கூகுளின் சமூக வலைத்தளமான கூகுள் பிளஸ் புதிய வசதிகளை அறிமுகம் செய்து கொண்டே வருகிறது.
கூகுள் பிளஸ் பட்டன், பக்கங்கள் உருவாக்குதல், பக்கங்களுக்கான பேட்ஜ் போன்றவைகள் உருவாக்கப்பட்டு மற்றொரு தளமான பேஸ்புக்கிற்கு நிகராக போட்டிகளைக் கொடுத்து வருகிறது.
தற்போது வரை நமது கூகுள் மின்னஞ்சல் முகவரி தெரிந்திருந்தால் மட்டுமே கூகுள் பிளசிலும் பேசிக் கொள்ள முடியும். இப்போது நமது வட்டத்திற்குள் இருக்கும் நண்பர்களுக்குள் பேசிக் கொள்ளும் வசதியினை(Chatting) கொண்டு வந்திருக்கிறது.
Chatting வசதியின்றி சமூக வலைத்தளங்கள் பிரபலமாவதில்லை தானே. இப்போது இதனையும் கூகுள் பிளஸ் எற்படுத்தியிருக்கிறது.
கூகுள் பிளஸில் நமது வட்டத்திற்குள் இருப்பவர்கள், அவர்களின் வட்டத்திற்குள்ளும் நம்மைச் சேர்த்திருப்பார்கள் என்றால் அவர்களிடம் நாம் எளிதாக சாட்டிங் செய்யலாம். கூகுள் பிளஸ் மூலம் சேர்ந்து நண்பர்களானவர்களிடம் நாம் வேறு இடைமுகங்களான GMail, iGoogle, Google Talk போன்ற இடங்களிலும் சாட்டிங் செய்து கொள்ள முடியும்.
கூகுள் பிளசில் யாரென்று தெரியாத பல நண்பர்கள் நம் வட்டத்திற்குள் இருக்கலாம். அதனால் பல குழப்பங்கள் ஏற்படாதபடி கூகுள் பிளஸ் அடிக்கடி பேசுபவர்களின் பெயரை மட்டும் சாட்டிங் வரிசையில் தற்போது காண்பிக்கும். இருப்பினும் அவர்களது பெயரை Chat Box இல் தட்டச்சிட்டுத் தேடி சாட்டிங் செய்து கொள்ள முடியும்.
மேலும் நமது வட்டத்திற்குள்ளேயே Family, Friends, Relatives என்று பல வட்டங்கள் பிரித்திருப்போம். குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே பேசிக் கொள்ள நினைத்தால் Chat என்பதற்கு நேராக உள்ள சின்ன வட்டத்தைக் கிளிக் செய்து Privacy Settings என்பதில் செல்லவும். அதில் Your Circles மற்றும் Custom என்று இருக்கும்.
Your Circles: இதில் உங்கள் வட்டத்திலிருக்கும் எல்லோரிடமும் பேச அப்படியே விட்டு விடுங்கள்.
முக்கிய வசதி: கூகுள் பிளசில் சாட்டிங் வசதி தொந்தரவாக இருப்பின் அதை மட்டும் Sign Out செய்து கொண்டு தளத்தில் தொடரலாம். வேண்டுமெனில் Sign In செய்து சாட்டிங் வசதியில் இருக்கலாம்.
|
Nov 24, 2011
கூகுள் பிளஸில் புத்தம் புதிய வசதி அறிமுகம்
பென்ட்ரைவினை பாதுகாக்க சில வழிகள்
இப்பொழுதெல்லாம் யூஎஸ்பி பென்ட்ரைவ் இல்லாதவர்களை பார்ப்பது மிகவும் அரிது. ஏனெனில் கணணி பயன்பாடு அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.
கணணி எப்படி எல்லோருக்கும் தெரிந்திருக்கிறதோ அது போல் பென்ட்ரைவினையும் தெரியும் ஏன் என்றால் இப்பொழுது வரும் ம்யூசிக் சிஸ்டங்கள் எல்லாம் யூஎஸ்பி பென்ட்ரைவ் ஆதரிக்கும் வகையில் வெளிவருகிறது.
அது போலவே எல்சிடி, எல்இடி டிவிக்களும், டிவிடி ப்ளேயர்களும் பென்ட்ரைவினை ஆதரிக்கும் வகையில் வெளிவருகிறது. அதனால் எல்லோருக்கும் பென்ட்ரைவினை பாதுகாக்கும் வழிகள் தெரிந்து கொள்ள ஆசை வருகிறது.
1. Disabled Autorun - ஆட்டோ ரன் நிறுத்தம்: பென்ட்ரைவினை கணணியில் செருகியவுடன் ஆட்டோ ரன் ஆகும். இதனால் இதில் உள்ள கோப்புகள் எந்த மென்பொருள் மூலம் திறக்க வேண்டும் என்று விண்டோஸ் காட்டும். இதன் மூலம் வைரஸ்களும் எளிதாக தொற்றும். இதை முதலில் தடுக்க வேண்டும். இதற்கு AutoRun Disable செய்ய வேண்டும்.
இதற்கு மைக்ரோசாப்டிலேயே தனியாக பேட்ச் மென்பொருள் கிடைக்கிறது. இதை நிறுவினால் உங்கள் கணணியில் சீடி, டிவிடி, பென்ட்ரைவ் எது போட்டாலும் தானாக ப்ளே செய்யாது. அதாவது Auto Play Run தானாக நடக்காது.
2. Scan Your Pen Drive - பென்ட்ரைவினை சோதித்தல்: ஒவ்வொரு முறை உங்கள் பென்ட்ரைவினை கணணியில் செருகும் பொழுது உங்கள் கணணியில் உள்ள ஆன்டிவைரஸால் கட்டாயம் சோதிக்க வேண்டும். இதன் மூலம் கணணியிலும் வைரஸ் வராமல் தடுக்க முடியும். அத்துடன் பென்ட்ரைவினில் வைரஸ் இருந்தாலும் தடுக்க முடியும்.
அதற்கு உங்கள் கணணியில் நல்ல ஆன்டிவைரஸ் கட்டாயம் நிறுவி இருக்க வேண்டும். ஆன்டிவைரஸ் நிறுவுவதோடு நின்று விடாமல் உங்கள் ஆன்டிவைரஸ் தினமும் அப்டேட் ஆகிறதா என்றும் சோதித்துக் கொள்ளுங்கள்.
பென்ட்ரைவினை செருகியவுடன் உங்கள் கணணியில் Go To > My Computer > சென்று அங்கு உங்களுடைய பென் ட்ரைவினை Right Click செய்து Scan செய்யவும்.
3. Safely Remove Your Pen Drive - பென் ட்ரைவினை பாதுகாப்பாக நிறுத்துதல்:இது முக்கியமான ஒன்று நிறைய பேர் இந்த தவறினை செய்கிறார்கள். அது என்னவென்றால் பென்ட்ரைவில் இருக்கும் கோப்புகளை நேரடியாக பென்ட்ரைவ் வழியாக திறப்பது. சரி திறப்பது கூட பரவாயில்லை அந்த கோப்பினை பென்ட்ரைவில் வைத்து கொண்டே வேலை செய்வது.
இதனால் என்னாகிறது பென்ட்ரைவ் தொடர்ந்து வேலை செய்ய வேண்டி வரும். இதனால் சீக்கிரம் பென்ட்ரைவ் பழுதாகிறது. இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் பென்ட்ரைவில் எந்த கோப்பினை எடிட் செய்ய விரும்புகிறீர்களோ அதை கணணியில் சேமித்து விட்டு பிறகு கணணியில் இருந்து எடிட் செய்யுங்கள். அதுவே மிகவும் சிறந்தது.
அடுத்து யூஎஸ்பியை நிறுத்தாமல் அப்படியே பென்ட்ரைவினை பிடுங்குவது. எல்லோருமே யூஎஸ்பி பொருட்களான பென்ட்ரைவ், டிவிடி ட்ரைவ் பாக்கெட் ஹார்ட் டிஸ்க்குகள் போன்றவற்றை விண்டோஸில் இணைந்திருக்கும் மென்பொருட்கள் வழியாக நிறுத்திய பிறகே எடுக்க வேண்டும்.
அப்படி இல்லாவிடில் சிறு மென்பொருட்கள் இருக்கிறது. யூஎஸ்பியை நிறுத்துவதற்கென்றே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் நமக்கு தேவையான யூஎஸ்பி பென்ட்ரைவ் அல்லது வேறு எந்த யூஎஸ்பி வன் பொருட்களையும் இந்த மென்பொருட்கள் மூலம் நிறுத்திய பிறகு எடுக்கலாம்.
கணணி எப்படி எல்லோருக்கும் தெரிந்திருக்கிறதோ அது போல் பென்ட்ரைவினையும் தெரியும் ஏன் என்றால் இப்பொழுது வரும் ம்யூசிக் சிஸ்டங்கள் எல்லாம் யூஎஸ்பி பென்ட்ரைவ் ஆதரிக்கும் வகையில் வெளிவருகிறது.
அது போலவே எல்சிடி, எல்இடி டிவிக்களும், டிவிடி ப்ளேயர்களும் பென்ட்ரைவினை ஆதரிக்கும் வகையில் வெளிவருகிறது. அதனால் எல்லோருக்கும் பென்ட்ரைவினை பாதுகாக்கும் வழிகள் தெரிந்து கொள்ள ஆசை வருகிறது.
1. Disabled Autorun - ஆட்டோ ரன் நிறுத்தம்: பென்ட்ரைவினை கணணியில் செருகியவுடன் ஆட்டோ ரன் ஆகும். இதனால் இதில் உள்ள கோப்புகள் எந்த மென்பொருள் மூலம் திறக்க வேண்டும் என்று விண்டோஸ் காட்டும். இதன் மூலம் வைரஸ்களும் எளிதாக தொற்றும். இதை முதலில் தடுக்க வேண்டும். இதற்கு AutoRun Disable செய்ய வேண்டும்.
இதற்கு மைக்ரோசாப்டிலேயே தனியாக பேட்ச் மென்பொருள் கிடைக்கிறது. இதை நிறுவினால் உங்கள் கணணியில் சீடி, டிவிடி, பென்ட்ரைவ் எது போட்டாலும் தானாக ப்ளே செய்யாது. அதாவது Auto Play Run தானாக நடக்காது.
2. Scan Your Pen Drive - பென்ட்ரைவினை சோதித்தல்: ஒவ்வொரு முறை உங்கள் பென்ட்ரைவினை கணணியில் செருகும் பொழுது உங்கள் கணணியில் உள்ள ஆன்டிவைரஸால் கட்டாயம் சோதிக்க வேண்டும். இதன் மூலம் கணணியிலும் வைரஸ் வராமல் தடுக்க முடியும். அத்துடன் பென்ட்ரைவினில் வைரஸ் இருந்தாலும் தடுக்க முடியும்.
அதற்கு உங்கள் கணணியில் நல்ல ஆன்டிவைரஸ் கட்டாயம் நிறுவி இருக்க வேண்டும். ஆன்டிவைரஸ் நிறுவுவதோடு நின்று விடாமல் உங்கள் ஆன்டிவைரஸ் தினமும் அப்டேட் ஆகிறதா என்றும் சோதித்துக் கொள்ளுங்கள்.
பென்ட்ரைவினை செருகியவுடன் உங்கள் கணணியில் Go To > My Computer > சென்று அங்கு உங்களுடைய பென் ட்ரைவினை Right Click செய்து Scan செய்யவும்.
3. Safely Remove Your Pen Drive - பென் ட்ரைவினை பாதுகாப்பாக நிறுத்துதல்:இது முக்கியமான ஒன்று நிறைய பேர் இந்த தவறினை செய்கிறார்கள். அது என்னவென்றால் பென்ட்ரைவில் இருக்கும் கோப்புகளை நேரடியாக பென்ட்ரைவ் வழியாக திறப்பது. சரி திறப்பது கூட பரவாயில்லை அந்த கோப்பினை பென்ட்ரைவில் வைத்து கொண்டே வேலை செய்வது.
இதனால் என்னாகிறது பென்ட்ரைவ் தொடர்ந்து வேலை செய்ய வேண்டி வரும். இதனால் சீக்கிரம் பென்ட்ரைவ் பழுதாகிறது. இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் பென்ட்ரைவில் எந்த கோப்பினை எடிட் செய்ய விரும்புகிறீர்களோ அதை கணணியில் சேமித்து விட்டு பிறகு கணணியில் இருந்து எடிட் செய்யுங்கள். அதுவே மிகவும் சிறந்தது.
அடுத்து யூஎஸ்பியை நிறுத்தாமல் அப்படியே பென்ட்ரைவினை பிடுங்குவது. எல்லோருமே யூஎஸ்பி பொருட்களான பென்ட்ரைவ், டிவிடி ட்ரைவ் பாக்கெட் ஹார்ட் டிஸ்க்குகள் போன்றவற்றை விண்டோஸில் இணைந்திருக்கும் மென்பொருட்கள் வழியாக நிறுத்திய பிறகே எடுக்க வேண்டும்.
அப்படி இல்லாவிடில் சிறு மென்பொருட்கள் இருக்கிறது. யூஎஸ்பியை நிறுத்துவதற்கென்றே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் நமக்கு தேவையான யூஎஸ்பி பென்ட்ரைவ் அல்லது வேறு எந்த யூஎஸ்பி வன் பொருட்களையும் இந்த மென்பொருட்கள் மூலம் நிறுத்திய பிறகு எடுக்கலாம்.
கூகுளுக்கு போட்டியாக ஒரு தேடியந்திரம்
புதிய தேடியந்திரங்களிலேயே ஸ்மார்ட் ஆஸ் தேடியந்திரத்தை மிகவும் துணிச்சலானது என்று சொல்லலாம்.
கூகுளுக்கு போட்டியாக முளைத்த எண்ணற்ற தேடியந்திரங்கள் காணாமல் போய்விட்ட நிலையில் புதிதாக முளைத்துள்ள இந்த ஸ்மார்ட் ஆஸ் கூகுளை விட மேம்பட்ட தேடியந்திரம் என்று சொல்வதற்கில்லை. தேடல் உலகை புரட்டிப்போடக்கூடிய புதிய தொழில்நுட்பம் இதன் வசம் இருப்பதாகவும் தெரியவில்லை.
ஆனால் கூகுளைப் போல விளம்பர நோக்கிலான முடிவுகள் இல்லாமல் தேடல் முடிவுகளை மட்டுமே இணையவாசிகளுக்கு முன்வைப்பதை ஸ்மார்ட் ஆஸ் தனது தனிச்சிறப்பாக கருதுகிறது.
கூகுள் தனது பேராசையால் தேடல் முடிவுகளோடு விளம்பர நோக்கிலான முடிவுகளையும் திணித்து அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியிருப்பதாக கூறும் ஸ்மார்ட் ஆஸ் பலரும் இந்த நிலையில் மாற்றம் தேவை என்று விரும்புவதாகவும் தெரிவிக்கிறது
கூகுளுக்கு போட்டியாக முளைத்த எண்ணற்ற தேடியந்திரங்கள் காணாமல் போய்விட்ட நிலையில் புதிதாக முளைத்துள்ள இந்த ஸ்மார்ட் ஆஸ் கூகுளை விட மேம்பட்ட தேடியந்திரம் என்று சொல்வதற்கில்லை. தேடல் உலகை புரட்டிப்போடக்கூடிய புதிய தொழில்நுட்பம் இதன் வசம் இருப்பதாகவும் தெரியவில்லை.
ஆனால் கூகுளைப் போல விளம்பர நோக்கிலான முடிவுகள் இல்லாமல் தேடல் முடிவுகளை மட்டுமே இணையவாசிகளுக்கு முன்வைப்பதை ஸ்மார்ட் ஆஸ் தனது தனிச்சிறப்பாக கருதுகிறது.
கூகுள் தனது பேராசையால் தேடல் முடிவுகளோடு விளம்பர நோக்கிலான முடிவுகளையும் திணித்து அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியிருப்பதாக கூறும் ஸ்மார்ட் ஆஸ் பலரும் இந்த நிலையில் மாற்றம் தேவை என்று விரும்புவதாகவும் தெரிவிக்கிறது
அந்த விருப்பத்தை நிறைவேற்றி வைக்கும் நோக்கத்தோடு ஸ்மார்ட் ஆஸ் உதயமாகியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கூகுளுக்கு பழகியவர்கள் அதிலிருந்து விலகி வர இந்த வாதம் மட்டுமே போதுமா என்று தெரியவில்லை.
ஆனால் ஸ்மார்ட் ஆஸிடம் இந்த நம்பிக்கை அதிகமாகவே இருக்கிறது. தேடலுக்கு மட்டும் அல்ல மின்னஞ்சலுக்கும் கூட இணையவாசிகள் தனது சேவையை பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையோடு ஸ்மார்ட் ஆஸ் மின்னஞ்சல் சேவையையும் துவக்கியுள்ளது. பெயருக்கு பின் "ஸ்மார்ட் ஆஸ்" என்று முடியும் மின்னஞ்சல் சேவையை யார் விரும்பி பயன்படுத்துவார்கள் என்பதும் கேள்விக்குறி தான்?
ஆனால் ஒன்று இந்த தேடியந்திரம் சுவாரஸ்யமானதாகவே இருக்கிறது. ஆஸ்க் ஜீவ்ஸ் தேடியந்திரத்துக்கு அடையாளமாக ஜீவ்ஸ் பட்லர் இருந்தது போல இதற்கும் ஒரு புத்திசாலி கழுதை அடையாளமாக இருக்கிறது. அந்த கழுதை அவ்வப்போது உதிர்க்கும் பொன்மொழிகள் பல விடயங்களை கற்றுத்தரக்கூடும்.
அதோடு இணையவாசிகளுக்கு என்று போட்டியும் நடத்தப்பட்டு பரிசும் வழங்கப்படுகிறது. இணையவாசிகள் சமர்பிக்கும் வாசகம் கழுதையின் பொன்மொழியாக இடம்பெறும் வாய்ப்பும் இருக்கிறது.
அது மட்டும் அல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் போது நண்பர்களுக்கும் காதலர்களுக்கும் வாழ்த்து செய்தி அனுப்புவது போல் இந்த தேடியந்திரத்தில் இணையவாசிகள் தாங்கள் விரும்பும் வாழ்த்து செய்தியையும் இடம் பெற வைக்கலாம்.
புதிய அணுகுமுறையோடு இணையத்தில் தேடுங்கள் என்று அழைப்பு விடுக்கும் ஸ்மார்ட் ஆஸ் தன்னிடம் இணைய முகவரிகளை பதிவு செய்து கொள்ளவும் வேண்டுகோள் வைக்கிறது. இந்த தேடியந்திரம் தகுதி வாய்ந்தது தானா என்று இணையவாசிகள் இதனை பயன்படுத்தி
பார்க்கலாம்.
இணையதள முகவரி
Nov 22, 2011
உடற்பயிற்சியும் சில உண்மைகளும்! | ![]() | ![]() |
![]()
உடற்பயிற்சி வாழ்வில் முக்கியமான ஒன்று. உடல் கொஞ்சம் வெயிட் அதிகமாகிவிட்டதால் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் சாப்பாட்டைக்குறை, உடற்பயிற்சி செய் என ஏகப்பட்ட அறிவுரை.
நாம் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. ஆனால் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் போது நம்மில் பலர் தவறான அறிவுரையாலும், கருத்துக்களாலும் குழப்பம் அடைந்து தாறுமாறாக உடற்பயிற்சி செய்ய நேரிடுகிறது.
மேலும், நாம் டி.வி.யில் காணும் சில விளம்பரங்கள் "பதினான்கு நாட்களில் கட்டுடலுக்கு உத்தரவாதம்" என்றும், மற்றும் சில விளம்பரங்கள் "தினமும் நான்கு நிமிடங்கள் செய்தாலே அழகான உடல்கட்டு கிடைக்கும்" என்று கூறுகின்றன.
இந்தக் கட்டுரை உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்பவர்களுக்கு அவர்களது குழப்பங்களை அகற்றவும், தவறான கருத்துக்களை நீக்கி, தெளிவு பெற்று, நோயற்ற வாழ்வு என்னும் குறைவற்ற செல்வத்தை அடையவும் உதவும் சிறிய முயற்சியாகும்.
கருத்து: 1
தொந்தியைக் குறைப்பதற்கு சிறந்த வழி நமது உடலின் நடுப்பாகத்திற்கு (வயிற்றுப் பகுதிக்கு) பயிற்சி கொடுக்க வேண்டும்.
இது ஒரு தவறான கருத்து.
நம்மில் பலர் எந்த இடத்தில் கொழுப்பு அதிகமாக சேர்ந்து இருக்கிறதோ, அந்த இடத்தில் உள்ள தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் கொழுப்பு கரைந்து தொந்தி குறையும் என்று எண்ணுகிறோம். ஆனால் ஆய்வுகள் தெரியப்படுத்துவது என்னவென்றால், நாம் பயிற்சி கொடுக்கும் இடத்தில் உள்ள கொழுப்புகள் கரைவதில்லை.
இப்படிச் செய்வதற்கு பதில், நாம் உடற்பயிற்சியுடன் கூடிய உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தால் நமது உடம்பிலுள்ள கொழுப்புகள் எல்லா இடங்களிலும் சீராகக் குறையும் போது நமது இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பும் கரைந்து தொந்தி குறையும்.
கருத்து: 2
வாரத்துக்கு இரண்டு நாட்கள் உடற்பயிற்சி செய்தாலே நமது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு போதுமானது.
இதுவும் தவறான கருத்து.
எப்படி விட்டமின்கள் நமது உடலுக்கு தினசரி தேவையோ, அதுபோல் மிதமான உடற்பயிற்சியும், நமக்கு தினசரி தேவை.
ஏனென்றால், உடற்பயிற்சிகளால் ஏற்படும் நல்ல மாற்றங்களை 48 முதல் 72 மணி நேரங்கள் வரைதான் நமது தசைகளால் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
ஆகவே நமது தசைகளும், அவற்றுடன் தொடர்புடைய நமது இரத்த, சுவாச, செரிமான உறுப்புகளும் உறுதியாகவும், நல்ல நிலையில் இயங்க குறைந்தது வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் (ஒரு நாள் விட்டு ஒரு நாள்) உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
கருத்து: 3
எடையைக் குறைப்பதற்கு வியர்வை வெள்ளம் போல் கொட்டும் அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
இதுவும் ஒரு தவறான கருத்து.
வியர்வையானது உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதற்கு மட்டுமே உதவும். அது நமது எடையைக் குறைக்க உதவாது.
வேர்வை பொங்க கடுமையான உடற்பயிற்சி செய்த பிறகு நமது உடல் எடை குறைந்தாலும் அது உடலில் உள்ள நீரின் அளவு குறைவதால் ஏற்படும் தற்காலிக எடை குறைவே ஆகும்.
இதை விடுத்து உடல் தசைகளுக்கு கடுமையான பயிற்சி கொடுக்காமல் மிதமாக பயிற்சிக் கொடுத்தாலே நல்ல பலன் கிடைக்கும்.
கருத்து: 4
நடப்பது நல்ல உடற்பயிற்சிகளுள் ஒன்று.
உண்மை.
நடக்கும் போது இரத்த ஓட்டம் சீராக உடலில் எல்லா பாகங்களுக்கும் கிடைக்கிறது. இதனால் திசுக்களுக்குத் தேவையான சக்தி (கலோரிகள்) கிடைப்பதால் நமது உடல் நலம் நன்றாக இருக்கும்.
நாம் ஒரே இடத்தில் வெகுநேரம் உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ வேலை செய்பவராக இருந்தால், நமது கால்களில் உள்ள இரத்தக் குழாய்களுக்கு அங்குள்ள இரத்தத்தை திரும்பவும் இதயத்துக்கு அனுப்ப போதுமான அளவு அழுத்தம் கிடைப்பதில்லை.
இதனால் இரத்த ஓட்டம் உடலின் எல்லா பாகங்களுக்கும் சீராக இருப்பதில்லை. நடக்கும் போது நமது கால்களில் உள்ள தசைகள் இயங்கி, அருகிலுள்ள இரத்தக் குழாய்களை அழுத்தி இரத்தத்தை இதயத்துக்கு அனுப்பத் தேவையான சக்தியை அளிக்கின்றன.
ஆகவே தினமும் 2 அல்லது 3 கி.மீட்டர் தூரம் நடப்பது மிகவும் சிறந்த உடற்பயிற்சி ஆகும்.
கருத்து: 5
ஒரு மைல் தூரம் ஒடும்போது நாம் அதே அளவு தூரம் நடப்பதைக் காட்டிலும் அதிகமான கலோரிகளை எரிக்கிறோம். இதனால் நமது உடல் எடை விரைவாகக் குறைகிறது.
மிகத் தவறான கருத்து
நாம் ஒடினாலும், நடந்தாலும், நாம் செல்லும் தூரம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் நாம் ஒரே அளவு சக்தியைத் தான் செலவு செய்கிறோம். இங்கு வேகம் ஒரு பொருட்டல்ல.
ஆனால் 30 நிமிடங்கள் நாம் ஓடும்போது, அதே 30 நிமிடங்கள் நடப்பவரைக் காட்டிலும் அதிக தூரம் கடக்கிறோம். தூரம் அதிகமாவதால் நாம் செலவு செய்யும் சக்தியும், எரிக்கும் கலோரிகளும் அதிகமாகின்றன.
எனவே அவரவர் வயது மற்றும் உடல் திறனுக்கேற்றவாறு நமது உடற்பயிற்சியை அமைத்துக் கொள்ளல் அவசியம்.
கருத்து: 6
தசைகள் விரிவுபடுத்த செய்யும் உடற்பயிற்சிகளை வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் செய்தால் தசைகளுக்கு வலிவும், வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்கும்.
இதுவும் தவறான கருத்து.
இம்மாதிரியான பயிற்சிகளை மிகவும் மெதுவாக செய்யவேண்டும். உதாரணமாக குனிந்து நிமிர்வது, இடுப்பு தசைகளை முறுக்கும் (Twisting) பயிற்சிகள், மற்றும் குனிந்து விரல்களால் பாதங்களை தொடுவது முதலான பயிற்சிகளை வேகமாகச் செய்யும்போது தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு வலியும், தசை நார்கிழிதல் முதலான மோசமான விளைவுகள் ஏற்படும்.
ஆகவே தசைகளை தளர்வாக வைத்துக் கொண்டு மெதுவாக ஆனால் திரும்ப, திரும்ப செய்யும்போது தசைகளுக்கு வலிவும், பொலிவும் வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்கும்.
கருத்து: 7
நமது சுவாசமும், இதயத் துடிப்பும், உடற்பயிற்சி செய்து முடித்த 3-5 நிமிடங்களுக்குள் சீராக வேண்டும்.
சரியான கருத்து.
உடற்பயிற்சி முடிந்து 5 நிமிடங்களுக்கு மேலாகியும், சீரான மூச்சு திரும்பவில்லை என்றால் நாம் மிக அதிகமாக தசைகளுக்கு பயிற்சி கொடுத்து விட்டோம் என்று பொருள்.
அளவுக்கதிகமான உடற்பயிற்சியானது நமது தூக்கத்தை கெடுப்பதுடன், அடுத்த நாள் களைப்பையும், சோர்வையும் உண்டாக்கிவிடும். ஆகவே உடற்பயிற்சியை மிதமாகவும், குதூகல உணர்வுடனும் செய்வது அவசியம்.
கருத்து: 8
ஒரு நாளில் குறைந்த பட்சம் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும்?
20 நிமிடங்களாவது நாம் ஒரு நாளில் உடற்பயிற்சி செய்வது அவசியம் கழிவு மண்டலங்களின் இயக்கம், செரிமானம் மற்றும் கழிவு மண்டலங்களின் இயக்கம், முதலிய அனைத்து இயக்கங்களுக்கும் சுமார் 400க்கும் மேற்பட்ட தசைகள் காரணமாக உள்ளன.
நாம் செய்யும் உடற்பயிற்சி இந்த 400 தசைகளுக்கும் நீட்டவும், மடக்கவும் பயிற்சி கொடுப்பதாக இருக்க வேண்டும். இதற்கு 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்வது போதாது.
குறைந்தது 20 நிமிடங்களாவது இந்த தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் தான் நமது உடல் உறுப்புகளுக்கு தேவையான சக்தி கிடைக்கும்.
வனப்பான உடல் பொலிவைப் பெறுவது என்பது, நாம் உடற்பயிற்சி ஆரம்பித்த போது நமது ஆரோக்கியம், உடல் தகுதி முதலியவை (Physical Fitnes) எப்படி இருந்தது என்பதைப் பொறுத்து அமையும்.
சிலருக்கு சில வாரங்களோ வேறு சிலருக்கு சில மாதங்களோ கூட ஆகலாம். ஆனால் ஒன்று நிச்சயம்.
எவராக இருப்பினும், நாளை, நாளை மறுநாள் என்று தள்ளிப் போடாமல் உடற்பயிற்சியை மிதமாகவும், தவறாமலும், ஒழுங்காகவும் செய்து வந்தால் வாழ்நாள் முழுவதும் கட்டுடலுடனும், முழு உடல் தகுதியுடனும், ஆரோக்யமாக வாழலாம்.
|
செல்ஃபோன்களின் கதிர்வீச்சில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி? |
![]()
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த செல்ஃபோன்களில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இந்த செல்ஃபோன்களின் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது. இந்த செல்போன் கதிர் வீச்சினால் மூளையில் இரண்டு வகையான (Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் செல்ஃபோன் உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான விஷயம் நாம் செல்ஃபோன் உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும். செல்ஃபோன் பயன்படுத்தினால் மூளைப்புற்றுநோய்?! உண்மையைச் சொல்லனும்னா, இப்பெல்லாம் செல்ஃபோன் இல்லன்னா மனுஷனுக்கு வாழ்க்கையே இல்லங்கற நெலமதான்! ஆமாம் இல்லையா பின்ன? செல்ஃபோன் இருந்தா எதுவேணும்னாலும் பண்ணலாம். செல்போன் கண்டுபிடிச்சது என்னவோ போற எடத்துக்கெல்லாம் எடுத்துகிட்டு போய் பேசறதுக்குதான்னாலும், இப்பொ நெலமையே வேற!? செல்ஃபோன் வச்சி நல்லதும் பண்ணலாம் கெட்டதும் பண்ணலாம். அதாவது, செல்ஃபோன் பயன்படுத்தினா மூளைக்கு பாதிப்பு வரும் அப்படின்னு ரொம்ப நாளா ஒரு பேச்சு இருக்கு. அதுக்கு காரணம் செல்ஃபோன்கள் வெளியிடுகிற ஒரு வித ரேடியோ அலைகள்தான் (Radio frequency) அப்படின்னு சொல்லப்பட்டு வந்தது. இந்த செய்தி உண்மைதான்னு சொல்கிறது உலக சுகாதார மையம் (The World Health Organization (WHO)) நடத்திய பத்து வருட கால ஆய்வு ஒன்று! அது மட்டுமில்லீங்க, 10 வருடமோ அதுக்கும் மேலயோ பயன்படுத்தினா மூளைப்புற்று நோயே வரும் வாய்ப்பு இருக்குன்னும் கண்டுபிடிச்சிருக்காங்க! இது என்னடா வம்பாப் போச்சு அப்படிங்கிறீங்களா? என்ன பண்றது உண்மைன்னா ஒத்துக்க வேண்டியதுதான். சரி வாங்க அது என்னன்னு கொஞ்சம் விரிவாப் பார்போம். அதாவது, உலக சுகாதார மைய ஆய்வாளர்கள், சுமார் 13 நாடுகளிலிருந்து, 12,800 மக்களின் செல்ஃபோன் பயன்பாட்டை 10 வருடமா தொடர்ந்து சோதனை செஞ்சுருக்காங்க. இந்த ஆய்வறிக்கை இன்னும் வெளியிடப் படவில்லையனாலும் டெலிக்ராஃப் அப்படிங்கிற இங்கிலாந்து பத்திரிக்கை வெளியிட்ட செய்தியில் "பத்து வருடமோ அல்லது அதற்கும் மேற்பட்ட காலமோ செல்ஃபோன் பயன்படுத்தினால் மூளைப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறதென்று" ஒரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டு இருக்கிறார்கள்! இதற்கு காரணம் செல்ஃபோன்கள் வெளியிடும் ரேடியோ அலைகள்தான்னும் இந்த ஆய்வுல கண்டுபிடிச்சிருக்காங்க. இது இப்படின்னா, செல்ஃபோன் தயாரிக்கிற நிருவனங்களும், சில விஞ்ஞானிகளும் இந்த செய்தி உண்மையில்ல, செல்ஃபோன் பயன்படுத்துறதுனால ஒரு பிரச்சினையும் இல்லன்னு சொல்லியிருக்காங்க!? ஆமாம் இதுல எத நம்புறது நாம? ஒன்னும் புரியல இல்ல? எது எப்படியிருந்தாலும் செல்ஃபோன்ல இருந்து வெளிவர ரேடியோ அலைகளினால் கண்டிப்பா மூளைக்கு பாதிப்பு இருக்குன்னு ஆய்வாளர்கள் பல வருடமா சொல்லிக்கிட்டுதான் இருக்காங்க. அதனால, இந்த மாதிரி ஆய்வுகள் அவசியம்னு சொல்றாங்க விஞ்ஞானிகள். இந்த ஆய்வுக்கு ஆன செலவு எவ்வளவு தெரியுமா? 30 மில்லியன் அமெரிக்கன் டாலர்! சரி, இப்போ முக்கியமான விஷயத்துக்கு வருவோம். அதாவது, இதப்படிச்சிட்டு இப்ப என்ன பண்றது அப்படின்னு யோசிக்கிற நண்பர்கள் எல்லாருக்கும், 1. இந்த செல்ஃபோன் வெளியிடுற ரேடியோ அலைகளினால் எவ்வளவு பாதிப்பு வரும்? 2. அது எவ்வளவு அலைகள் வெளியிடுகிறது? 3. அதை எப்படி குறைக்கிறது? இப்படி பல கேள்விகள் எழலாம். அதுக்கு எல்லாம் விடை தெரிஞ்சிக்கனும்னா, நீங்க இந்த இணையதளத்துக்கு போனீங்கன்னா தெரிஞ்சிக்கலாம்! அதேசமயம், இந்த அலைகளினால் ஏற்படுகிற பாதிப்புகள குறைக்கனும்னா, செல்ஃபோனில் அதிகம் பேசுறத தவிர்த்து, அதற்கு பதிலாக குறுஞ்செய்தி அனுப்புங்க அப்படின்னு பரிந்துரைக்கிறாங்க மருத்துவ வல்லுனர்கள்! மேலும் அலைவரிசை (அதாங்க சிக்னல்) குறைவா உள்ள பகுதிகள்ல செல்போன் பயன்படுத்தும்போது, ஸ்பீக்கர் போனையோ அல்லது ஹெட்செட்டையோ பயன்படுத்துங்க அப்படின்னு சொல்றாங்க! உலக மக்கள்தொகையில் சுமார் 40 கோடி பேர் செல்போன் பயன்படுத்துறாங்க! அதுல கணிசமான அளவு குழந்தைங்க.அவங்களுக்கு மண்டை ஓடு மிக மிருதுவாக/மெல்லியதாக இருக்கும் என்பதால் இத்தகைய ரேடியோ அலைகளிலிருந்து மூளையைப் பாதுகாக்கும் திறன் குறைவே. அதனால் பெற்றோர் என்ன பண்ணனும்னா குழந்தைங்களுக்கு ஹெட்செட் மற்றும் ஸ்பீக்கர் போன் இருக்கிற செல்ஃபோன் வாங்கிக்கொடுக்கிறது மட்டுமில்லாம அவங்கள ஹெட்செட் மற்றும் ஸ்பீக்கர் போனை அதிகமா பயன்படுத்தும்படி வலியுறுத்தனும்னு பரிந்துரைக்கிறாங்க மருத்துவ வல்லுனர்கள்! எல்லாத்தையும் விட மிக முக்கியமான ஒரு செய்தி இருக்கு மக்களே! அதாவது, மிக குறைந்த அளவு ரேடியோ அலைகள வெளியிடுற செல்ஃபோன் எல்லாம் இருக்கு தெரியுமா உங்களுக்கு? அதப்பத்தி விரிவா தெரிஞ்சிக்க/எந்த செல்ஃபோன் வாங்கினா நல்லது அப்படிங்கிற விவரத்தை எல்லாம் தெரிஞ்சி வெச்சிருக்கணும். காசு குடுத்து அந்த செல்ஃபோன் வாங்குற மக்களையும் அவங்களோட உடல் நலத்தையும் கணக்கிலெடுத்து, குறைந்த அளவு ரேடியோ அலைகள் வெளியிடுற செல்ஃபோன்கள தயாரிக்கும் நிறுவனங்களும் இருக்கத்தான் செய்யுது! உதாரணம்; ஸாம்ஸங் இம்ரெஷன் ஃபோன். செல்ஃபோன் கதிர்வீச்சு நம்மை தாக்காதவாறு தடுக்க சில வழிமுறைகள் முடிந்த அளவு செல்ஃபோன்கள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் செல் போன்கள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட செல்போன்கள் பாதிப்பு அதிகம். o ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும். o குழந்தைகளிடம் செல்ஃபோனில் பேசுவதோ, கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது. o உங்கள் மொபைலில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில் (Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம். o காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட செல்ஃபோன்களின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும். o தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும். o நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை 'ஆன்' செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்ப்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது. o செல்ஃபோன்களில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம். o செல்ஃபோன்களில் விளையாடுவதை முடிந்த அளவு தவிற்க்கவும் முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. o செல்ஃபோன்களை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும். o செல்ஃபோன்களை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம். o ஃபோனில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய ஃபோனின் Internal Antena பெரும்பாலும் ஃபோனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும். மேற்கூறிய முறைகளை கடைபிடித்தால் கண்டிப்பாக செல்ஃபோன்களின் கதிவீச்சில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.----------------------------------- |
கூகுள் தமிழ் மொழிமாற்றம் - புதிய வசதி |
![]()
தமிழ், அரபு, உருது, ஆங்கிலம் உட்பட 63 மொழிகளில் மொழிபெயர்க்கும் வசதி
ஆங்கிலம், அரபி, ஹிந்தி, உருது போன்ற பல மொழிகளில் உள்ள வலைத்தளங்கள், மற்றும் செய்திகளை ஒரே கிளிக்கில் தெரிந்து கொள்ள இது ஏதுவாக அமையும்.
அதற்கான சுட்டி:
ஆங்கிலம் மற்றும் அரபியில் மொழிமாற்றம் செய்யப்பட்டதின் நகல் இத்துடன் இறுதியில்இணைக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் உட்பட இந்தியர்கள் பயன்பெறும் கூகுளின் புதிய வசதி
கூகுள் இணையத்தின் ஜாம்பவான் அடிக்கடி பல்வேறு வசதிகளை வெளியிட்டு வாசகர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி அளிக்கும். அந்த வகையில் தமிழர்கள் உட்பட மேலும் ஐந்து மொழிகளை Google Translate பகுதியில் சேர்த்து பெரும்பாலான இந்தியர்களுக்கு பயனளித்துள்ளது. இதற்க்கு முன்னர் இந்த Google Translate பகுதியில் இந்திய அளவில் ஹிந்தி மொழி மட்டுமே இருந்தது. இப்பொழுது அதிகரித்து வரும் வாசகர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு தமிழ்,தெலுங்கு,கன்னடம்,பெங்காலி மற்றும் குஜராத்தி போன்ற ஐந்து மொழிகளுக்கு கூகுளின் இந்த translate வசதி புகுத்தப்பட்டுள்ளது.
கூகுள் மொழிமாற்றம் (Google Translate) என்றால் என்ன?
பெயரிலேயே இதன் அர்த்தம் தெரிந்திருக்கும் ஆம் இணையத்தில் பல்வேறு மொழிகளில் இணைய தளங்கள் உள்ளன. இந்த தளங்களை படிக்க நாம் அந்த மொழியை தெரிந்திருக்க வேண்டியதில்லை Google Translate உதவியுடன் நமக்கு தெரிந்த மொழியில் மாற்றம் செய்து படித்து கொள்ளலாம்.
இந்தியர்கள் எவ்வாறு பயன்பெறுவார்கள்:
இதற்க்கு முன்னர் கூகுள் மொழிமாற்ற வசதியில் இந்திய அளவில் ஹிந்தி மொழி மட்டுமே இருந்தது. இந்தியாவில் பெரும்பாலானவர்கள் ஹிந்தி பேசினாலும் படிக்க தெரிந்தவர்கள் குறைவே. ஆதலால் நமக்கு புரியாத ஆங்கிலத்தில் மொழியை மாற்றி தப்பும் தவறுமாக படித்து தெரிந்து கொள்வோம். இனி அந்த வேதனை நமக்கில்லை நம்முடைய தாய்மொழியான தமிழிலே மொழியை மாற்றி நாம் அறிந்து கொள்ளலாம். ஆனால் இது போல மொழியை மாற்றும் பொழுது வாக்கியங்கள் சரியாக அமையாது ஆனால் அதனுடைய உள்கருத்தை நம்மால் சரியாக புரிந்து கொள்ள முடியும்.
இந்த வசதியை எப்படி பயன்படுத்துவது?
o இந்த சேவையை பயன்படுத்த கூகுளின் Google Translate இந்த தளத்திற்கு சென்று அங்கு உள்ள காலியான கட்டத்தில் நீங்கள் மொழிமாற்றம் செய்யவேண்டிய வரிகளை காப்பி செய்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.
o பின்பு TO பகுதியில் நீங்கள் மொழிமாற்றம் செய்யவேண்டிய மொழியை தேர்வு செய்தால் போதும் அடுத்த வினாடியே நீங்கள் தேர்வு செய்த மொழியில் மொழிமாற்றம் செய்யப்படும்.
o இது மட்டுமல்லாது நீங்கள் மாற்றம் செய்யப்பட எழுத்துக்களின் மீது உங்கள் கர்சரை வைத்தால் அந்த எழுத்துக்கான ஒரிஜினல் வார்த்தையும் காண்பிக்கப்படும்.
o Hightlight செய்த வார்த்தைகளை பற்றி விரிவாக அங்கிருந்தே நேரடியாக கூகுளில் தேடிக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.
o முழு இணையதளத்தையும் மொழிமாற்றம் செய்ய வேண்டுமென்றால் நீங்கள் அந்த மற்ற தளங்களுக்கு சென்று அங்கு உள்ள translate பாரில் நீங்கள் மொழிமாற்றம் செய்ய வேண்டிய மொழியை தேர்வு செய்து Translate கொடுத்தால் முழு தளமும் தமிழில் மாறிவிடும்.
63 மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாம்
உலகளவில் சுமார் 63 மொழிகளில் தமிழில் இருந்து மற்ற மொழிகளுக்கும் மற்ற மொழிகளில் இருந்து தமிழுக்கும் மாற்றம் செய்து கொள்ளலாம். கீழே நீங்கள் மொழிமாற்றம் செய்யும் பட்டியல் உள்ளது இதில் உள்ள மொழிகளில் மொழிமாற்றம் செய்து கொள்ளலாம்.
|
Nov 18, 2011
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ஹீம்
விண்வெளி
அல்குர்ஆனும் விண்வெளி வீரர்களும் ஓர் ஆய்வு
அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய
நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் –
யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச்
செய்கிறான் – இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ்
தண்டனையை ஏற்படுத்துகிறான். (அல்குர்ஆன் 6:125)
வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான்
அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் வானத்தில் ஏறுபவனுடைய நெஞ்சம் எவ்வாறு இறுகிச் சுருங்குகிறது என்பதை கற்றுத்தருகிறான் இங்கு இவ்வாறு கூறுவது உண்மையா என்பதை நாம் ஆராய்ந்து பார்ப்போம் வாருங்கள்.
விண்வெளி பயணத்தில் எற்படும் உடல் குறைபாடுகள்
விண்வெளியை நோக்கி பயணம் செய்யும் போது அங்கு புவி ஈர்ப்பு சக்தி இருக்காது மேலும் இந்த புவி ஈர்ப்பு விசையானது பூஜ்ஜியமாக (0) ஆக காணப்படுகிறது. விண்வெளிப் பயணத்தின் போது புவி ஈர்ப்பு விசை பூஜ்ஜியமாக காணப்படுவதால் அதில் பயணிக்கும் விண்வெளி வீரர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஏற்படும் பாதிப்புகளை அறிந்துக் கொள்ளுங்கள்!
- இரத்த ஓட்டம் உடல் முழுவதும் ஒரே சீராக இருக்காது!
- இரத்த ஓட்டத்தில் தொய்வு ஏற்படுவதால் மன உலைச்சல் ஏற்படுகிறது
- மன உலைச்சல் அதிகரிப்பதால் ஒரு விதமான பயம் உள்ளத்தை வாட்டுகிறது
- இந்த பயத்தின் காரணமாக குழப்பமான சூழல் ஏற்பட்டு மன இருக்கம், எரிச்சல் ஆகியன ஏற்பட்டுவிடுகிறது
- ஈர்ப்பு விசை பூஜ்ஜியமாக இருப்பதால் இரத்த ஓட்டம் தலைப்பகுதியை நோக்கி தள்ளப்படுகிறது இதனால் இடைவிடாது தலைவலி ஏற்படுகிறது
- இரத்த ஓட்ட தொய்வின் காரணமாக உடலில் உள்ள எலும்புகளும் தசைகளும் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டு முடங்கிவிடுகின்றன இதற்காக இந்த விண்வெளி வீரர்கள் தினமும் 2 மணிநேரம் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்கிறார்கள். இவர்கள் இந்த உடற்பயிற்சியை தவிர்த்துவிட்டால் பூமியில் தரையிரங்கியவுடன் இவர்களுடைய எலும்புகள் ஒரேடியாக முடங்கி உடல் முழுவதும் எந்த அசைவும் இல்லாத ஒருவகை ஊணம் எற்படும் அபாயம் உள்ளது!
- விண்வெளியில் பயணிக்கும் போது அங்கு ஈர்ப்பு சக்தியின்மையால் கடுமையான மலச்சிக்கலும் சிறுநீர் கழிப்பதில் சிக்கலும் ஏற்படுகிறது.
விண்வெளி பயணத்தில் எவ்வாறு தூக்கம் ஏற்படுகிறது
உறங்கும் போது கண்களை பாதுகாக்க வேண்டும்
பூமியில் வசிக்கும் போது இரவு பகல் என்று மாறி மாறி ஏற்படுவதால் இயற்கையாகவே ஒரு மனிதனுக்கு உறக்கம் ஏற்படுகிறது ஆனால் இதுபோன்ற இயற்கை உறக்கம் விண்வெளிப் பயணத்தின் போது கிடையாது. அங்கு 90 நிமிடங்களுக்கு ஒரு முறை சூரிய உதயம் ஏற்பட்டு நாள் முழுவதும் பகலாகவே காணப்படுகிறது. மேலும் விண்வெளிப் பயணத்தின் போது சூரிய வெளிச்சம் நான்கு புறங்களிலிருந்தும் வெளிப்படுவதால் அந்த இடம் முழுவதும் எப்பொழுதுமே பிரகாஷமாக காணப்படுகிறது எனவே இந்த விண்வெளி வீரர்கள் உறங்கும் போது தங்களுடைய இரு கண்களையும் கருப்பு பெல்டு போன்ற துணியால் இருக்கி மூடிக்கொள்ள வேண்டும்.
உறங்கும் போது காதுகளை பாதுகாக்க வேண்டும்
உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? – அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,)பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன – இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளைஉங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான் (அல்குர்ஆன் 2:266)
இங்கு நாம் சிந்திக்க கூடிய அறிவியல் உண்மை என்ன? என்பதையும் சூராவளிகளின் வகைகளையும் அவற்றின் வேகத்தையும் பற்றி ஆராய்ந்து பார்ப்போம் வாருங்கள்!
சூராவளி என்பது என்ன?
சூராவளி என்பது ஒருவகை சுழலும் காற்றாகும். இந்த காற்றின் கட்டுக்கடங்காத வேகத்தில் சுழன்றபடியே மேகங்களை தொட்டுக் கொண்டு நிலப்பரப்பை சூரையாடி பயிர்களையும், வீடுகளையும் நாசம் செய்துவிடும் ஆற்றல் கொண்டவைகளாகும். சூராவளி என்பது ஒரு புனல் (Funnel) வடிவத்தில் காணப்படும் பயங்கரமான சூராவளியின் மேற்பகுதி மேகத்தை தொட்டு கிணறு போன்ற அகன்று காணப்படும் மேலும் இதன் வால் பகுதி கூர்மையான வாள் போன்று வலைந்து காணப்படும். இவற்றிற்கு ஆங்கில்தில் டொர்னடோ (Tornado) என்று பெயர்.
சூராவளியின் வேகம்
பல்வேறு சூராவளிகள் குறைந்த பட்ச வேகமாக மணிக்கு 40 மைல்கள் என்ற வேகத்தில் சுழன்றடிக்கும் (அதாவது 64 கி.மீ வேகம்) மற்றும் அதிக பட்சமாக மணிக்கு 110 மைல்கள் என்ற வேகத்தில் சூழன்றடிக்கும் (அதாவது மணிக்கு 177 கி.மீ வேகம்) இந்த வேகம் சுமார் 250 அடி (75 மீட்டர்) நிலப்பரப்பை ஒரு வினாடியில் தாக்கும் வல்லமை படைத்தது.
சூராவளிகள் சுழல ஆரம்பிக்கும் போது எதிர்பாராத விதமாக காற்றின் வேகம் 300 மைல்களாக இருந்தால் இந்த சூராவளிகள் குறைந்தபட்சடம் 1 மைல் (அதாவது 1.6 கி.மீ) பரப்பளவு கொண்ட நிலப்பரப்பை ஒரு வினாடியில் துவம்சம் செய்து அப்படியே மெல்ல நகர்ந்து பல மைல்கள் நகர ஆரம்பிக்கும். இவைகள்தான் சூராவளிகள் அதாவது வானத்தின் சுனாமி என்று கூட கூறலாம்.
சூராவளி – டொர்னடோ எவ்வாறு உருவாகிறது
ஒரு குறிப்பிடட திசையிலிருந்து வீசக்கூடிய குளிர்ந்த காற்று மற்றும் வரண்ட காற்றும் அதன் எதிர்திசையிலிருந்து வீசக்கூடிய சூடான காற்று மற்றும் ஈரப்பதமான காற்றுடன் மோதுகிறது. இப்படிப்பட்ட பல்வேறு வகையான காற்றுகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது அதிலிருந்து ஒரு வெளிப்படும் விசையே சூராவளி எனப்படுகிறது. இந்த மோதல்கள் அதிகமான அளவு நடைபெறும்போது அந்த சூராவளிக்கு பலம் கூடுகிறது. இதற்கு பெயர்தான் டொர்னடோ எனப்படுகிறது.
இந்த சூராவளி காற்றின் அறிகுறிகள் என்ன?
டொர்னடோ என்ற பயங்கரமான சூராவளி வீசுவதற்கு முன்னர் ஆலங்கட்டி மழைகள் ஏற்படுமாம் அந்த ஆலங்கட்டியின் தாக்கம் வீடுகளின் கூரைகளை துவம்சம் செய்துவிடுமாம்.
இந்த சூராவளி காற்றின் வேகம் என்ன?
வானத்தில் ஒரு பயங்கரமான சூராவளி உருவாகிவிட்டால் அந்த சூராவளி நிலத்தை தொடுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் வெறும் 12-13 நிமிடங்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 13ம் வினாடியிலிருந்து இந்த சூராவளி நிலத்தை பதம் பார்த்து அக்குவேறு ஆணிவேராக பிடிங்கி அதை தனக்குள் வசப்படுத்திக்கொண்டு அதே வேகத்தில் நகர ஆரம்பிக்குமாம்.
இந்த சூராவளி காற்றின் சக்தி எத்தகையது?
மனிதர்கள், கால்நடைகள் கூட இந்த சூராவளியில் சிக்கி வீசப்படுகிறது. சாலையில் நிருத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு வீட்டின் கூரைகளின் மேல் நிற்குமாம் அவ்வளவு பயங்கரமானது இந்த அதிபயங்கர சூராவளிகள்.
சூராவளியின் வகைகள் பார்ப்போம்
SUPERCELL TORNADOES (சூராவளி மேகங்களுடன்)
இந்த வகை சூராவளிகள் SUPERCELL TORNADOES என்று அழைக்கப்படுகின்றன. இந்த வகை சூராவளி மேகங்களை கருவாக கொண்டு சூழன்றடிக்கும். ஒரு பக்கம் மேகங்கள் மழைச்சாரல்களை வீசிக்கொண்டும் மற்றொரு பக்கம் சூரைக் காற்றை சூழன்றபடியும் வீசி பல கிலோமீட்டர்களை நாசம் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றிருக்கும். இந்த வகை சூராவளிகள் ஒரு நிலத்தை தொட்டுவிட்டால் அதன் வேகம் 200 கி.மீ.க்கும் குறைவாக இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
Blog Archive
-
▼
2011
(74)
-
▼
November
(10)
- கூகுள் பிளஸில் புத்தம் புதிய வசதி அறிமுகம்
- பென்ட்ரைவினை பாதுகாக்க சில வழிகள்
- கூகுளுக்கு போட்டியாக ஒரு தேடியந்திரம் ...
- உடற்பயிற்சியும் சில உண்மைகளும்!
- செல்ஃபோன்களின் கதிர்வீச்சில் இருந்து நம்மை பாத...
- கூகுள் தமிழ் மொழிமாற்றம் - புதிய வசதி
- பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ஹீம் விண்வெளி
- பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
- சுற்றுச்சூழல் சுற்று சூழல் மாசுகளை கட்டுப...
- பாம்பு கடித்தும் தனது உயிரை துச்சமாக ...
-
▼
November
(10)