Mar 8, 2011





Hp Compaq Desktop PC

கம்ப்யூட்டர் பாவிக்கும் போது நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.கம்ப்யூட்டர் பூட் ஆகுவதற்கு அப்பிளிகேஷன்ஸ் ஓபன் பண்ணுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். ஆகவே கீழ்வரும் சில வழிமுறைகளை செய்து பாருங்கள் கணனியின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.




  • உங்கள் கணனி பூட் Boot) ஆகி முடியும் வரை எந்த அப்பிளிகேஷனையும் (Application) ஓப்பன் ( Open) பண்ணாதிருங்கள்.


  • ரிப்பிரஷ் ( Refresh) பண்ணுங்கள் ஏதாவது ஒரு அப்பிளிக்கேஷனை குளோஸ் பண்ணும் போதும்.அவ்வாறு பண்ணும் போது தேவையல்லாத பைல்கள் ரம்மில் ( RAM ) இருந்து நீக்கப்படும்.


  • டெக்ஸ்டோப்பில் பெரிய அளவிலான படங்களை ( Large file size images) வோல்பேப்பராக ( Wallpaper ) போடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.அதன் மூலமாக ரம்முக்கு ( RAM ) செல்லும் 64 (MB) மீதப்படுத்த முடியும்.


  • டெக்ஸ்டோப்பை ( Desktop ) ஷாட்கட்களால் Shortcuts) நிரப்பி வைக்க வேண்டாம்.தேவையான ஷாட்கட்டை மட்டும் வைத்திருங்கள்.ஒவ்வொரு ஷாட்கட்டுக்கும் 500 பைட்ஸ் ( Bytes) ரம்முக்கு ( RAM ) செல்லும்…


  • எப்போழுதும் ரிஸக்கல்பீன்குள் Recyclebin)  இருக்கும் அழித்த பைல்களை அதற்குள்ளும் இருந்து நீக்கி விடுங்கள்.


  • தினமும் இன்டநெட் டெம்பரி பைல்களை அழித்துவிடுங்கள்.Temporary Internet Files)


  • இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை டீபோறோமன்ட் Defragment) பண்ணுங்கள் அதன் மூலமாக உங்கள் ஹாட்டிஸ்கில் இருக்கும் இடைவெளிகள் சரி செய்யப்படும்.


  • உங்கள் ஹாட்டிஸ்கை இரு பார்டிஸ்சனாக ( Partitions) பிரித்து வையுங்கள்.ஒன்றில் சிஸ்டம் பைல்களும் மற்றையதில் அப்பிளிகேஷன் பைல்களையும் இன்ஸ்ரோல் பண்ண முடியும்.



இவ்வாறான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் கணனியை எப்போழுதும் வேகமாக வைத்திருக்க முடியும்
http://dilleepworld.blogspot.com/

Blog Archive

Translate