
வெளிநாடு வேலைக்கு செல்லும் முன் நமது Certificate HRD யிடம் முத்திரை பெறவேண்டும். நமது சான்றிதழ் உண்மையானதுதானா என சோதிக்க நமது சான்றிதழ் நாம் படித்த Universityக்கு அனுப்பி வைத்து அங்கு HRD முடித்து வரும்.
மிகவும் எளிமையான வழிமுறைகள் கொண்ட HRD செய்வதற்கு நம்மில் பலர் முயற்சி செய்யாமல் இடை தரகர்களிடம் பணத்தை கொடுத்து முடித்து விடுகின்றனர். நாம் நேரடியாக சென்று Apply செய்தால் Rs.535 ல் முடிந்துவிடும். இடைத்தரகர்கள் Rs.3000 முதல்Rs.4000 வரை கேட்பார்கள்.
Apply செய்ய வேண்டிய இடம்
(சென்னையின் எந்த பகுதியில் வசிப்பவராக இருந்தாலும் பேரூந்து மூலமாக பாரிமுனைக்கு வந்து அங்கிருந்து ஆட்டோ அல்லது பேரூந்தையோ பிடித்து தலை மைச்செயலகத்திற்கு வரலாம். அல்லது தொடரூந்து அதாவது ரயில் மூலம் வருவதற்கு பீச் ஸ்டேஷனுக்கு வந்து அங்கிருந்து ஆட்டோவிலோ அல்லது பேரூந்திலோ ஏறி தலைமைச் செயலகம் வரலாம்)
நேரம்: காலை 10 மணிக்கு மேல்
1. தேவையான Documents அட்டெஸ்டேசன் பெறவேண்டிய சான்றிதழ் மற்றும் அதன் இரு நகல்கள் (இருபுறமும்)