம் என்பதே ஆகும். இந்தியாவும் பணமில்லா நாடாக இருந்தால் செல்லும் இடம் எல்லாம் ஒரு கார்டு அல்லது மொபைல் மட்டும் போதும் என்று இருந்தால் எப்படி இருக்கும்.
சமுகத்திற்கு பணம் என்ற கவலையே இல்லாமல் இருக்கலாம். எனவே நாம் இங்கு பணமில்லா நாடுகளாக மாறி வரும் 5 நாடுகளைப் பற்றி பார்ப்போம்.

Blog Archive

Translate