Jan 4, 2011


    بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
                                              மனித உடல் - இறைவனின் அற்புதம்!printEmail






அளவற்ற அருளாளன்நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின்திருப்பெயரால் (துவங்குகிறேன்).

இறைவனின் படைப்புகள் ஒவ்வொன்றும் தனக்கெனத் தனித்தனிச் சிறப்புக் கூறுகளைக் கொண்டுள்ளனஊர்ந்து செல்லும் எறும்பு,தனது உடல் எடையைவிடச் சுமார் எட்டு மடங்கு சுமையைச் சுமக்கும்ஒட்டகம்முற்செடியையும் வலியின்றி உட்கொண்டுஜீரணிப்பதோடு ஓரிரு வாரம் நீரின்றி உயிர் வாழும்.

ஆந்தைகும்மிருட்டிலும் தடுமாற்றமின்றிப் பறக்கும்மனிதன்பெற்றிராத உடற்கூறுகளைக் கொண்டுள்ள கோடிக் கணக்கானஜீவராசிகளை விடவும், "மனிதனை மிகச்சிறந்த படைப்பாகப் படைத்திருக்கிறோம்என்று அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்.இறைவனைப் புரிந்துகொள்ள நம் உடலின் அற்புத அமைப்புகளை உணர்ந்தாலே போதும்.

மருந்துகளும் மருத்துவச் சோதனைகளுமின்றி நோய் எதிர்ப்புச் சக்தியைத் தானாகவே உருவாக்கிக் கொள்ளும் வல்லமை நம் உடலுக்கு உண்டுஇயற்கையாகவே பெற்றிருக்கும் நோய் எதிர்ப்புச்சக்தி மனித உடலுக்கு இல்லை என்றால் சாதாரண எறும்பு கடித்தால்கூட மிகுந்த வேதனைப்பட நேரிடலாம்!கண்டதற்கெல்லாம் கடையடைப்புபோராட்டங்கள் நடத்தும் மனிதர்கள்
தம் உடல் உறுப்புக்களிடமிருந்துகடமையுணர்வைக் கற்றுக் கொள்ள வேண்டும்ஐம்புலண்களும் உறங்கினாலும் ஜீரண,சுத்திகரிப்புஉறுப்புகள் ஓய்வதில்லைகண்களுக்கு இணையாகத் தங்களுக்கும் ஓய்வு வேண்டும் என்று குடல் சுரப்பிகளும் போராட்டம் நடத்தினால் வாழ்நாளின் பாதியைக் கழிவறையிலேயே நாம் கழிக்க நேரிடும்!

சமீபத்தில் "டாக்டர் சன்நியூஸ்தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழகத்தின் பிரபலமான துறைசார் (Specialist)மருத்துவர்கள் நேயர்களின் கேள்விகளுக்குப் பதில் சொன்னார்கள்அழகு மற்றும் உறுப்புமாற்றுச்சிகிச்சைப் பற்றி ஒரு நேயர்சாலை விபத்தில் அவரது சகோதரரின் உயிர் உறுப்பில் அடிபட்டு ஒருபக்கவிறை (Tactical) சேதமடைந்து தற்போது ஒற்றை விறையுடன் உயிர் வாழ்வதாகச் சொன்னார்அதற்குப்பதிலளித்த உடற்கூறு சிறப்பு மருத்துவர், "மனிதன் உயிர்வாழ அவசியமான இரட்டை எண்ணிக்கையில்படைக்கப்பட்ட உறுப்புகளில் ஏதேனும் ஒன்று மட்டும் ஒழுங்காக இயங்கினாலே போதும்என்றார்.

இறைவன் தன் திருமறையில்,

 إِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ
நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பானஅளவின்படியே படைத்திருக்கிறோம்"(54:49) என்று கூறுகிறான்.

மனிதன் உயிர்வாழ அவசியமான உறுப்புகள் ஒன்று மட்டும் போதும் என்றாலும்உபரி உள்ளுறுப்புகளுடன்படைத்திருக்கும் இறைவனின் அன்பு அளவற்றதுதானேமேற்கண்ட பதிலைக் கேட்டதும் "அளவற்றஅருளாளன்நிகரற்ற அன்புடையோன்என அல்லாஹ்வை புகழ்வதிலுள்ள நியாயத்தை உள்மனம்உணர்ந்ததுஇருசிறுநீரகங்களும் பழுது அடைந்ததால் மாற்றுச் சிகிச்சைக்கு முன்/பின் எத்தனைவகையான சோதனைகள் மற்றும் சிரமங்கள்சிறுநீரகங்களில் ஒன்றை உயிர்காக்கும் உபரியாகப் படைத்து உடலை இயங்க வைத்துக் கொண்டிருக்கும் படைப்பாளர்களிளெல்லாம் மேலான படைப்பாளன்அல்லாஹ்வின் எல்லையில்லா அன்பை உணரலாம்.

மேலும் இறைவன் தன் திருமறையில்,

 وَصَوَّرَكُمْ فَأَحْسَنَ صُوَرَكُمْ وَإِلَيْهِ الْمَصِيرُ
"... அன்றியும் உங்களை உருவாக்கிஉங்கள் உருவங்களையும் அழகாக்கினான்அவனிடம்தாம்(யாவருக்கும்மீளுதல் இருக்கிறது" (064:003) என்கிறான்.

எல்லா மனிதர்களையுமே அழகாகப் படைத்திருப்பதாக படைத்தவனே வாக்குமூலம்கொடுத்திருக்கும்போதுமனிதர்களாகிய நாம்தான் சிலரை அழகானவர்கள் என்றும்வேறு சிலரை அழகற்றவர்கள் என்றும் பிரித்துக் கொண்டுள்ளோம்இந்த மனப்பான்மையால் தேகம் கருத்தவர்"என்னை கருப்பாகப் படைத்த இறைவன் எப்படி எல்லோருக்கும் அன்புடையவனாக இருக்க முடியும்?" என்று கேட்கக் கூடும் . இன்றைய உலகில் செயற்கை மேக்அப் மற்றும் ஆடைகளே மனிதர்களின் புறஅழகை நிர்ணயிக்கின்றனவெளிர்நிற தேகத்தை அழகின் அளவு கோளாகக் கருதும் மாயபிம்பம் நம்மில் பலரிடம்பதிக்கப்பட்டு விட்டதுகுறிப்பாக ஆசிய நாட்டவரில் இந்தியர்களிடம் இந்த மனப்பான்மை மிகுந்துள்ளது.

மருத்துவ ரீதியில் ஆரோக்கியமான உடலே அழகான உடலாகும்இரத்தத்தில் Melanin எண்ணிக்கையே தேகநிற வேறுபாட்டிற்குக் காரணம்பொதுவாகச் சூரிய ஒளி மிகுந்துள்ளப் பிரதேசங்களில் தான் கருந்தேகத்தவர்கள் அதிகம் இருப்பர்சூரியனிலிருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்களிலிருந்து (UV Rays)உடம்பைக் காப்பதோடு தோல் புற்று (Skin Cancer) ஏற்படாமல் Melanin காக்கிறதுநியாயமாகப் பார்த்தால்இந்தியா போன்ற சூரிய வெப்பமுள்ள நாடுகளில் வாழும் கருந்தேகத்தவர்கள் சந்தோஷப்பட வேண்டும்!

 لَقَدْ خَلَقْنَا الإنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ
"(திடமாக), நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்" என்ற (095:004) திருக்குர்ஆன்வசனங்கள் எத்தனை உண்மை!

இயற்கையாகவே மனித உடல் பெற்றிருக்கும் சில சிறப்புக் கூறுகளை அறிந்தால் மகத்தான இறைவனின் மறைந்திருக்கும் வல்லமைகளை உணரலாம்கட்டுரையின் நீளம் கருதிசுருக்கமாகச் சில உடலியல்அற்புதங்களை மட்டும் பார்ப்போம்:

உடலமைப்பு:
மனித உடல் பலகோடி உயிரணுக்களின் தொகுப்பால் ஆனதுஒரு சதுர அங்குல மனிதத்தோலில்  19,000,000உயிரணுக்கள் உள்ளனஒவ்வொரு மணிநேரமும் சுமார் ஒரு பில்லியன் உயிரணுக்கள் தோன்றிமறைகின்றன.ஒவ்வொரு மனித உடலும் சராசரியாக ஒரு நாயைக் கொல்லும் அளவுக்கு சல்ஃபர், 900பென்சில்களை உருவாக்கப் போதுமான கார்பன்,பொம்பைத் துப்பாக்கியை எரிக்கும் அளவுக்குபொட்டாசியம்ஏழு பார் சோப்பு செய்யும் அளவுக்கு கொழுப்பு, 2,200 தீக்குச்சிகள் செய்யப் போதுமானபாஸ்பரஸ்பத்து குடங்களை (Gallons) நிரப்பும் அளவுக்குத் தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டுள்ளதுநமதுஉடலிலுள்ள கனிமங்களைக் கொண்டு நமக்குத் தேவையான அனைத்து வகை மருந்துகளையும் உற்பத்திசெய்து கொள்ளமுடியும்.

இரத்த ஓட்டம்:
மனித உடலில் ஒவ்வொரு விநாடியும் சுமார் பத்து இலட்சம் சிவப்பணுக்குள் செத்து மடிகின்றனஉடம்புமுழுவதும் இரத்த ஓட்டத்தை எடுத்துச் செல்லும் நரம்புகளின் நீளம் ஏறத்தாழ ஒரு இலட்சம் மைல்கள்!ஒவ்வொரு நாளும் சிறுநீரகங்கள் வழியாக சுமார் 400 காலன் அளவுக்கு இரத்தம் சுத்தம் செய்யப்படுகிறது!

எலும்புகள்:
பிறகும்போது சுமார் 300 எலும்புகளுடன் பிறக்கும் மனிதன் முழுவளார்ச்சியடைந்த மனிதனாகும்போது 206எலும்புகளே இருக்கும்நாளடைவில் ஒன்றோடொன்று இணைவதால் சுமார்  94 எலும்புகள் குறைகின்றன!

மூளை:
வாலிப வயதை அடைந்ததும் சுமார் 35 வயது முதல் நாளொன்றுக்கு ஏழாயிரம் உயிரணுக்கள் மூளையில்சாகின்றனஅவற்றிக்குப் பதிலாக வேறு உயிரணுக்கள் தோன்றுவதில்லை. (வயதாக வயதாக மனிதனின்ஞாபக சக்தி குறைவதற்கு இதுவும் காரணமோ?). மனிதன் சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் ஐந்தில் ஒருபங்குமூளைக்குச் செல்கிறது!

குடல்:
இரு வாரங்களுக்கு ஒருமுறை குடற்சுவர் தானகவே புதுப்பிக்கப்படுகின்றதுஇல்லாவிட்டால் குடல்தன்னைத்தானே ஜீரணித்துக் கொள்ளும்!

ரேகைகள்:
மனிதனை வேறுபடுத்தி அறிய, அவனது கைரேகை உதவுகிறதுஅதேபோல் சருமம்நாக்கு ஆகியவையும்தனித்தனி ரேகைகளைக் கொண்டுள்ளனஇவை ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியான அமைப்பைக்கொண்டுள்ளது!

இத்தனை அற்புதங்களுடன் மனித உடலைப் படைத்திருக்கும் அல்லாஹ் நிச்சயமாகபடைப்பாளார்களிலெல்லாம் மிக அழகியப் படைப்பாளன்அவனை அளவற்ற அருளாளன் நிகரற்றஅன்புடையோன் என்றால் மிகையில்லை!

Blog Archive

Translate