Oct 14, 2017

வங்கி கணக்கை ஒரு கிளையில் இருந்து வேறு கிளைக்கு மாற்றுவது எப்படி..?






 வங்கி கணக்கை ஒரு கிளையில் இருந்து வேறு கிளைக்கு மாற்றுவது எப்படி..?





வங்கி கணக்கை ஒரு கிளையில் இருந்து வேறு கிளைக்கு மாற்றுவது எப்படி..?



நீங்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வீடு மாறிவிட்டீர்கள் என்றால் உடனே செய்ய வேண்டிய முக்கிய பணிகளில் ஒன்று வங்கி கணக்கை உங்களது புதிய வீட்டின் அருகே உள்ள கிளைக்கு மாற்றுவது.


பணம் எடுப்பது, அல்லது டெபாசிட் செய்வதற்கு எந்த கிளையும் போதும் என்றாலும், லாக்கர் பெற, கிரெடிட் கார்ட் வசதி போன்ற சலுகைகள் பெற நாம் கணக்கு ஆரம்பித்த வங்கி கிளைக்கு தான் செல்ல வேண்டும். எனவே வங்கி கணக்கை ஒரு கிளையில் இருந்து இன்னொரு கிளைக்கு மாற்றுவது அவசியம். அதனை எப்படி மாற்றுவது என்பதையே இப்போது பார்க்கபோகிறோம்.



 வங்கி கணக்கை ஒரு கிளையில் இருந்து வேறு கிளைக்கு மாற்றுவது எப்படி..?


                    முதலில் நீங்கள் செய்ய வேண்டியது ஒரு விண்ணப்பம். வங்கி கணக்கு வைத்திருப்பவர் முதலில் வங்கி கிளையை மாற்றுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து புதிய கிளையிலோ அல்லது நாம் கணக்கு ஆரம்பித்த கிளையிலோ சம்பர்ப்பிக்க வேண்டும்.



நம்முடைய விண்ணப்பத்தில் நமது வங்கி கணக்கு எண், எந்த கிளைக்கு மாற்ற விரும்புகிறோம் என்ற விபரம் ஆகியவை இருக்க வேண்டும்.

Oct 12, 2017

செக்சுவல் ஹெல்த் குறித்து ஆண்கள் சாதாரணமாக எண்ணிவிட கூடாத 5 அறிகுறிகள்!






உடலில் எந்தவிதமான மாற்றம் ஏற்பட்டாலும் நமது உடல் அதை பற்றிய அறிகுறிகளை வெளிப்படுத்திவிடும். அது நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதா இருந்தாலும் சரி. இந்த அறிகுறிகளை நாம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டியது தான் அவசியம். நாம் மிகவும் சங்கோஜம் அடையும் பிரச்சனை அந்தரங்க பகுதிகளில் ஏற்படும் குறைகள். முக்கியமாக பிறப்புறுப்பு பகுதியல் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து மருத்துவரிடம் பேசவே பலரும் கூச்சப்படுவார்கள்.. அந்த வகையில் முக்கியமாக ஆண்கள் இந்த 5 அறிகுறிகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது





அறிகுறி #1 ஆண்குறியின் முன் தோல் இறுக்கமாக இருப்பது, அல்லது ஆண்குறி தலை பகுதியில் ஆங்காங்கே வெள்ளை புள்ளிகள் தென்படுவது "Lichen Sclerosus" எனும் பாதிப்பு ஆகும். இது ஹார்மோன் அல்லது நோய் எதிர்ப்பு சமநிலை இழப்பு காரணமாக ஏற்படுகிறது.




அறிகுறி #2 அரிப்பு ஏற்படுவது இயல்பு. ஆனால், அரிப்பு காரணமாக அல்லது புண்கள் ஆண்குறியில் ஏற்படுவது அசாதாரணம். வலியில்லாமல் கூட இருக்கலாம். ஆனால், இது ஆண்குறி புற்றுநோய்க்கான அறிகுறி ஆகும். இதை சரிப்பார்க்காமல் விட்டுவிட்டால் ஆண்குறி நீக்க வேண்டிய நிலை கூட ஏற்படலாம்.





அறிகுறி #3 சிலருக்கு ஆண்குறி வளைந்து காணப்படும். இது இயல்பு தான். ஆனாலும், ஆண்குறி மிகவும் வளைந்து காணப்படுவது Peyronie எனும் நோயின் காரணம் ஆகும். இந்த நோய் எதனால் ஏற்படுகிறது என இது நாள் வரை தெளிவாக அறியப்படவில்லை. ஆனால், இது விறைப்பு தன்மையை பாதிக்கும். இது பெரும்பாலும் 40 வயதை கடந்த ஆண்கள் மத்தியில் தான் காணப்படுகிறது.





அறிகுறி #4 பருக்கள் அல்லது கட்டிகள் போன்று விதைப்பையில் தென்படுவது. இது விதைப்பை புற்றுநோய் அறிகுறி என கூறுகின்றனர். சிறுசிறு பருக்கள் போல தோன்றுவது சாதாரண இன்பெக்ஷன் அல்லது மயிர்கால் வளர்ச்சி ஏற்படும் போது அப்பகுதி முடிகளால் ஏற்படுவது என கூறப்படுகிறது. ஆயினும் கட்டி போன்று உண்டானால் உடனே பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.

Translate