Jun 28, 2011


தமிழகத்தில் புதிய அமைச்சராக ஏ.முகமது ஜான் நியமனம்!

ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ முகம்மது ஜான் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 29ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இவரது பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத்துறைக்கு ஏற்கனவே அமைச்சராக நியமிக்கப்பட்ட மரியம் பிச்சை சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனால் தமிழக அமைச்சரவை முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் இல்லா அமைச்சரவையாக இதுவரை இருந்து வந்தது. தற்போது முகம்மது ஜான் அவர்கள் பொறுப்பை ஏற்பதால், அதிமுக அமைச்சரவையில் இடம் பெற்று இருக்கும் ஒரே முஸ்லிம் அமைச்சர் இவர் மட்டுமே ஆவார். ஆனால் கடந்த தி.மு.க அமைச்சரவையில் இரண்டு முஸ்லிம்கள் அமைச்சர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Translate