அல்லாஹ்வின் கண்ணியத்தில் கை வைத்த மிர்ஸா குலாம் அஹ்மது
மிர்ஜா குலாம் அஹ்மது பொய்யன் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள்
முன்னுரை
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே நாம் அனைவரும் பிறப்பின் அடிப்படையில் மனித சமுதாயமாகவும் ஆதம் (அலை) என்ற முதல் நபியின் பிள்ளைகளாகவும் இருக்கிறோம். நம்மில் நல்லவர்களும் உள்ளனர் தீயவர்களும் உள்ளனர் இதைப் பற்றி அறிந்து நம் பாதையை முறையாக்கிக்கொள்வதே இந்த கட்டுரையின் உட்கருத்தாகும்!
ஆதம் நபியின் நற்குணம்
முதல் மனிதராகவும், மனித வர்க்கத்தின் ஆதி பிதாவாகவும் திகழும் அன்பிற்கினிய நம் ஆதம் நபி (அலை) அவர்கள் இறைவனிடம் நேரடியாக பேச அனுமதியும், அருளும் பெற்றவராக திகழ்ந்தார். இறைவன் அவருக்கு கற்றுக்கொடுத்தான் இதற்கான ஆதாரம்
பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்;) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான். (அல்குர்ஆன் 2:37)