குர்ஆன் கூறும் கால்நடைகளும் பால் உற்பத்தியும்
[media-credit name="webs" align="aligncenter" width="300"]
[/media-credit]
நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது, அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும்இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம். அல்குர்ஆன் 16:66
இந்த இறைவசனத்தின் முதல் பகுதியில் கால்நடைகளிடம் தக்க படிப்பினை உள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். இங்கு படிப்பினை என்பதை ஆராச்சி என்ற கோணத்தில் பார்க்க வேண்டும். இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள அல்லாஹ் ஐந்து விஷயங்களை (குளு) முன்வைக்கிறான் அவைகளாவன.
1) கால்நடைகளின் வயிற்றுப்பகுதி
2) வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்ததிற்கும் இடையில்
3) கலப்பற்ற பால்
4) அருந்துபவர்களுக்கு இனிமை
5) தாராளமாக புகட்டுகிறோம்
மேற்கண்ட ஐந்து ஆராய்ச்சிகளில் முதல் இரண்டை பார்ப்போமா?
1. கால்நடைகளின் வயிற்றுப்பகுதி
2. வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்ததிற்கும் இடையில்
பொதுவாக உயிரினங்களுக்கு வயிற்றுப்பகுதி என்ற அமைப்பு இருக்கும் இங்குதான் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகி அந்த செரிமானமாகிய உணவு புரதச்சத்தாக மாறி இரத்தத்தில் கலநது நமக்கு உடல் வலிமையைத் தருகிறது ஆனால் இந்த வயிற்றுப்பகுதி ஒருசில கால்நடைகளுக்கு அதாவது பசுமாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள் மற்றும் மான்கள் ஆகியவற்றிற்கு மட்டும் தனியாக அமைந்து அவை மனிதனுக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது. உதாரணமாக பசுமாட்டை இங்கு ஆராய்வோம்.