Apr 25, 2016

வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்

வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
                                     


எம். ஷம்சுல்லுஹா


ஹா! இதோ பார்! சூப்பர் ஃபிகர்! ஸ்டில் போடப்பா என்று ஒருவர் சொல்கின்றார். மற்றொருவர் ரீவைண்ட் பண்ணப்பா! தூள் பரத்துகிறது என்கிறார். ஏ இது யாரப்பா? இவர் சம்சுகனி சம்சாரம். அது யாரப்பா? ஆள் அசத்தலா இருக்கே? இது நம்ம காதர் தங்கச்சி!
தங்களுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் வீடியோ காட்சிகளுடன் மேற்கண்ட வீடியோ கமென்டரி உரையாடல்களும் கலகலப்பாக ஓடிக் கொண்டிருக்கும். இவை எல்லாம் எங்கு நடக்கின்றன என்கிறீர்களா? சாதி சமய பேதமற்று எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டின்படி சர்வ சமயத்தவரும் சங்கமமாகி தங்கியிருக்கும் அபரக நாட்டின் அறைகளில் தான்
(அரபு நாடு என்றவுடன் அங்கு பணிபுரியும் எல்லோருமே இப்படித் தான் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. மார்க்கப் பணிகளுக்காகவும், மார்க்கப் பிரச்சாரத்தைக் கேட்பதற்காகவும் மட்டுமே தங்கள் விடுமுறை நாட்களை அர்ப்பணிக்கும் சகோதரர்களும் அரபகத்தில் இருக்கின்றார்கள். இங்கு நாம் குறிப்பிடும் சங்கதிகளும் அரபகத்தில் நடக்காமல் இல்லை. வீடியோவில் பெண்கள் போஸ் கொடுப்பதால் ஏற்படும் விளைவுகளைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்)
ஆக அந்த அறையே ஒரு சிறிய வீடியோ திரையரங்காக மாறி நிற்கும். இந்த வீடியோ படப்பிடிப்பு எங்கு நிகழ்ந்தவை? எல்லாம் நம் வீட்டுத் திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தான்.
நம் வீட்டில் கல்யாணம் என்றதும் வீடு களை கட்டி நிற்கின்றது. வீடியோ இல்லாத திருமணமா? என்று கேட்கும் அளவுக்கு வீடியோ கலாச்சாரமும் அநாச்சாரமும் கொடி கட்டிப் பறக்கின்றது.
வீதியில் உலாவரும் வீடியோ கேமரா

கல்யாணம் வீட்டில் நடந்தாலும் முதன்முதலில் காட்சியாவது முச்சந்தியில் நிற்கும் பள்ளிவாசல் அல்லது தர்ஹா மற்றும் ஊரின் புகழைச் சொல்கின்ற புராதனச் சின்னங்கள் தான். இதன் பின் காலையில் கல்யாண வீட்டுக்குள் கேமரா நுழைந்து டீ காப்பி சப்ளை, டிபன், மணமகன் மணமகள் அலங்காரம் என்று மணமகனும் மணமகளும் மணவறையில் நுழைகின்ற வரை கேமரா பின் தொடர்ந்து சென்று ஒரு வழியாக்கி விட்டுத் தான் வெளியேறும்.
மணமகன் இல்லத்திலிருந்து துவங்கி, வீதி வீதியாகச் சென்று மணமகள் இல்லத்திற்கு அல்லது மண்டபத்திற்குச் சென்று திருமண ஒப்பந்தம் முடியும் வரையிலும் அத்தனையும் படமாக்கப்படுகின்றன.
குறிப்பாக இந்தக் கேமரா, பெண்கள் விருந்து பரிமாறும் போது, அங்க அசைவுகள் அனைத்தையும் கிளிக் செய்யத் தவறுவதில்லை. அதாவது அங்கிங்கு அசைந்து, வந்த விருந்தாளிகளை விழுந்தடித்துக் கவனிக்கும் பெண்களை கேமராமேன் குறி தவறாது பார்த்துக் கொண்டிருக்கின்றான். பற்றாக்குறைக்கு அவனுக்குப் பக்க துணையாக லைட் பிடிக்க இன்னொரு எடுபிடியாள் வேறு!
வேலை செய்கின்ற பெண்களுக்கு நிர்ப்பந்தமாக ஆடை விலகல் நடைபெறத் தான் செய்யும். ஆனால் இவையெல்லாம் ஒளிப்பதிவாகிக் கொண்டிருக்கின்றன என்பது தான் வேதனைக்குரிய விஷயமாகும்.
திருமணத்தில் கலந்து கொள்ளும் பெண்கள் முதலில் கேமரா மேன்களின் பார்வைகளுக்கு செழிக்க செழிக்க விருந்தாகின்றனர்.

Apr 20, 2016

குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு!


                                    

ற்போது உள்ள சூழ்நிலையில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற செயல்களில் இளைஞர்கள் அதிகம் ஈடுபட்டுக்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. சமீபத்தில் குமரி மாவட்டத்தில் காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் என்ற செய்தி ஊடகத்தில் பரவலாக காண நேரிட்டது. உள்ளே சென்று பார்த்தால் அதிர்ச்சி காத்திருக்கின்றது. முஸ்லிம் பெயர் தாங்கிய ஒரு மாணவி, மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு! இது ஏதோ தனிப்பட்ட செய்தியல்ல! ஊடகங்களில் இதுபோன்ற செய்திகளை பரவலாக காணமுடிகிறது. நம்மவர்கள், குறிப்பாக இளம் வயதினர்கள் இதுபோன்ற குற்றங்களில் அதிகம் ஈடுபடுவதற்கு முதல் குற்றவாளியாக அவர்களுடைய பெற்றோர்களை நிறுத்தலாம். சிறுவயது முதல் தாய்பாசத்தோடு சேர்த்து நற்போதனைகளையும் ஊட்டிவளர்க்கப்படாத குழந்தைகள் தான் பிற்காலங்களில் அவர்கள் பெரியவர்களான பிறகு இதுபோன்ற செயல்களில் அதிகம் ஈடுபடுகின்றனர். அவர்களுடைய வீடு, கல்வி, தொழில் சூழல்களில் மருந்துக்குக்கூட மார்க்கத்தை நாம் காணமுடியாது! கண்ணியமாக மார்க்க அடிப்படையில் வளர்க்கப்பட்ட குழந்தைகளால் தான் ஒரு சமுதாயத்தைச் சிறப்புறச் செய்யமுடியும்.




பெற்றோர்கள் தம்முடைய குழந்தைகளை மேல்நிலைப்பள்ளி / கல்லூரிகளில் சேர்த்துவிட்டு நம்முடைய வேலை முடிந்துவிட்டது என்றில்லாமல் அவர்களுடைய அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க வேண்டும். அப்படி கவனிக்கத்தவறிய


குழந்தைகள் தான் கூடாநட்பு, காதல் போன்ற மார்க்கத்திற்கு முரணான செயல்களில் ஈடுபட்டு சமுதாயச் சீரழிவை உண்டாக்குகின்றனர். கூடாநட்பு, காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கள் மற்றும் அசிங்கங்கள் அதிகரிப்பதற்கு இஸ்லாம் எந்த அளவிற்கு இவற்றைத் தடை செய்துள்ளது என்ற விழிப்புணர்வு பெற்றோர்களிடத்தில் இல்லாததே காரணமாகும்.



முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


‘விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதிஉள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும்! நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும்! மனம் ஏங்குகின்றது; இச்சைக் கொள்கின்றது; பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது அல்லது பொய்யாக்குகின்றது’ (புகாரி)


‘சிந்தனையும், தவறான பார்வையையும், அசிங்கமான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே காதல் என்ற பெயரில் நடந்துவரும் அசிங்கங்களுக்கு இஸ்லாத்தில் அறவே அனுமதி இல்லை!


மேற்கூறிய நபி (ஸல்) அவர்களின் அறிவுரையை பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு சிறுவயது முதல் கூறி கூடாநட்பு என்ற சீர்கேட்டில் தம் பிள்ளைகள் விழுந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும். ஆனால் எப்படி காதலிப்பது என்ற கேடுகெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்றபோது, அதைத் தடுக்க வேண்டிய பெற்றோர்களும் சேர்ந்துக்கொண்டு தான் அதைப் பார்க்கின்றனர். விளைவு, குழந்தைகள் பரீட்சையில் தேர்வு ஆகாமல் இருப்பது ஒருபுறமிருக்க, தம் பிள்ளைகள் யாருடனேனும் ஓடிப்போகும் போது அவமானம் தாங்காமல் தற்கொலைச் செய்து கொள்கின்ற அளவிற்கு சென்றுவிடுகின்றனர்.

Apr 19, 2016

குழந்தை பாடசாலை செல்ல அஞ்சுவது ஏன்?


பிள்ளைக்கு நான்கு வயதாகும்போது பாலர் பாடசாலைக்கும் ஐந்து வயதாகும் போது பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் ஏற்பாடு செய்வதை பார்க்கிறோம்.

பல பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லும்போது மிகுந்த சந்தோசத்துடன் செல்கின்றனர். காரணம் பாடசாலையில் விளையாட்டுடன் கூடிய படிப்பும், நண்பர்களின் அறிமுகமும் ஆரவாரத்துடனான செயற்பாடுகளுமேயாகும். குறிப்பாக ஆசிரியர் பிள்ளையுடன் அதிக கவனத்துடனும் பாச பிணைப்புடன் பழகும்போது பிள்ளை அந்த ஆசிரியையுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறது. பாடசாலைக்குச் செல்வதற்கும் அதிக விருப்பத்தை தெரிவிக்கிறது.

அதேவேளை இன்னும் சில பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதற்கும் பெற்றோரிடமிருந்து பிரிந்து போவதையும் கண்டு அஞ்சுகிறது. பயப்படுகிறது. அழுது புலம்புகிறது. இவ்வாறான பிள்ளைகளை சமாளித்து நிதானப்படுத்துவதில் பெற்றோர்÷ஆசிரியர் பெரும் பாடுபடுவர்.

இந்த பிள்ளைகளின் இவ்வாறான மனநிலைக்கு முக்கியமான இரு காரணங்களை மனோ வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.

முதலாவது: பிள்ளைக்கும் ஆசிரியருக்கும் நெருங்கிய தொடர் அறுந்து விடுவதால், பிள்ளை பாடசாலைக்குப் போக பயந்து அழுது அடம்பிடிக்கிறது. பிள்ளையிடம் காணப்படும் குறைகள் கோளாறுகளை ஆசிரியர் கண்டிப்புடன் தண்டிக்கும்போது ஆசிரியரின் சுபாவத்தைக் கண்டு பாடசாலைக்குப் போக அஞ்சுகிறது. பாடசாலையைப் பற்றி கதைத்தாலே பிள்ளை அஞ்சுவதற்கு இதுவே காரணம்.

எல்லாப் பிள்ளைகளும் அறிவிலும் புத்திக் கூர்மையிலும் ஒரே நிலையில் இருக்க மாட்டார்கள். ஒரு பிள்ளை புரிந்து கொள்ளும் முறையில் மற்றப் பிள்ளை புரிந்து கொள்ளாது. ஒரு பிள்ளை சரியாக புரிந்து கொள்ளும் அதேவேளை மற்றப் பிள்ளை பிழையாக விளங்கிக் கொள்ளும்.

பிள்ளைகளிடத்தில் இவ்வாறான கோளாறுகள் இருப்பதை ஆசிரியர் புரிந்து கொண்டுதான் கற்பிக்க வேண்டும். பிள்ளைகளின் மனோநிலையையும் கோளாறுகளையும் கவனிக்காமல்÷கண்டு கொள்ளாமல் ஆசிரியர் பிள்ளைகளுக்கு கற்பிக்க முனைந்தால் ஆசிரியருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருக்காது. அப்போது ஆசிரியர் பிள்ளையிடத்தில் கடினமாகவே நடந்து கொள்ள முனைவர். பிள்ளை ஆசிரியரை விட்டு விலகி -பாடசாலையை விட்டு தூரமாகவே விரும்பும். நாளடைவில் அதுவே ஒரு அச்ச நோயாக மாறும். அதைத்தான் பாடசாலை அச்சநோய் எனக் குறிப்பிடப்படுகிறது.

Translate