மக்களை அழிவுப் பாதையில் இட்டுச் செல்வதில் கூத்தாடிகள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்லர் ஊடகத்துறையினர். அவதூறுகளையும் பொய்ச் செய்திகளையும் பரப்பி பரபரப்பு ஏற்படுத்துவதில் மன்னர்கள்.அனைத்து வகை இதழ்களைத் திறந்தால் ஆபாசம், பெண்களின் அரை, முக்கால், முழு நிர்வாணம் காமத்தைத் தூண்டும் காட்சிகள். பெண்களை நிர்வாணமாகவும், ஆண்களை முழுமையாக உடல் மறைத்து ஆடை அணிபவர்களாகவும் காட்டும் மர்மம் என்ன? ஆண்கள் ஜட்டியோடு காட்சி அளித்தாலும் பரவாயில்லை. அதனால் ஆபாசம், காம உணர்வு ஏற்படப் போவதில்லை. அதற்கு மாறாக பெண்களின் அங்கங்கள் தெரிந்தால் போதும் ஆபாசம், காம உணர்வு பீரிட்டு பாயும். அப்படியானால் இன்றைய கூத்தாடிகள் என்ன செய்கின்றனர்? இரண்டு கால் மனிதனை அறிவை இழந்து இரண்டு கால் மிருகமாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். அதனால்தான் நாட்டில் ஈவ்டீஸிங், கற்பழிப்பு, கற்பழித்துக் கொலை என நாளுக்கு நாள் கணக்கு வழக்கு இல்லாமல் பெருகி வருகின்றன. அநியாய அட்டூழியங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன.
முன்னர் பொய்க்கடவுள்களைப் கற்பித்த புரோகிதர்கள் மறைவாகச் செய்த மன்மத லீலைகள் நாத்திகம் தலைதூக்கிய பின்னர் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம் ஆகி அந்த லீலைகள் பன்மடங்காகி வெள்ளித்திரை, சின்னத்திரைகளில் பவனிவர ஆரம்பித்து விட்டன. இயற்கையிலேயே இன விருத்திக்காக மனிதனிடம் காணப்படும் காம உணர்வு தவறான முறைகளில் தூண்டப்பட்டு எல்லை மீறி பெரும் தவறுகள் நிகழக் காரணமாகின்றது. இன்று நாட்டில் நீக்கமறக் காணப்படும் அனைத்து வகை அட்டூழியங்கள், கொடுமைகள், வன் செயல்கள், தீவிரவாதம் இன்ன பிற தீச்செயல்களை உரமிட்டு, நீர்பாய்ச்சி வளர்த்து வருவது கூத்தாடிகளின் நெறிகெட்ட செயல்களே!