Jan 31, 2017

காற்று சக்தியில் இயங்கத் தயாராகும் ரயில்கள்!



Image result for netharnalt railway new technology



ரயில்கள் தற்போது நிலக்கரி, டீசல் உட்பட மின்சக்தியில் இயங்கி வருகின்றன.எனினும் காற்றின் உதவில் இயங்கக்கூடிய ரயில்கள் இதுவரை குறைந்தளவே சேவையில் உள்ளன.

இதனை அதிகப்படுத்த நெதர்லாந்தின் தேசிய ரயில்வே நிறுவனம் முடிவு செய்துள்ளது.இதன்படி அனைத்து மின்சார ரயில்களையும் 100 சதவீதம் காற்று சக்தியில் இயங்கக்கூடிய ரயில்களாக மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது.

இதற்கான அடித்தளம் 2015ம் ஆண்டிலேயே போடப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 2018ம் ஆண்டில் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த அந்நிறுவனம் எதிர்பார்த்துள்ளது. இதேவேளை தற்போது சேவையில் உள்ள காற்றில் இயங்கும் ரயில்களில் நாள் தோறும் சுமார் 6,00,000 பயணிகள் பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jan 30, 2017

பேமெண்ட்ஸ் வங்கி ( Payments Bank )

ஏர்டெல், பேடிஎம் நிறுவனங்களுக்குப் போட்டியாக இந்திய தபால் துறை பேமெண்ட்ஸ் வங்கி உரிமத்தை பெற்றது!

பேமெண்ட்ஸ் வங்கிக்கான உரிமத்தை பெற்றதைத் தொடர்ந்து விரைவில் வங்கி சேவை துவங்கப்படும் என்று தபால் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வர்த்தக ரீதியாகப் பேமெண்ட்ஸ் வங்கியைத் துவக்குவதற்கான உரிமத்தை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவிடம் இருந்து இந்திய தபால் நிறுவனம் பெற்றது.
பேமெண்ட்ஸ் வங்கிக்கான உரிமத்தை பெற்றதைத் தொடர்ந்து விரைவில் வங்கி சேவை துவங்கப்படும் என்று தபால் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பார்தி ஏர்டெல், பேடிஎம் நிறுவனங்களைத் தொடர்ந்து மூன்றாவதாகப் பேமெண்ட்ஸ் வங்கி சேவையைத் துவக்குவதற்கான உரிமத்தை இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி பெற்றுள்ளது.

பான் கார்டு ஏன் அவசியம் என்பதற்கான முக்கியமான 8 காரணங்கள்


எப்போது பான் கார்டு தேவைப்படும்?

    பான் கார்டு ஏன் அவசியம் என்பதற்கான முக்கியமான காரணங்கள்

  ரு நாட்டின் மூலாதாரம் வரி வருவாய் ஆகும். எந்த ஒரு நாடும், அந்த நாட்டின் குடிமக்கள் சரியாக வரி கட்டுகின்றனரா என்பதைக் கண்காணிக்கவும், அவர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதைத் தடுக்கவும் பல்வேறு வழி முறைகளைப் பின்பற்றுகின்றனர். இந்தியத் திருநாட்டின் அத்தகைய ஒரு அரும் பெரு முயற்சியே பேன் கார்ட் ஆகும்.
இது உள்நாட்டு அல்லது வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நிதி ஆதாரங்கள் மற்றும் பரிமாற்றங்களைக் கண்காணிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. இந்த அட்டை இந்திய வருமான வரித்துறையினால் வழங்கப்படும் ஒரு நிரந்தரக் கணக்கு எண் உடைய பிளாஸ்டிக் அட்டை ஆகும்.
10 இலக்க எண்

  10  இலக்க எண்
    ஒவ்வொரு நிரந்தரக் கணக்கிற்கும் ஆங்கில எழுத்துக்கள் மற்றும் எண்களை உள்ளடக்கிய 10 இலக்க எண் வழங்கப்படும். இந்த அட்டை மற்றும் நிரந்தரக் கணக்கு எண் ஒவ்வொருவருடைய பரிவர்த்தனைகள் 50000 அல்லது அதற்கு மேல் செல்லும் பொழுது, அவர்களின் நிதி பரிமாற்றங்களைக் கண்காணிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது.

Jan 28, 2017

கண்ணாடிகள் கவனம்




நமது சமுதாயம் சந்தித்து வருகின்ற பிரச்னைகளில் மிக முக்கியமானது வரம்பு மீறிய காதல் பிரச்னைதான். ஓடிப்போகும் சீரழிவுச் செய்தி எல்லாப் பகுதிகளிலிருந்தும் நீக்கமற வந்த வண்ணமிருக்கின்றன. இதற்கெல்லாம் இதுதான் காரணமென்று பொத்தம்பொதுவாய் ஒன்றைச் சொல்ல முடியாது.


செல்போன், சின்னத்திரை, பெரிய திரை, கல்வி நிலையங்களில் கலந்து பழகுதல் எனப் பல காரணங்களைச் சொல்லலாம். காரணம் எதுவாயினும் சரி செய்யப்பட வேண்டிய தலையாய விசயம் இது. இந்தப் பொறுப்பும் கடமையும் பெற்றோர்களையே சாருகின்றது.
   பெற்றோர்களின் கவனக்குறைவினால்தானே அவர்கள் கீழிறங்கிப் போகின்றார்கள். செல்போன், தொலைக்காட்சி, இணையதளம் ஆகிய வசதிகளை ஏற்படுத்தித் தருவதோடு பெற்றோர்களின் பங்கு முடிந்து விடுவதில்லை. அதை அவர்கள் எப்படிப்பயன்படுத்த வேண்டும் என்பதைச் சொல்லித்தர வேண்டும். அதன் நன்மை தீமைகளை விளக்கித் தர வேண்டும். தீவிர கண்காணிப்பும் வேண்டும். மீறும்போது கண்டிக்கவும் வேண்டும்.

Jan 26, 2017

அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம்




உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்: மாறாக அதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப்பெயர் சூட்டுகின்றது. ரமழான் அல்லாத நாட்களில் ஸுபுஹ் தொழுகையின்போது பள்ளிவாசலின் நிலையைப் பாருங்கள். பரிதாபமாக இருக்கும். சில பள்ளிவாசல்களில் ஒரு வரிசைகூட முழுமையாக இருக்காது. இதற்காகவா இவ்வளவு பொருள் செலவில் பரந்து விரிந்த பள்ளிவாசல்களைக் கட்டினோம்..?

நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் இவ்வாறு துஆ கேட்டார்கள். “”யா அல்லாஹ்! எனது சமூகத்திற்கு அதிகாலை நேரத்தில் அருள்வளத்தை நல்குவாயாக!” (அபூதாவூத்)
நபி(ஸல்) அவர்களின் இந்தப் பிரார்த்தனைக்கு எந்தவிதத் தகுதியும் இல்லாமல் அதிகாலை நேர த்தில் தூங்கிக் கொண்டிருக்கும் சமூகமாகவே நம் சமூகம் இருக்கின்றது.
ஃபாத்திமா(ரழி) அறிவிக்கின்றார்:

அதிகாலை நேரத்தில் நான் படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். அந்நேரம் நபி(ஸல்) என்னருகே வந்து தங்களது பாதங்களால் என்னை உசுப்பிவிட்டு இவ்வாறு கூறினார்கள் “”அருமை மகளே! எழு! அல்லாஹ்வின் வாழ்வாதாரங்கள் வழங்கப்படும் நேரத்திற்கு சாட்சியாளராக இரு. அலட்சியப்படுத்துபவராக மாறி விடாதே.

Jan 25, 2017

ஆன்லைனில் இருந்தால் மொபைல் சார்ஜ் குறைவது ஏன்?



ஆன்லைனில் இருந்தால் மொபைல் சார்ஜ் குறைவது ஏன் என்று தெரியுமா?
இணையத்தில் இருந்தால் மொபைல் ஏன் சார்ஜ்ஜை இழக்கிறது?
ஒவ்வொரு மொபைல் பேட்டரியும் ஒவ்வொரு மின்னூட்ட அளவினைக் கொண்டது. அதை mAh என்னும் அளவுக்குறியீட்டு மூலம் குறிக்கப்படும்.
நாம் இணையத்தை பயன்படுத்தி பல்வேறு வலைத்தளத்திற்கு சென்று செய்தி சேகரிப்பதை சர்ஃபிங் என்று கூறுவர். 

ஆனால் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் மக்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றனர். 

அதில் நாம் நொடிக்கு நொடி பல புகைப்படங்களையோ  காணொளியையோ பதிவேற்றுகின்றோம். 

அப்படி செய்கையில் நாம் select செய்த புகைப்படத்துடன் நம் மொபைலில் உள்ள அனைத்து தகவல்களும்(data) நம் அனுமதி இல்லாமல் திறக்கப்படுகின்றன. பதிவேற்றம் செய்த பின்னும் இந்த தகவல்கள் பின்திரையில் செயல்பட்டுக் கொண்டு இருக்கும். ஆனால் நாம் அதைக் கவனிக்க தவறுகிறோம். 

இதனால் அத்தகவல்கள் அனைத்தும் சார்ஜ்ஜை உறிஞ்சி எடுத்து மொபைலை சூடாக்கி பேட்டரியின் செயல்திறனை வெகுவாகக் குறைத்துவிடும்.

Jan 23, 2017

விருந்தில் சீரழியும் சமுதாயம்

 


நமது சமுதாயத்தில் பல்வேறு விருந்துகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன. பெயர் சூட்டு விழா விருந்து, கத்னா விருந்து, சடங்கு விருந்து, கல்யாண விருந்து, புதுமனைப் புகுவிழா விருந்து, பிள்ளைப் பேறு விருந்து, இறந்தவர் வீட்டில் அவர் அடக்கம் செய்யப்பட்டதும் விருந்து, மூன்றாம் நாள் பாத்திஹா விருந்து, ஏழாம் நாள் பாத்திஹா விருந்து, நாற்பதாம் நாள் பாத்திஹா விருந்து, ஹஜ்ஜுக்குச் செல்லும் விருந்து என விருந்து மழைகள் பொழிந்து கொண்டிருக்கின்றன. மக்கள் அம்மழையில் நனைந்த வண்ணமிருக்கின்றனர்.

இந்த விருந்துகளில் திருமணம் மற்றும் புதுமனை புகுவிழா விருந்துகள் மார்க்கம் அனுமதிக்கின்ற விருந்துகளாகும். மற்ற விருந்துகள் மார்க்கத்திற்கு முரணானவையாகும். அதிலும் குறிப்பாக இறந்தவர் வீட்டில் அன்றைய தினமே நடத்தப்படும் விருந்து ஈவு இரக்கம் ஆகியவற்றுக்கு எதிராக விடுக்கப்படும் சவாலாகும்.

மார்க்கத்திற்கு முரணான, சம்பிரதாய விருந்துகள் இன்று சமூக நிர்ப்பந்தங்களாகி விட்டன. மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட திருமணம், புதுமனை புகுவிழா விருந்துகள் கூட கடன் வாங்கி வைக்கப்படும் போது அவையும் சமூக நிர்ப்பந்தங்களாகி விடுகின்றன.

Jan 22, 2017

கோப்புகளை பிடிஎப் ஆக ப்ரிண்ட் செய்வது எப்படி.? (ஆண்ட்ராய்டு)



கோப்புகளை பிடிஎப் (PDF) ஆக ப்ரிண்ட் செய்து கொள்வது என்பது உண்மையிலேயே ஒரு பயனுள்ள அம்சமாகும். அப்படியாக, ப்ரிண்ட் செய்யப்படும் பிடிஎப்-களை உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் சேமித்து வைத்துக்கொள்ளுதல் என்பது ஒரு நல்ல யோசனை இருக்க முடியும். அந்த செயல்முறை மிகவும் எளிது தான் ஆனால் நீங்கள் கோப்புகளை பிடிஎப் ஆக ப்ரிண்ட் செய்ய தொடங்குவதற்கு முன்பாக, நீங்கள் ஒரு சில விடயங்களை சரிபார்க்க வேண்டியது அவசியமாகிறது.



முதலில் நீங்கள் ப்ரிண்ட் செய்ய பயன்படுத்தும் ஆப் ப்ரிண்ட் ஆதரவு விளங்குகிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ளவும். சில பயன்பாடுகள் ஆதரவு அளிப்பதில்லை, ஆனால் பெரும்பாலான கூகுள் பயன்பாடுகள் ஆதரவு அளிக்கின்றன (கூகுள் டாக்ஸ் (Google Docs) போன்ற ஆஃப்ஸ்கள் பிடிஎப் பைல்களை எளிமையாக சேமிக்க வழிவகுக்கும்).

Jan 18, 2017

பட்ஜெட் என்றால் என்ன? பட்ஜெட் எப்படி உருவாக்கப்படுகிறது..?


த்திய பட்ஜெட்டை நிர்ணயிப்பது, செயலாக்குவது பற்றிய எதிர்பார்ப்புகள் நம்மில் பலருக்கும் இருக்கும். அந்தப் பலரில் நீங்களும் ஒருவராக இருந்தால், உங்களுக்காக இங்கே பட்ஜெட் பற்றிய (வரவு - செலவு திட்டத்தின்) நுணுக்கங்கள், விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டை நிர்ணயிப்பது, செயலாக்குவது பற்றிய எதிர்பார்ப்புகள் நம்மில் பலருக்கும் இருக்கும். அந்தப் பலரில் நீங்களும் ஒருவராக இருந்தால், உங்களுக்காக இங்கே பட்ஜெட் பற்றிய (வரவு - செலவு திட்டத்தின்) நுணுக்கங்கள், விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 112ன் படி, ஒரு ஆண்டின் பட்ஜெட்டில், அரசாங்கத்தின் அந்த ஆண்டிற்கான வரவு மற்றும் செலவினங்களின் மதிப்பீட்டிற்கான அறிக்கையை அளிப்பது. 

பட்ஜெட்டானது, நிதியமைச்சகம், நிதி ஆயோக் மற்றும் செலவு அமைச்சகங்கள் சம்மத்தப்பட்ட ஆலோசனை செயல்முறை மூலம் உருவாக்கப்படுகிறது. அமைச்சகங்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, திட்டமிட்டுச் செலவு செய்வதற்கு நிதியமைச்சகம் வழிகாட்டியாகச் செயல்படுகிறது.

நிதியமைச்சகத்தில் உள்ள பொருளாதாரத் தொடர்புகள் துறை பட்ஜெட் பிரிவானது, வரவு - செலவு திட்டத்தினை ஒருங்கிணைந்து தயாரிப்பதற்குக் காரணமாக உள்ளது.

இஸ்லாமும் இன்றைய கல்லூரிகளும்





  இஸ்லாமும் இன்றைய கல்லூரிகளும் 
   
எந்த வயதில் ஆண் பெண் உணர்ச்சிகள் பலவீனமாக இருக்குமோ, எந்த வயதில் இரு பாலாரையும் பிரித்து வைப்பது அத்தியாவசியமோ, எந்த வயதில் இரு பாலார் ஒன்றாக இருந்தால் அதிக கேடு வருமோ அந்த வயதில் இரு பாலாரையும் சேர்க்கும் இடமாக இன்று பெரும்பாலான கல்லூரிகள் இருந்து வருகின்றன. அதிகமான கல்லூரிகள் பெண்களை ஹிஜாப் பேணுவதை விட்டும் தடுக்கக் கூடியதாக இருக்கிறது.
கல்லூரியில் காதல் வயப்பட்டு, எவ்வளவு கஷ்டப்பட்டு தன்னுடைய பெற்றோர்கள் தன்னை வளர்த்திருப்பார்கள் என்பதை கூட மறந்து ஓடிப் பொய் திருமணம் செய்துக் கொள்ளும் காட்சி அரங்கேறுகிறது. முக்கியமாக ஆண் பெண் சேர்ந்து படிக்கும் கல்லூரிகளை தவிர்ப்பது சிறந்தது.
சில மாணவர்கள் தவறு என்று தெரிந்தும் "கல்லூரியில் அனுபவிக்காமல் வேறு எப்போது அனுபவிப்பது" என்ற ஒரு கேடுகெட்ட தத்துவத்தை கூறிக்கொண்டு இந்த பழக்கத்தை தொடர்கின்றனர். அல்லாஹ்விடம் தவ்பா செய்யக் கூட நேரம் இல்லாமல் அவருடைய மரணம் அவரை அடைந்தால் மறுமையில் அவரின் நிலை என்ன என்பதை சிந்திக்க மறுக்கிறார்கள்.
பெரும்பாலான தவறுகள் தீய நண்பர்களின் தூண்டுதளினாலேயே ஊக்குவிக்கப்படுகிறது. புகை, மது, ஊர் சுற்றுவது, சினிமாவிற்கு செல்வது போன்ற பழக்கத்தின் காரணம் தீய நண்பர்களாலேயே தொடங்கப்படுகிறது. தீய செயல் செய்யும் நண்பர்களை விட நம்மை தொழுகைக்கு அழைப்பவராகவும், நாம் செய்யும் தீய செயல்களை சுட்டிக்காட்டி அதை தடுப்பவர்களையும் நண்பராக தேர்ந்தெடுப்பது இம்மையிலும் மறுமையிலும் சிறந்ததாகும்.
ஆணும் பெண்ணும் நண்பர்கள் என்ற பெயரில் மிக சகஜமாக கை குலுக்கிக் கொள்வதும், உரசிக்கொள்வதும், சினிமா, பீச் என்று ஊர் சுத்துவதர்க்கு பெயர் நட்பு என்றும் அது அவர்களுடைய சுதந்திரம் என்றும் கூறிக் கொள்கின்றனர். இந்த நட்புதான் பிற்காலத்தில் காதலாகவும் காமமாகவும் மாறுகிறது. இதனால் ஏற்படும் விளைவுகளை யாரும் சிந்திப்பதில்லை.
சில மாணவிகள் தங்களுடைய காரியத்தை சாதிக்க வேண்டும் என்பதற்காக பொறுப்பில் இருக்கும் மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் குழைந்து பேசக் கூடியவர்களாக இருக்கின்றனர். இது நிச்சயமாக மானக்கேடான செயலாகும்.
கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தொழுகையை மறந்தே வாழ்ந்து வருகின்றனர். சினிமா, பீச், உணவகங்கள் போன்ற இடங்களுக்கு செல்ல நேரம் இருக்கும் இவர்களுக்கு தொழுகைக்கு நேரம் இல்லையாம். வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுவதோடு தம் கடமை முடிந்து விட்டது என்று நினைக்கின்றனர். சிலர் ஜும்மா தொழுகையையும் அலட்சியப்படுத்துகின்றனர். தொழுகையின் முக்கியத்துவத்தை பற்றி இவர்களுக்கு ஒழுங்காக எதி வைக்காததும் இறையச்சம் இல்லாததும் தான் இதற்குக் காரணம்.
ஒவ்வொரு முஸ்லிமும் தமக்கு தெரிந்த ஒவ்வொரு மார்க்க விஷயத்தையும் மற்றவர்களிடம் எத்தி வைப்பது கடைமையாக இருக்கிறது. கல்லூரியில் நம்முடன் படிக்கும் மாணவர்களுடன் அரட்டை அடிப்பதற்கும், பெண் மாணவிகளை பற்றி அவதூறி சொல்வதற்கும், அசிங்கமான விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் நாம் என்றைக்காவது மார்க்க விஷயத்தை எத்தி வைத்திருப்போமா?.]

Jan 16, 2017

IAS தேர்வு என்றால் என்ன ?






IAS தேர்வு என்றால் என்ன ? உங்களுக்கு தேவையான விவரங்கள் இதோ.....!!!
IAS மற்றும் IPS உள்ளிட்ட 24 பணிகளுக்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயத்தினால்(UPSC) ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் குடிமைப்பணித் தேர்வே(CIVIL SERVICE EXAM) மிகவும் பிரபலமாக IAS தேர்வு என்று அழைக்கப்படுகிறது.


F.A.Q
IAS தேர்வு எழுதுவதற்கான கல்வித் தகுதி என்ன ?
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தகுதி பெற்றிருக்க வேண்டும்.



IAS தேர்விற்கான வயது வரம்பு என்ன 
குறைந்தபட்ச வயது : 
21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்



அதிகபட்ச வயது : 
பொதுப்பிரிவினர் (GENERAL) : 32 
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC) :35 
ஆதிதிராவிடர்c/பழங்குடியினர்(SC/ST) : 37.

Jan 14, 2017

டைப் செய்யாமலேயே வாட்ஸ்ஆப் மெசேஜ் அனுப்புவது எப்படி (ஆண்ட்ராய்டு).?


கூடுதல் தகவல்
டைப் செய்வதற்கு சோம்பேறித்தனம் என்று சொல்லி விட இயலாது. ஆனால் மிக நீளமான வாட்ஸ்ஆப் செய்திகளை டைப் செய்து-செய்து அலுத்து போய் விட்டது என்று சொல்லலாம். மிக முக்கியமாக மறுபக்கத்தில் இருந்து "ஓகே", "ஹ்ம்ம்" என்றெல்லாம் ரிப்ளை வரும் போதெல்லாம் இன்னும் அதிக சலிப்பாகும்..!

சரி உங்கள் ஆண்ட்ராய்டு கருவிகளில் இருந்து டைப் செய்யாமலேயே வாட்ஸ்ஆப் மெசேஜ் அனுப்புலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா.? தெரிந்துக் கொள்ள வேண்டுமா..!? சரி மேற்கொண்டு போகலாம்..!
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

கூடுதல் தகவல்

இன்னும் சொல்லப்போனால் இந்த தந்திரம் மூலம் உங்கள் ஆன்லைன் உங்கள் லாஸ்ட் சீன் ஆகிய எதுவுமே உங்கள் வாட்ஸ்ஆப் நண்பர்களின் கண்களுக்கு தென்படாது என்பது கூடுதல் தகவல். இதன் மூலம்நீங்கள் புறக்கணிக்க விரும்புபவர்களை எளிமையாக கையாளலாம்.



Jan 13, 2017

ஸ்மார்ட் டாட்டூஸ்: இனி தொட்டால் போதும்!



Image result for Duo Skin
நமது தோலின் மூலம் கருவிகளை கட்டுப்படுத்தும் ‘Smart’ Tattoos என்ற புதிய தொழிநுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை MIT Media Lab மற்றும் Microsoft Research ஆகியவை இணைந்து உருவாக்கி வருகிறது.
தோலின் மேல் தற்காலிக டாட்டூஸ்களை ஒட்டி அதனை கொண்டு நமது ஸ்மார்ட்போன், கணனி போன்றவற்றை நாம் கட்டுப்படுத்த முடியும்.
’Duo Skin’ எனப்படும் இந்த முறை மூலம் தோலின் மேற்புறத்தில் கருவிகளை கட்டுப்படுத்தும் தற்காலிக Circuit வரையப்படுகிறது.
இது Sensing Touch Input, Displaying Output மற்றும் Wireless Communication என 3 வகைகளில் உருவாக்கப்படுகிறது. கை, கழுத்து என அழகாகவும் இதை நாம் ஒட்டிக் கொள்ளலாம்.
நமது உடலில் ஏற்படும் மாற்றங்களையும் இது தெளிவாக காட்டுகிறது. இவற்றை நாம் தொட்டு இயக்குவதன் மூலம் நாம் அன்றாடம் கைகளில் வைத்து இயக்கி வரும் கருவிகளை எளிதாக இயக்க முடியும்.

Blog Archive

Translate