Jun 23, 2016

நபி மொழிகளில் நவீன விஞ்ஞானம் (இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்?)



ணவு உட்கொள்ளப்பட்டவுடன்அது இரைப்பைக்கு (Stomach) சென்று பின்னர்குடல்களுக்குச் செல்கிறது. இவற்றில் நாம் உட்கொண்ட உணவுகளின் சத்துக்கள்உறிஞ்சப்பட்டுசக்கைகள் வேறாகவும்,சத்துப்பொருட்கள் வேறாகவும்பிரிக்கப்படுகின்றது. இந்த சத்துப்பொருட்கள் குடல்களிலுள்ள இரத்த நாளங்களின் (Blood Vessels of Intestine) வழியாக இரத்த ஓட்டத்தைச் (Blood Circulation) சென்றடைகிறது.
இந்த இரத்த ஓட்டம் நாம் உண்ட உணவின் சத்துப் பொருட்களை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் சென்று அந்த உறுப்புகள் சீராக இயங்குவதற்கு உதவுகிறது உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமாஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போதுஅதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம். * மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படிமாத்திரைசாப்பிட்டவுடன்அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ளஇடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன?எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்துமாவுச் சத்துபுரதம்தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.
ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்னநுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் – டை ஆக்சைடைநுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.இவ்வாறு இரத்த ஓட்டத்தின் மூலம் நம்முடைய உட ற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் வண்ணம் படைத்த ரப்புல் ஆலமீன் அழகிய முறையில் படைத்துள்ளான்.
இப்படிப்பட்ட இந்த இரத்த ஓட்டம் மனிதனின் உடலில் உள்ளது என்பதை முதன் முதல் கண்டுபிடித்தவர் யார் ? உயிரினங்களின் இரத்த ஓட்டம் பற்றிய அறிவியலை இப்னு நஃபீஸ் என்பவரே முதன்முதலாக கண்டறிந்து கூறினார்.
இது நடந்தது குர்ஆன் இறக்கியருளப்பட்ட 600 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆகும். இவருக்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த வில்லியம் ஹார்வி என்பவர் இரத்த ஓட்டம் பற்றிய இந்த அறிவியலை மேலை நாடுகளுக்கும்உலக நாடுகளுக்கும் எடுத்துக்கூறி இதை பிரபல்யப்படுத்தினார். வில் யம் ஹார்வி என்ற அறிவியலாளர் பிறந்தஆண்டு கி.பி. 1578 ஆகும்.
ஆனால் இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உடல் இரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்ற உண்மைத் தகவலை அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மனித சமுதாயத்திற்கு எடுத்துரைத்து விட்டார்கள். எப்படித் தெரியுமா?
இதோ இறைத்தூதர் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.

عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ وَعِنْدَهُ أَزْوَاجُهُ فَرُحْنَ فَقَالَ لِصَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ لَا تَعْجَلِي حَتَّى أَنْصَرِفَ مَعَكِ وَكَانَ بَيْتُهَا فِي دَارِ أُسَامَةَ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهَا فَلَقِيَهُ رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَنَظَرَا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ أَجَازَا وَقَالَ لَهُمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعَالَيَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ قَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ الْإِنْسَانِ مَجْرَى الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يُلْقِيَ فِي أَنْفُسِكُمَا شَيْئًا   رواه البخاري
ஸஃபிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள்பள்ளிவாச லில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ”அவசரப்படாதே! நானும் உன்னோடு வருகிறேன்!” என்றார்கள். என் அறை உசாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போதுஅன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்துஅவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, ”இங்கே வாருங்கள்! இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!எனக் கூறினார்கள். அவ்விருவரும் சுப்ஹானல்லாஹ்(அல்லாஹ் தூயவன்) அல்லாஹ்வின் தூதரே!” என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள்நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் ஓடிக் கொண்டிருக்கின்றான் உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்” என்று தெளிவுபடுத்தினார்கள். நூல் : புகாரி (2038)

Jun 22, 2016

“பெண்களை அறைகளில் தங்க வைக்காதீர்கள்!




   “பெண்களை அறைகளில் தங்க வைக்காதீர்கள்!எழுதும் முறையை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்காதீர்கள்கைத்தறியையும் அந்நூர்அத்தியாயத்தையும் கற்றுக் கொடுங்கள்!”என்று நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்ஆயிஷா (ரலி)நூல்ஹாகிம் (3494)இதே கருத்து தப்ரானியின்முஃஜமுல் அவ்ஸத் என்ற நூலிலும் பைஹகீ அவர்களுக்குரிய ஷுஅபுல்ஈமான் என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்குஎன்ற பழமொழியை நபி (ஸல்)அவர்கள் தான் சொல்லித் தந்திருப்பார்களோ என்று நாம் எண்ணும் வண்ணம்இந்த செய்தி அமைந்துள்ளது.

பெண்கள் வேலை செய்தவற்கு என்றே படைக்கப்பட்டவர்கள்அவர்களுக்குபடிப்புத் தேவையில்லைஅவர்கள் சிறு தொழிலை கற்றுக் கொண்டு வேலைசெய்து கொண்டிருக்கட்டும்மார்க்கம் தொடர்பான செய்திகளை அறிந்து நூர்அத்தியாயத்தைக் கற்றுக் கொள்ளட்டும்அவர்களை நல்ல அறைகளில் தங்கவைக்க வேண்டாம்!  என்று இச்செய்தி நமக்கு உணர்த்துகிறது!முதலில்இந்தச் செய்தி அறிவிப்பாளர் வரிசைப் படி சரியானதாஎன்பதைநாம்  பார்ப்போம்இச் செய்தியைப் பதிவு செய்த இமாம் ஹாகிம் அவர்கள், “இந்தச் செய்தி ஆதாரப்பூர்மானது” என்று இச்செய்தியைப் பதிவு செய்துவிட்டு அதன் இறுதியில் குறிப்பிடுகிறார்கள்.ஆனால் இவர்களின் இக்கூற்று சரியானது அல்ல என்பதை இந்த நூலுக்குவிளக்கவுரை எழுதிய இமாம் தஹபீதனது தல்கீஸ் எனும் நூலில் “இதுஇட்டுக்கட்டப்பட்டது” என்றும் இந்த செய்தியின் அபாயகரமான நபர் (இச்செய்தியின் ஐந்தாவது அறிவிப்பாளர்அப்துல் வஹ்ஹாப் என்பவராவார்.இவரைப் பெரும் பொய்யர் என்று அபூஹாத்திம் கூறியுள்ளார்கள் என்றும்தெளிவுபடுத்தியுள்ளார்கள்.மேலும் இவரைப் பற்றி இமாம் புகாரீ அவர்கள், “இவரிடம் (அடிப்படைஇல்லாதபுதுமையான செய்திகள் உண்டு” என்றும் “இவர் இட்டுக்கட்டிசொல்பவர்” என்று இமாம் அபூதாவூத் அவர்களும், “இவர் விடப்படவேண்டியவர்” என்று இமாம் உகைலீதாரகுத்னீபைஹகீ ஆகியோரும்குறிப்பிட்டுள்ளனர்.

இமாம் நஸயீ அவர்கள் “இவர் நம்பகமானவர் இல்லை” என்றும் இவருடையபெரும்பாலான செய்திகள் இட்டுக்கட்டப் பட்டவை என்று ஸாலிஹ் பின்முஹம்மத் அவர்களும் குறிப்பிட்டுள்ளனர். (தஹ்தீபுத் தஹ்தீப்பாகம்: 6,பக்கம்: 395)எனவே இந்தச் செய்தி அறிவிப்பாளர் வரிசையின் அடிப்படையில்ஆதாரத்திற்கு ஏற்றது அல்ல என்பது நிரூபணமாகிறது.இதே செய்தி இடம் பெறும் தப்ரானீயின் அல்முஃஜமுல் அவ்ஸத் என்றநூலில் அப்துல் வஹ்ஹாப் என்பவர் அல்லாமல் வேறு அறிவிப்பாளர்வரிசையில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அதிலும் பலவீனம் இருக்கிறது.இந்த நூலில் இடம் பெறும் ஐந்தாவது அறிவிப்பாளர்முஹம்மத் பின்இப்ராஹீம்  என்பவர் “பெரும் பொய்யர்” என்று இமாம் தாரகுத்னீ அவர்களும்இவருடைய செய்திகளை (இட்டுக்கட்டப்பட்டது என்றுதெளிவுபடுத்துவதற்காகவே தவிர அறிவிக்கக் கூடாதுஏனெனில் இவர் (நபிகளார்மீதுஇட்டுக்கட்டிச் சொல்பவர்” என்று இப்னுஹிப்பான் அவர்களும்குறிப்பிட்டுள்ளார்கள். “இவருடைய பெரும்பாலான செய்திகள் சரியானவைஅல்ல” என்று இப்னு அதீ அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். (மீஸானுல்இஃதிதால்பாகம்: 6, பக்கம்: 33)எனவே இந்தச் செய்தியும் அறிவிப்பாளர் வரிசையின் அடிப்படையில்பின்பற்றுவதற்குரிய தகுதியை இழக்கிறதுமேலும் திருக்குர்ஆன் மற்றும்ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் யாவும் பெண்கள் கற்றுக் கொள்ளலாம் என்றகருத்தையே தருகிறன.இஸ்லாமிய மார்க்கம்கல்வியின் சிறப்பைப் பற்றிப் பேசும் போது ஆண்கள்,பெண்கள் என்று பிரித்துப் பேசவில்லைபொதுவாகவே பேசுகிறதுமேலும்அடிமைகள் நிறைந்த அந்தக் காலத்தில்அடிமைப் பெண்களுக்கும் கூட நபி(ஸல்) அவர்கள் கல்வி கற்றுக் கொடுக்க ஆர்வமூட்டியுள்ளார்கள்.

மூன்று மனிதர்களுக்கு (அல்லாஹ்விடத்தில்இரண்டு விதக் கூலிகள்உண்டுஒருவர் வேதத்தையுடையவர்களில் உள்ளவர்இவர் தமது(சமூகத்திற்கு அனுப்பப்பட்டதூதரையும் முஹம்மதையும் நம்பியவர்.மற்றொருவர் தமது இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும்தமது எஜமானனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும்அடிமைமூன்றாமவர் தம்மிடத்தில் உள்ள ஒரு அடிமைப் பெண்ணுக்குஒழுக்கப் பயிற்சி அளித்துஅந்தப் பயிற்சியை அழகுறச் செய்துஅவளுக்குக்கல்வியைக் கற்பித்துஅதை அழகுறக் கற்றுத் தந்து பின்னர் அவளைஅடிமையிலிருந்து விடுவித்து அவளை மணந்து கொண்டவர்.இம்மூவருக்கும் இரண்டு விதக் கூலிகள் உண்டு” என்று நபி (ஸல்அவர்கள்கூறினார்கள்.அறிவிப்பவர்அபூமூஸா (ரலி)நூல்புகாரீ (97)இது போன்ற செய்திகள் மூலம்நபிகளார் பெண்களை எழுதப்படிக்க ஆர்மூட்டிருக்கிறார்கள் என்பதையும் அதை ஆட்சேபணைசெய்யவில்லை என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம்மேலும் கல்விஇல்லாத காரணத்தால் தான் இன்று பெண்கள் பரவலாகஏமாற்றப்படுகிறார்கள்.படிப்பு அவர்களிடம் இருக்குமானால் அதன் மூலம் அவர்கள் எச்சரிக்கையாகஇருப்பதற்கு உதவும்மேலும் மார்க்க விஷயங்களை அறிந்து கொள்வதற்கும்இவை பேருதவியாக இருக்கும்.எனவே பெண்கள் கல்வி கற்பதை இஸ்லாம் தடை செய்யவில்லைமாறாகஆர்வமூட்டவே செய்கிறது என்பது தெளிவான செய்தியாகும்.

Translate