அன்புச் செல்வங்களுக்கு என்ற இந்தத்தொகுப்பு எளிய நடையில் இனிய முறையில் நம் சின்னஞ் சிறார்களுக்கு தமிழ் மொழியில் எடுத்துவைக்கப் பட்டுள்ளது. இந்த அவசரயுகத்தில் கல்விகள் பலவிதமாக இருந்தும்,இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளை எடுத்துச் சொல்லும் புத்தகங்கள் பல இருந்தும் அதனைத் தொகுத்து வழங்கும் முயற்சி குறைந்து காணப்படுகின்றது.
எனவே அதை நிவர்த்தி செய்யும் வகையில் நம் குழந்தைகள் தெரிந்திருக்க வேண்டிய இஸ்லாமிய அடிப்படைத் தகவல்கள், இஸ்லாமிய பொது அறிவு, மற்றும் குண நலன்கள் என மூன்று தலைப்புகளாக இத்தொகுப்பு அமைக்கப் பட்டுள்ளது. இன்றைய குழந்தைகள் நாளைய சமுதாயம். அந்த அன்புச் செல்வங்கள் ஈருலகிலும் வெற்றிபெற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
1. இஸ்லாம் என்ற அரபிச் செல்லுக்கு பொருள் என்ன?
இஸ்லாம் என்ற அரபிச் சொல்லுக்கு கீழ்ப்படிதல், கட்டுப்படுதல், சாந்தி, சாமாதானம், சமத்துவம், சகோதரத்துவம் எனப்படும்.
2 . உன்னைப் படைத்த இறைவன் யார் ?
என்னைப் படைத்த இறைவன் அல்லாஹ்.
3 . உன் இறைவன் எங்கே இருக்கிறான்?
அல்லாஹ் ஏழு வானங்களுக்கும் மேலே உள்ள அர்ஷில் இருக்கிறான்.
4 அல்லாஹ்வின் அர்ஷை யார் சுமக்கிறார்கள்?
மலக்குகள்
5 . உனது நபியின் பெயர் என்ன?
எனது நபியின் பெயர் முஹம்மது (ஸல்) ஆவார்கள்.
6 . உனது மார்க்கத்தின் பெயர் என்ன?
எனது மார்க்கத்தின் பெயர் (தீனுல்) இஸ்லாம்.
7 . நீ எப்படி ஈமான் கொண்டாய்?
'வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. நபி முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமையயும் தூதரும் ஆவார்கள்' என்று நான் ஈமான் கொண்டேன்.
8 . உனது ஆதி தந்தை தாய் பெயர் கூறு ?
எனது ஆதி தந்தைப் பெயர் ஆதம் (அலை) தாய் பெயர் ஹவ்வா (அலை) ஆகும்.
9 . நம் மார்க்கத்தின் தந்தை யார்?
நம் மார்க்கத்தின் தந்தை நபி இப்ராஹிம் (அலை) ஆகும்.
10 . உன் வேதத்தின் பெயர் என்ன?
என் வேதத்தின் பெயர் திருக்குர்ஆன்.
11. திருக் குர்ஆன் யாருக்கு யார் மூலம் அருளப்பட்டது?
திருக்குர்ஆன் இறைவனால் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலமாக நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. (மனிதர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட உலகப் பொதுமறையே திருக்குர்ஆன்)
12 . குர் ஆன் எந்த மாதத்தில் அருளப்பட்டது?
ரமழான் மாதத்தில் அருளப்பட்டது.
13. நாம் எதற்காக ரமழானில் நோன்பு வைக்கின்றோம் ?
நாம் ரமழானில் திருக்குர்ஆன் அருளப்பட்டதால் நோன்பு வைக்கின்றோம்.
14 . இஸ்லாத்தின் கடமைகள் எத்தனை? அவை யாவை?
இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து. அவை. 1. கலிமா 2. தொழுகை 3. நோன்பு 4. ஜகாத் 5. ஹஜ்
15. மறுமையின் முதல் கேள்வி எதைப்பற்றியது?
மறுமையின் முதல் கேள்வி தொழுகையை பற்றிதாய் இருக்கும்.
16. கடமையான தொழுகைகள் எத்தனை? அவை யாவை?
அல்லாஹ் நமக்கு ஐந்து வேளை தொழுகைகளை கடமையாக்கி உள்ளான் . அவை. 1.ஃபஜர், (காலை நேரத் தொழுகை) 2. ளுஹர்(மதிய தொழுகை) 3. அஸர்(மாலை நேரத் தொழுகை) 4.மஹ்ரிப் (சூரியன் மறையும் நேரத் தொழுகை) 5. இஷா (இரவுத் தொழுகை)