May 15, 2016

பெண்ணுக்கு நாணம் வேண்டும்






னித வாழ்வில் ஒழுக்கம் உயிரை விட உயர்வாகமதிக்கத் தக்கதாகும்  ஒழுக்க நெறி இல்லையேல்மனிதனுக்கும் மிருகத்திற்குமிடையில் வேறுபாடு இல்லாமல்போய் விடும்மற்ற படைப்புகளிடமில்லாத சிறப்பம்சம்ஒன்று மனிதனிடம் உண்டென்றால் அது ஒழுக்க நெறியுடன்கூடிய வாழ்வேயாகும்.
இறைவனின் படைப்பான ஆண்பெண் இருபாலரிடத்திலும் பல விதமான வேறுபாடுகள்காணப்படுகின்றனஅவற்றில் வெட்கத்தையும் நாணத்தையும்அல்லாஹ் பெண்களிடத்தில் அதிகம் வழங்கியுள்ளான்.ஆனால் இன்று நாகரீகம் என்ற பெயரில் வெட்கம்நாணம்அனைத்தையும் மறந்து அநாகரீகமான செயல்களில்பெண்கள் ஈடுபடத் துவங்கி விட்டனர்மேலை நாடுகளில்விடை பெற்று விட்ட இந்த வெட்க உணர்வு தற்போது கீழைநாடுகளிலும் விடைபெறத் துவங்கி விட்டதுஅதன் அதிவேகவளர்ச்சி இஸ்லாமியப் பெண்களையும் தொட்டுவிட்டது.
அரைகுறை ஆடை அணிவது அந்நிய ஆண்களோடு ஊர்சுற்றுவது கவர்ச்சிகரமான அலங்காரங்களை செய்துகொண்டு வீதிகளில் உலா வருவது என்று பல அநாகரீகச்செயல்கள் இஸ்லாமிய பெண்களிடம் ஒட்டிக் கொண்டுவிட்டதுவெட்கம் ஈமானில் உள்ளதாகும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்ஈமான் உள்ளவரிடம் வெட்கம்இருக்க வேண்டும் என நபி(ஸல்அவர்கள்கூறியிருக்கிறார்கள்ஆனால் வெட்கம் கொஞ்சம் கூடஇல்லாமல் வெட்கம் கெட்ட செயலில் மூழ்கியிருக்கிறார்கள்இன்றைய இஸ்லாமியப் பெண்களும்.
அரை குறை ஆடைகள் அணியும் பெண்களுக்கும்உள்ளாடைகளின் நிறம் தெரியுமளவிற்குச் சேலைகள்அணியும் பெண்களுக்கும் வெட்கம் என்பது இல்லையா?அல்லது ஈமானே உள்ளத்தை விட்டு வெளியேறி விட்டதா?
கணவனுக்கு மட்டும் காட்ட வேண்டிய அலங்காரத்தைஉலகமறியக் காட்டுவது தான் நாகரீகமாநங்கையர்களின்நாட்டம் தான் என்ன?
"கன்னிப் பெண்ணும் விதவைப் பெண்ணும் அனுமதிபெறப்படாமல் திருமணம் முடிக்கப்பட மாட்டாள்'' என்று நபி(ஸல்அவர்கள் கூறிய போது, "கன்னிப் பெண்ணின் அனுமதிஎப்படி? (அவள் வெட்கப் படுவாளே)'' என்று நபி (ஸல்)அவர்களிடம் நபித்தோழர்கள் கேட்டனர்அதற்கு நபி (ஸல்)அவர்கள், "அவள் மவுனமாக இருப்பதே அனுமதி'' என்றுகூறினார்கள் 
அறிவிப்பாளர்ஆயிஷா (ரலி), நூல்புகாரி 5136
அனுமதிக்கப்பட்ட ஒன்றிற்குக் கூட "ஆம்என்று பதில்சொல்ல வெட்கப்பட்ட தீன்குலப் பெண்களின் நாணம் எங்கே?இந்தப் பெண்கள் எங்கே?
நல்ல ஆண்களைக் கூட கெடுக்கும் வண்ணம்அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டும் நறுமணப்பொருட்களை பூசிக் கொண்டும் செல்வதால் கெட்டுப்போவது பெண் மட்டுமாநல்ல ஆண்களும் கூடத் தானேவெட்கமில்லாமல் அந்தரங்கப் பகுதிகளை வெளிப்படுத்தும்இப்பெண்கள் அண்ணலாரின் பொன் மொழிக்குச் செவிசாய்ப்பார்களா?
நறுமணம் பூசிதன் கணவனை மயக்கச் செய்யவேஒரு பெண்ணுக்கு அனுமதியுண்டுஅதை விடுத்து தெருத்தெருவாக வீட்டில் உள்ளவர்களை வெளியில் வரவழைக்கும்வண்ணம் நறுமணம் பூசிச் செல்வது விபச்சாரியின்செயலுக்குச் சமமில்லையாஊரிலுள்ளவர்கள் எல்லாம்நம்மைப் பார்க்கின்றார்கள் என்ற வெட்க உணர்வும்இல்லையா?
"எப்பெண்மணி நறுமணத்தை பூசிக் கொள்கிறாளோஅப்பெண் நம்மோடு இஷா தொழுகையில் கலந்து கொள்ளவேண்டாம்'' என்று நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பாளர்அபூஹுரைரா (ரலி), நூல்முஸ்லிம் 760
கடமையான தொழுகையில் கூட நறுமணம் பூசிக்கொண்டு பெண்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று நபி(ஸல்அவர்கள் கூறியதற்குக் காரணம்அதனால் மற்றஆண்களின் பார்வை அங்கு செல்லும் என்பதை விட வேறுஎன்னவாக இருக்கும்வயதுக் கோளாறின் காரணமாக சிலஆண்களின் கவர்ச்சிப் பேச்சிற்கு அடிமைப்பட்டுதனிமையில்சந்திப்பதுபின்னர் அவனால் ஏமாற்றப்பட்டு தற்கொலைஅல்லது தினமும் வேதனை என்ற நிலைக்குப் போகக்காரணம் என்னவெட்கமில்லாமல் அந்நியரோடு ஊர்சுற்றியது தானே!

May 14, 2016

7 நாட்கள் வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த பூண்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

7 நாட்கள் வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த பூண்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!




இதயம் மற்றும் இரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சனைகளுக்கு அதிகப்படியாக இவற்றை மருந்தாக பயன்படுத்தி வந்துள்ளதாக பல வரலாற்று கூற்றுகள் மூலம் அறியப்படுகிறது. அருமருந்தாக திகழும் இந்த இரண்டின் கலவையும் சிறந்த நோய் தீர்க்கும் மருந்து என கூறப்படுகிறது…..
தேவையான பொருட்கள்
தனித்தனியாக உரித்து எடுக்கப்பட்ட பூண்டு விழுதுகள் 20.
தூய்மையான தேன் ஓர் ஜாடி அளவு (பூண்டு நன்கு மூழ்கும் அளவிற்கு)
செய்முறை
பூண்டு விழுதுகளை அந்த ஜாடியில் போட்டு, அதன் மேல் பூண்டுகள் அனைத்தும் நன்கு மூழ்கும் அளவிற்கு தூய்மையான தேனை ஊற்றி ஊற வைக்கவும். ஒரு வாரக் காலம் இதை ஊற விடுங்கள். (ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தி வந்தால் ஒரு வருடம் வரை இது கெடாமல் இருக்கும் தன்மையுடையது)
நன்மைகள்
சளி, காய்ச்சல், இருமல், நோய் கிருமி தொற்று போன்றவை ஏற்படாமல் இருக்கவும், இவைக்கான சிறந்த மருந்தாகவும் இந்த தேனில் ஊறவைத்த பூண்டு பயனளிக்கிறது.
உட்கொள்ளும் முறை
தினமும் காலை வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் அளவு உட்கொண்டால் போதுமானது. ஒரு நாளுக்கு ஐந்தில் இருந்து ஆறுமுறை இதை அரை டீஸ்பூன் அளவில் உட்கொள்ளலாம்.
உட்கொள்ளும் முறை
உணவு உண்ட பிறகு இதை உட்கொள்வது, இதன் செயலாற்றலை குறைத்துவிடும். எனவே தான் காலையில் எழுந்ததும் உட்கொள்ள கூறப்படுகிறது. பிறகு நற்பகல், மாலை வேளையிலும் கூட இதை உட்கொள்ளலாம்.

May 2, 2016

பேப்பர் தட்டு தயாரிப்பில் பிரமாத லாபம்

பேப்பர் தட்டு தயாரிப்பில் பிரமாத லாபம் :



சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காதவை பேப்பர் தட்டுகள். ஆடம்பரமாகவும் இருக்கும். வாழை இலை, பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்றாக விளங்கும் இவற்றை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சின்னாம்பாளையத்தில் உள்ள கற்பகவிருட்சம் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த சுகுணா. அவர் கூறியதாவது: கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் குழுவை துவக்கினோம்.  உறுப்பினர்கள் 5 பேர் சேர்ந்து, பேப்பர் பிளேட் தயாரிக்க பயிற்சி பெற்றோம். வங்கியில் ரூ.5 லட்சம் கடன் வாங்கி தொழிலுக்கு தேவையான மெஷின்களை நிறுவினோம்.

5 பேரும் பக்கத்து பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டு வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு பேப்பர் பிளேட் தயாரிக்கும் பணிகளை தொடங்குவோம். ஒருவர் பேப்பரை கட்டிங் செய்யும் இயந்திரத்தையும், மற்றொருவர் பிளேட் தயாரிக்கும் மெஷினையும் இயக்குவோம். மற்ற 2 பேர் பேக்கிங் செய்வார்கள். உற்பத்தியோடு விற்பனையையும் நாங்களே கவனிக்கிறோம். மின் தடை இல்லாமல் இருந்தால், ஒரு நாளில் 10 ஆயிரம் பிளேட் தயாரிக்கலாம். ஒரு பிளேட்டுக்கு 20 பைசா லாபம். மாதம் ரூ.18 ஆயிரம் வங்கிக்கு செலுத்துகிறோம். தினசரி சம்பளமாக நாங்கள் தலா ரூ.100 எடுத்து கொள்கிறோம். அலுவலகம், வீடு ஆகியவற்றில் நடைபெறும் விசேஷங்களில் பேப்பர் பிளேட் பயன்பாடு அதிகரித்து வருவதால் தயாரித்தவுடன் விற்று விடுகிறது.

Translate