விபத்து (விழிப்புணர்வு நாடகம்)
ச்சே! போன வாரந்தான் மெக்கானிக்கிட்டே போனேன்…. அதுக்குள்ள என்ன ஆச்சு? இந்த மிஸிரி மெக்கானிக்கிட்ட போனாலே இந்த மாதிரிதான். இதுல வேற தன்னை தொக்தர்னு (டாக்டர்னு) அலட்டிக்கிறான்.

வயது நாற்பதிலிருந்து நாற்பத்தைந்து இருக்கும். மருண்கலர் ஃபைபர் ஃபரேம் போட்ட கண்ணாடி அணிந்திருந்தார். கண் டாக்டரிடம் டெஸ்ட் செய்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது போலும். சவுதி அரேபியாவில் மக்கள் அதிகமாக வசிக்கும் ஜித்தா நகரின் வீதியை உற்று நோக்கியவாறு டொயாட்டோ கொரல்லா நீல நிற காரை டிரைவ் செய்துக்கொண்டிருந்தார்.
பக்கத்தில் அவரின் துணைவி. அவரைவிட கொஞ்சம் உயரம்போல் தெரிந்தாலும் கண்ணியமாக பர்தா அணிந்திருந்தார். இரண்டு பிள்ளைகள். ஜாம்ஜும் சென்டரில் சற்று முன்தான் பர்சேஸ் முடிந்திருந்தது. பர்ஸ் கனம் குறைந்து டிக்கி கணம் அதிகரித்திருக்க வேண்டும்.
இந்த எளவெடுத்த காரை மாத்ரீங்களா. உங்களோட வந்தவனெல்லாம் பெரிய பெரிய லாரியெல்லாம் வாங்கிட்டானுங்க. நீங்க ஏன்தான் இத கட்டி அலுவுரீங்களோன்னு தெரியல.
ம்…ஏன் சொல்லமாட்டே? அட கைக்கூலி வாங்கக்கூடாது வாணாம். சரி மாப்ளைக்கு அன்பா ஒரு சைக்கிளாவது வாங்கித்தராங்களா? உங்க வீட்ல. டவுன் பஸ்ல போய்கிட்டிருந்த நீ… பேசற….ம்
ம்…உம். போதும்! போதும்! நீங்க எழுத்தப் பார்த்து ஒழுங்கா ஓதுங்க! (ரோட்ட பார்த்து ஓட்டுங்க).