Jul 12, 2011

கூகுளின் புதிய பயனுள்ள இணையதளம்

இணையத்தில் கூகுள் நிறைய வசதிகளை வாசகர்களுக்கு தருகிறது. பிளாக்கர், யூடியூப், ஜிமெயில், மேப் என கூகுளின் சேவை விரிகிறது.இந்த சேவைகள் அனைத்தையும் கூகுள் வாசகர்களுக்கு இலவசமாக வழங்கி உள்ளது. இந்த வரிசையில் கூகுள் மேலும் ஒரு வசதியை அனைவருக்கும் வழங்கி உள்ளது. அது தான் What do you Love? என்பது.
இந்த தளம் மூலம் ஒரே நேரத்தில் கூகுளின் அனைத்து தளங்களிலும் தேடும் வசதி. இதனால் நாம் ஒவ்வொரு தளத்திலும் சென்று தனித்தனியாக தேடாமல் ஒரே இடத்தில் அனைத்து தளங்களிலும் தேடி வீணாகும் நம் நேரத்தை மிச்சமாக்கலாம்.
இந்த தளத்திற்கு சென்று நீங்கள் தேட விரும்பும் ஒரு குறிப்பிட்ட வார்த்தை நிரப்பி கீபோர்டில் என்டர் கொடுத்தால் போதும். அனைத்து கூகுள் தளங்களிலும் தேடல் முடிவு வந்திருக்கும்.
அதில் உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்து சென்றால் அந்த தளத்தில் தேடல் முடிவு ஓபன் ஆகும்.
இப்படி ஒரே நேரத்தில் கூகுளின் Image, Map, youtube, Gmail, Alert இப்படி பல தளங்களிலும் தேடுதல் முடிவை கொடுக்கும். இதில் கூகுளின் பெரும்பாலான தளங்கள் வரும். இன்னும் பல தளங்கள் சேர்க்கப்படும் என்று கூகுள் அறிவித்துள்ளது.
 
இணையதள முகவரி

Blog Archive

Translate